அன்னை இந்தியா வாழ்க! அன்னை இந்தியாவைப்போற்றுவோம்!
அசாமின் முதல்வர் திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, மத்திய அமைச்சர் திரு ராமேஷ்வர் டெல்ஜி அவர்களே, அசாம் அரசின் அமைச்சர் டாக்டர் ஹேமந்த் பிஸ்வாஸ் ராமா அவர்களே, அவைத்தலைவர் திரு ரஞ்சித் குமார் தாஸ் அவர்களே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அசாமில் உள்ள என்னுடைய அருமை சகோதர சகோதரிகளே.
ஆங்கிலப் புத்தாண்டு, பொகாலி பிஹு ஆகியவற்றையொட்டி அசாம் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இனிவரும் நாட்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், வளத்தையும் தரும் நாட்களாக அமையட்டும்.
நண்பர்களே,
அசாம் மக்களின் ஆசிகளுக்குப் பாத்திரமானவனாக நான் திகழ்வது எனக்குப் பெருமையளிக்கிறது. உங்களுடைய அன்பு என்னை மீண்டும் மீண்டும் அசாம் பால் ஈர்க்கிறது. பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் அசாம் மக்களுடன் பேசிப் பழகும் பல வாய்ப்புகள் எனக்குக் கிடைத்துள்ளன.
சென்ற ஆண்டு போடோ ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு நடத்தப்பட்ட விழாவில் நான் பங்கேற்றேன். இன்று அதே போன்று அஸ்ஸாம் மக்களுக்குப் பெருமையும், பாதுகாப்பும் அளிக்கக் கூடிய மற்றொரு பெரிய நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன். உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பதற்காக அசாம் அரசு பாராட்டத்தக்க பணி புரிந்திருக்கிறது. அசாமில் குடியிருக்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நில உரிமை வழங்கப்பட்டுள்ளது.
சகோதர சகோதரிகளே,
சுயமரியாதை, விடுதலை, பாதுகாப்பு ஆகிய மூன்றும் இணையும் தருணமாக இது உள்ளது. முதலாவதாக, அசாம் மக்கள் தங்களுக்குச் சொந்தமான நிலத்திற்கு, சட்டரீதியான பாதுகாப்பு பெறுகிறார்கள். இரண்டாவதாக, ஜெரெங்கா பீடபூமி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சிவசாகர் இந்த சாதனையைப் புரிந்துள்ளது. அசாமின் எதிர்காலத்துக்காக மகாசக்தி ஜோய்மதியின் தியாகத்திற்குச் சான்றாக இது உள்ளது. அவரது வீரத்திற்கு நான் தலை வணங்குகிறேன். நாட்டின் முக்கியமான 5 தொல்லியல் தலங்களுள் ஒன்றாக சிவசாகரை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
சகோதர சகோதரிகளே,
நமது அன்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்த ஆண்டு விழா கொண்டாட்டங்களை நாடு கொண்டாடி வருகிறது. இந்த நாள், இனி “பராக்கிரம்திவஸ்”பராக்கிரம நாள் என்று கொண்டாடப்படும். நேதாஜியின் சுயமரியாதையும், அன்னை இந்தியாவின் விடுதலைக்காக அவரின் அர்ப்பணிப்பு உணர்வும் நம்மை ஊக்கப்படுத்துகின்றன. நம் நாட்டின் உறுதிப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காக நாம் பாடுபட வேண்டும். நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகப் பாடுபட வேண்டும்.
நண்பர்களே,
நாம் நமது மண்ணை வெறும் புல், மண், கல் என்று பார்க்கும் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. நமது மண்ணை நமது அன்னையாகவே நாம் மதிக்கிறோம். “பூமித்தாயே, உன் காலடியில் எனக்கு ஒரு இடம் தா.. நீ இல்லாமல் ஒரு உழவன் என்ன செய்துவிட முடியும்? மண் இல்லா விட்டால் அவன் நிர்க்கதியாக இருப்பான்” என்று அசாமின் மகனான பாரதரத்னா பூபென்ஹசாரிக்கா கூறியுள்ளார்.
