Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அடல் புத்தாக்க இயக்கத்தைத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில்  நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்  கூட்டத்தில், 2028 மார்ச் 31 வரை 2,750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிதி ஆயோக்கின் கீழ் அதன் முன்னோடி திட்டமான அடல்  புத்தாக்க இயக்கத்தைத் தொடர ஒப்புதல்  அளிக்கப்பட்டது.

அடல்  புத்தாக்க இயக்கம் 2.0 என்பது  வளர்ந்த பாரத்தை நோக்கிய ஒரு  முயற்சியாகும், இது ஏற்கனவே  உள்ள இந்தியாவின் துடிப்பான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு  சூழலியலை விரிவுபடுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவில் ஒரு வலுவான புத்தாக்க கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு  சூழலியலை வளர்ப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை இந்த ஒப்புதல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா 39 வது இடத்தில் இருப்பதாலும், உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் நிறுவன சூழலியலின்  தாயகமாகவும் உள்ள நிலையில், அடல் புத்தாக்க இயக்கத்தின் அடுத்த கட்டம் இந்தியாவின் உலகளாவிய போட்டித்தன்மையை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் தொடர்ச்சி, சிறந்த வேலைகள், புதுமையான தயாரிப்புகள் மற்றும் துறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சேவைகளை உருவாக்க நேரடியாக பங்களிக்கும்.

அடல் டிங்கரிங் ஆய்வகங்கள்  மற்றும் அடல் அடைகாப்பு மையங்கள் போன்ற  முதல் கட்டத்தின் சாதனைகளை உருவாக்கும் அதே வேளையில்திட்டத்தின் இரண்டாவது கட்டம், இயக்கத்தின் அணுகுமுறையில் ஒரு தரமான மாற்றத்தைக் குறிக்கிறது.

அடல் புத்தாக்க இயக்கம் 2.0, இந்தியாவின் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு சூழலியலை மூன்று வழிகளில் வலுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது: (அ) உள்ளீட்டை அதிகரிப்பதன் மூலம் (அதாவது, அதிக கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை உருவாக்குதல்),  (ஆ) வெற்றி விகிதம் அல்லது செயல்திறனைமேம்படுத்துவதன் மூலம் (அதாவது, அதிக புத்தொழில் நிறுவனங்கள் வெற்றிபெற உதவுதல்) மற்றும் (இ) பயன்களின்’ தரத்தை மேம்படுத்துவதன் மூலம் (அதாவது, சிறந்த வேலைகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல்).

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077101

 

***

(Release ID:  2077101)
TS/BR/RR