‘எனது மண் எனது தேசம்’ இயக்கம், அமிர்தக் காலத்தின் அடுத்த 25 ஆண்டுகளில் ஐந்து உறுதி மொழிகளை நிறைவேற்றும் என்றும், நமது தியாகிகளின் கனவுகளை நிறைவேற்றும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
எனது மண் எனது தேசம் இயக்கம் குறித்து மத்திய கலாச்சார அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி எழுதிய கட்டுரை குறித்து கருத்து தெரிவித்த திரு மோடி, தில்லியில் இந்தப் இயக்கத்தின் கீழ் கட்டப்பட்ட அமிர்தத் தோட்டம், எப்போதும் நமது இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் என்று கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“வளர்ச்சியடைந்த இந்தியாவின் கனவை நனவாக்கும் வகையில், ‘எனது மண் எனது தேசம்‘ இயக்கத்திலிருந்து உருவாக்கப்படும் ‘அமிர்தத் தோட்டம்‘, அமிர்தக் காலத்தின் அடுத்த 25 ஆண்டுகளில் ஐந்து உறுதிமொழிகளை நிறைவேற்றும், நமது தியாகிகளின் கனவுகளை நனவாக்க இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும், என்று மத்திய அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி @kishanreddybjp எழுதியுள்ளார்.”
******
ANU/SMB/BR/KPG
केंद्रीय मंत्री श्री @kishanreddybjp लिखते हैं कि विकसित भारत के सपने को साकार करने में 'मेरी माटी-मेरा देश' अभियान से बनने वाली 'अमृत वाटिका' अमृतकाल के आगामी 25 वर्षों में पंच-प्रणों की पूर्ति करेगी और हमारे बलिदानियों के सपनों को साकार करने के लिए युवा पीढ़ी को प्रेरित भी… https://t.co/bp35aF2QbH
— PMO India (@PMOIndia) October 30, 2023