நண்பர்களே,
விடுதலையடைந்து பல்லாண்டு காலத்திற்குப் பிறகும், அசாமில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் அவர்களுடைய நிலத்திற்கு சட்ட ரீதியான உரிமை பெற முடியாத நிலை இருந்தது என்பது மிகவும் வருந்தத்தக்கது. நமது அரசு பதவியேற்ற போது 6 லட்சம் குடும்பங்களுக்குமேல், தங்களது நிலங்களுக்கு சட்டரீதியான ஆவணங்கள் இல்லாமல் இருந்தனர். முந்தைய அரசுகள் இதற்கு முன்னுரிமை அளிக்கவில்லை. ஆனால் சர்பானந்த சோனோவால் தலைமையிலான தற்போதைய அரசு, இதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. தற்போது 2.25 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிலக்குத்தகை கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால்பயன்பெறும்.
அசாமில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்களது நிலத்திற்கான சட்ட ரீதியான உரிமைகளைப் பெறவேண்டும் என்பதே நமது குறிக்கோள்.
சகோதர சகோதரிகளே,
நிலக் குத்தகை உரிமை கிடைத்தது மட்டுமல்லாமல், பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் இது வகை செய்துள்ளது. இதுவரை இம்மக்களுக்குக் கிடைக்காமலிருந்த மத்திய, மாநில அரசுகளின் இதர திட்டங்களின் கீழ் இவர்கள் பயன்பெற முடியும்.
பிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் பயனடைந்த பல லட்சக்கணக்கான மக்களைப் போல இவர்களும், நேரடியாக வங்கிக் கணக்கில் பண உதவி பெறலாம். கிசான் கிரெடிட் கார்டு, (உழவர் கடன் அட்டை), பயிர்க் காப்பீட்டுத் திட்டம் போன்ற பல்வேறுதிட்டங்களின் கீழும் பயன் பெறலாம். தொழில் மேற்கொள்ள வங்கிக் கடனுதவியும் பெறலாம்.
சகோதர சகோதரிகளே,
அசாமில் உள்ள 70 சிறிய மற்றும் பெரிய பழங்குடியின மக்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கவும், அவர்களது துரித வளர்ச்சிக்கும், நமது அரசு உறுதி பூண்டுள்ளது. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் அரசு நடைபெற்ற போதும், தற்போது கடந்த சில ஆண்டுகளாக என் டி ஏ அரசு உள்ளபோதும், அசாமின் கலாச்சாரம், சுயமரியாதை, பாதுகாப்பு ஆகியவை, நமது முன்னுரிமையாக இருந்துள்ளது. அசாம் மொழியையும், இலக்கியத்தையும் வளர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அசாமில் உள்ள ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள பெரிய ஆளுமைகளின் பணிகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீமந்த் சங்கர்தேவ் அவர்களின் தத்துவம், மனித குலத்திற்கு மிகப்பெரிய சொத்தாகும். பட்டத்ரவஸ்த்ரா போன்ற நூல்களுக்கு என்ன நிலை ஏற்பட்டது என்பது அசாம் மக்கள் அறியாததல்ல. இந்நாட்டில் அரிய பொக்கிஷங்களைப் பாதுகாப்பதற்கு அசாம் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. காசிரங்கா தேசிய பூங்காவை ஆக்கிரமிப்புகள் எதுவுமற்ற பூங்காவாக மாற்றி அதை அதிசயிக்கத்தக்க ஒன்றாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சகோதர சகோதரிகளே,
சுயசார்பு இந்தியா மலர்வதற்கு, வடகிழக்குப் பகுதி மற்றும் அசாம் மாநிலத்தின் துரிதமான வளர்ச்சி மிகவும் முக்கியமாகும். அசாம் மக்களின் தன்னம்பிக்கையின் மூலமே இது சாத்தியப்படும். குடும்பத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளும், மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். 1.75 கோடி ஏழை மக்களுக்கு ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா நெருக்கடி காலத்தின்போது அசாம் மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான உழவர்களுக்கு வங்கிக் கணக்குகளில் ஆயிரக்கணக்கான ரூபாய் பண உதவி செய்ய முடிந்தது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் குடிமக்கள் இலவச சிகிச்சை பெறும் பயனாளிகளாக உள்ளனர். இது அசாம் மக்கள் தொகையில் 40 சதவீதமாகும். கடந்த ஆறு ஆண்டுகளில் அசாமில் கழிப்பறை வசதி 38 சதவிகிதத்திலிருந்து 100 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மின்சார வசதி 100 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் சென்ற ஒன்றரை வருட காலத்தில் இரண்டரை லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் அசாமில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலமான குடிநீர் வழங்க மத்திய, மாநில அரசுகள் அயராது உழைக்கின்றன.
