Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்


இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

டாக்டர் கலாமின் பணிவான மனப்பான்மையையும், அறிவியல் திறமையையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். நாட்டுக்கு அவர் அளித்த ஒப்பற்ற பங்களிப்பு, என்றென்றும் நினைவில் கொள்ளப்படும் என்று திரு மோடி கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது ஒப்பற்ற பங்களிப்பு, என்றென்றும் பயபக்தியுடன் நினைவுகூரப்படும்.”

***

ANU/AD/RB/DL