Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அந்நிய முதலீடு வளர்ச்சி வாரியத்தை கலைக்க அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, அந்நிய முதலீடு வளர்ச்சி வாரியத்தை படிப்படியாக கலைக்க ஒப்புதல் அளித்தது. இந்த முடிவு, முதலீடு வாரியத்தை முழுமையாக ரத்து செய்து, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகள் அந்நிய முதலீடுகளை அரசு ஒப்புதலுக்கு நேரடியாக அனுப்ப வகை செய்யும்.

இனி வரும் காலத்தில் அந்நிய முதலீட்டுக் கொள்கை அடிப்படையில் மற்றும் FEMA சட்டத்தின் கீழ் வரக் கூடிய அந்நிய முதலீடு தொடர்பான கருத்துருக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை மற்றும் / அமைச்சகங்களால், தொழிற்கொள்கை மற்றும் தொழில் வளர்ச்சித் துறை மற்றும் வணிக அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து செயல்படுத்தப்பட வேண்டும். வணிக அமைச்சகம் அந்நிய முதலீடு விண்ணப்பங்களை அந்நிய முதலீட்டுக் கொள்கையின் அடிப்படையில் எப்படி பரிசீலிப்பது, எந்த வகையான நடவடிக்கைகளை எடுப்பது என்பன குறித்து வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிடும்.

இதன் காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். அதனால் அந்நிய முதலீடு அதிகரிக்கும். தொழில் நடத்த ஏதுவான சூழல் உருவாகி, அரசின் கொள்கையான நிறைந்த நிர்வாகம் மற்றும் குறைந்த அரசு என்ற நோக்கம் நிறைவேற்றப்படும்.

பின்னணி :

25 மே 2017 அன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அந்நிய முதலீடு வளர்ச்சி வாரியத்தை ரத்து செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. இது நாள் வரை அந்நிய முதலீட்டு விண்ணப்பங்கள், அந்நிய முதலீட்டு வளர்ச்சி வாரியம் மற்றும், பொருளாதார விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம், மற்றும் இதர துறைகளின் செயலாளர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டு வந்தது. அமைச்சரவை முடிவுக்கு பிறகு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களால் தனித்தனியாக கையாளப்படும்.