சகோதர சகோதரிகளே,
இந்த அனைத்து திட்டங்களிலிருந்தும் பயன் பெறுபவர்கள் நமது சகோதரிகளும், நமது பெண் குழந்தைகளும் ஆவர். உஜ்வாலா திட்டத்தின் கீழும் அவர்கள் பயனடைந்துள்ளனர்.
35 லட்சம் ஏழை சகோதரிகளுக்கு சமையல் எரிவாயு கிடைத்துள்ளது. இதில் 4 லட்சம் குடும்பங்கள் ஷெட்யூல்ட் வகுப்பு, ஷெட்யூல்ட் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவை. சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் பல இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.
நண்பர்களே,
அனைவருடனும் அனைவரின் வளர்ச்சிக்காகவும்… அசாமின் ஒவ்வொரு பிரிவும், வளர்ச்சி பெற ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேயிலை பயிரிடும் பழங்குடியின மக்களுக்கு கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. நிலங்களுக்கான சட்ட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு கல்வி புகட்டப்படுகிறது. சுகாதார வசதி செய்து தரப்படுகிறது. தேயிலைத்தோட்ட தொழிலாளர் தலைவர் சந்தோஷ் டோபானோ உட்பட பெரிய தலைவர்களுக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மாநில அரசு தலைவர்களை, தேயிலைப் பழங்குடியின மக்களைக் கௌரவித்து வருகிறது.
நண்பர்களே,
அசாமின் ஒவ்வொரு பகுதியிலுமுள்ள ஒவ்வொரு பழங்குடியினத்தையும் ஒருங்கிணைக்கும் கொள்கையின் மூலம் அசாம் அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டுள்ளது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த போடோஒப்பந்தத்திற்குப் பிறகு, நில பிரதேச கவுன்சிலில் முதலாவது தேர்தல் நடைபெற்றது. போடோ பிரதேச கவுன்சில், வளர்ச்சிக்கான புதிய பாதை வகுக்கும் என்று நான் நம்புகிறேன்.
சகோதர சகோதரிகளே,
அசாமின் தேவைகளைக் கண்டறிந்து, அரசு, ஒவ்வொரு முக்கிய திட்டத்திலும் விரைந்து செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு பகுதியையும், அசாமையும் இணைப்பதற்காகவும், நவீனப்படுத்துவதற்காகவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் கடந்த 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அசாமின் ஏ சி டி கொள்கை, கிழக்காசிய நாடுகளுடன் நமக்குள்ள தொடர்பை அதிகரித்து வருகிறது. அசாமின் கிராமங்களில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான கிலோமீட்டர் தொலைவிற்கு, பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. டாக்டர் பூபேன் ஹசாரிகா சேது, போகிபீல் பாலம், போன்ற பல பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றின் மூலம் அசாமிற்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் எல்லைப் பகுதிகளுக்கும் இடையேயான இணைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியான்மர், ஆகியவற்றை நீர்வழிப் போக்குவரத்து மூலம் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நண்பர்களே,
ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து அசாமில் அதிகரிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து தொழில் துறைக்கும் வேலைவாய்ப்புக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
கோபிநாத் பொர்தோலாய்சர்வதேச விமான நிலையம் நவீனப் படுத்தப் பட்டது; கொக்ராஜ் ஹாரில் உள்ள விமான நிலையம் மாற்றியமைக்கப்பட்டது; பொன் காய் கிராமத்தில் பல்முனைப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டது; போன்றவற்றின் மூலம் அசாமின் தொழில் வளர்ச்சி புதிய உத்வேகம் பெற்றுள்ளது.
