அந்தமான், நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள் தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்காக அளித்துள்ள பங்களிப்பைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டினார்.
மத்திய அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத்தின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், ஒரே ஆண்டில் ஓடிஎஃப்+ கிராமங்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். “அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ மக்கள் குறித்து பெருமையடைகிறேன். தூய்மையான இந்தியாவை உருவாக்க அம்மக்கள் தங்களைச் சிறப்பாக அர்ப்பணித்துள்ளனர்” எனப் பிரதமர் பாராட்டியுள்ளார்.
**********
AD/CR/DL
Proud of the people of Andaman and Nicobar islands, Lakshadweep, Dadra and Nagar Haveli, as well as Daman and Diu. They have shown remarkable commitment to build a clean India. https://t.co/NipUA1wnvC
— Narendra Modi (@narendramodi) April 1, 2023