Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமிர்த நீர் நிலைகள் இயக்கத்திற்குப் பிரதமர் பாராட்டு


அமிர்த நீர் நிலை இயக்கத்திற்குப் பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடு முழுவதும் விரைவாகக் கட்டப்படும் அமிர்த நீர்நிலைகள் அமிர்த காலத்திற்கான நமது உறுதிப்பாடுகளில் புதிய சக்தியை நிரப்ப உள்ளது.

மத்திய நீர் வளத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமிர்த நீர்நிலைகள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆகஸ்ட் 15, 2023-க்குள் 50 ஆயிரம் அமிர்த நீர்நிலைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர்  கூறியிருப்பதாவது; “வாழ்த்துக்கள் பல! நாடு முழுவதும்  விரைவாகக் கட்டப்படும் அமிர்த நீர்நிலைகள், அமிர்த காலத்திற்கான நமது உறுதிப்பாடுகளில் புதிய சக்தியை உருவாக்க உள்ளது.”

***

(Release ID: 1913727)

AP/IR/AG/RR