சகோதர சகோதரிகளே,
இன்று நாடு வாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அசாமில் எண்ணெய் எரிவாயுத் துறையில் 40,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. குவஹாத்தி பரோணி கேஸ் பைப் லைன் போன்ற பெரிய திட்டங்கள் மூலமாக அசாமில் வேலைவாய்ப்பு பெருகும். அசாமில் அமைக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ரிஃபைனரி வசதி போன்றவற்றின் மூலமாக எத்தனால் போன்ற உயிரி எரிபொருள் தயாரிக்கும் முக்கிய மாநிலமாக அசாம்திகழும்.
சகோதர சகோதரிகளே,
சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் முக்கியதலமாகவும் அசாம் வளர்ந்து வருகிறது. எய்ம்ஸ் மற்றும் இந்திய வேளாண் ஆய்வுக் கழகம் ஆகியவை ஏற்படுத்தப்படவிருப்பதையடுத்து, இளைஞர்களுக்கு நவீன கல்விக்கான வாய்ப்புகள் பெருகும். கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது, அசாம், அதை எதிர்கொண்ட விதம் பாராட்டத் தகுந்தது. அசாம் மக்களுக்கும், சோனோவால் அவர்களுக்கும், ஹேமந்த் அவர்களுக்கும், அவர்களுடைய குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள். அசாம், தடுப்பு மருந்து செலுத்தும் இயக்கத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொருவரும் 2 டோஸ் மருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நண்பர்களே,
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளுக்கு உலகம் முழுவதிலும் தேவை உள்ளது. இந்தியாவில் பல லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. நாம் தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும். தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இறுதியாக, தங்கள் நிலங்களுக்கு சட்ட உரிமைகள் பெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடனும், செல்வச் செழிப்புக்கான பாதையில் செல்லவும், எனது வாழ்த்துக்கள். நன்றிகள் பற்பல.
அன்னை இந்தியா நீடூழி வாழ்க! வளர்க!
நன்றி
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழியாக்க சாராம்சம். அவர் ஹிந்தி மொழியில் உரையாற்றினார்.
**********************
Addressing a public meeting in Sivasagar in Assam. https://t.co/xKH3iwYOLf
— Narendra Modi (@narendramodi) January 23, 2021
Distribution of land pattas/allotment certificates at the large public meeting in Sivasagar was a historic occasion. This will ensure a life of dignity for many and protect Assam’s unique culture. pic.twitter.com/Y3vyvRfFfB
— Narendra Modi (@narendramodi) January 23, 2021
To build an Aatmanirbhar Bharat, we have to focus on the rapid development of the Northeast. pic.twitter.com/Ym3fE5PIt5
— Narendra Modi (@narendramodi) January 23, 2021
We are working towards Assam’s development based on the requirements and aspirations of the state’s dynamic people. pic.twitter.com/fFiOBmWDAI
— Narendra Modi (@narendramodi) January 23, 2021
सबका साथ सबका विकास, सबका विश्वास के मंत्र पर चल रही हमारी सरकार असम के हर हिस्से में, हर वर्ग को तेजी से विकास का लाभ पहुंचाने में जुटी है।
— Narendra Modi (@narendramodi) January 23, 2021
पहले चाय जनजाति की क्या स्थिति हो गई थी, ये सब जानते हैं।
अब जाकर चाय जनजाति को घर और शौचालय जैसी मूल सुविधाओं से जोड़ा जा रहा है। pic.twitter.com/20LoU43bga