Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அபேயில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் இந்திய ராணுவம் தனது மிகப்பெரிய பெண் படைப்பிரிவை அனுப்பியதற்கு பிரதமர் பாராட்டு


அபேயுவுக்கான ஐநா இடைக்கால அமைதி காக்கும் படை (யுனிஸ்ஃபா)யில் பணியாற்ற  இந்திய ராணுவம் தனது மிகப்பெரிய பெண் படைப்பிரிவை அனுப்பியுள்ளதற்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் இந்தியா தீவிரமாக பங்கேற்கும் பாரம்பரியம் உள்ளது என்றும் திரு மோடி கூறியுள்ளார்.

 இந்திய ராணுவத்தின் ஏடிஜி வெளியிட்டிருந்த  ட்வீட்டர் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

“இதைப் பார்க்க பெருமையாக இருக்கிறது.

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளில் இந்தியா தீவிரமாக பங்கேற்ற பாரம்பரியம் உள்ளது. எங்கள் மகளிர் சக்தியின் பங்கேற்பு இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது.’’

***

PKV/RJ