நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடி உரையாற்றினார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குவஹாத்தியைச் சேர்ந்த இல்லத்தரசி திருமதி கல்யாணி ராஜ்போங்ஷி, சுய உதவிக் குழுவை நடத்தி, ஒரு பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் பிரிவை உருவாக்கியுள்ளார். கல்யாணியின் வெற்றிக் கதையைக் கேட்ட பிரதமர், கல்யாணியிடம் அவரது பெயரே மக்கள் நலனை (கல்யாண்) குறிக்கிறது என்று கூறினார்.
தமது நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து கூறிய அவர் முதலில் 2000 ரூபாயில் காளான் தொழிலைத் தொடங்கியதாகவும், பின்னர் அசாம் அரசு வழங்கிய 15,000 ரூபாயைக் கொண்டு, உணவு பதப்படுத்தும் பிரிவைத் திறந்ததாகவும் தெரிவித்தார். இதன் பின்னர், 200 பெண்களைக் கொண்டு ஏரியா லெவல் ஃபெடரேஷன் என்ற அமைப்பை உருவாக்கியதாகத் தெரிவித்தார். பிரதமரின் நுண் உணவு பதப்படுத்தும் நிறுவன முறைப்படுத்தல் திட்டத்தின் கீழ் தமக்கு உதவி கிடைத்ததாக அவர் கூறினார். பிரதமரின் ஸ்வநிதி திட்டம் பற்றி ஆயிரம் சாலையோர வியாபாரிகளுக்கு விளக்கியதற்காக அவருக்கு “அசாம் கவுரவ்” விருது வழங்கப்பட்டுள்ளது.
‘மோடியின் உத்தரவாத வாகனம் என்ற நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை வாகனத்தை வரவேற்பதில் அப்பகுதி பெண்களை வழிநடத்தி, அவர்களுக்கு அரசுத் திட்டங்கள் பற்றி விளக்கி ஊக்குவித்துள்ளார். தொழில் முனைவு மற்றும் சமூக சேவை மனப்பான்மையை தொடருமாறு அவரிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார். “ஒரு பெண் தன்னிறைவு அடையும் போது, சமூகம் பெரிதும் பயனடைகிறது என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு”, என்று அவரிடம் பிரதமர் கூறினார்.
*******
ANU/PLM/DL