Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அகமதாபாத் சர்வதேச மலர் கண்காட்சியின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்


 

பிரதமர் திரு நரேந்திர மோடி அகமதாபாத் சர்வதேச மலர் கண்காட்சியின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்த நிகழ்ச்சி வளர்ந்து வருவதைக் கண்டதால், இந்த நிகழ்ச்சியுடன் எனக்கு வலுவான இணைப்பு உள்ளது என்று திரு மோடி கூறியுள்ளார். இத்தகைய நிகழ்ச்சிகள் இயற்கையின் அழகைக் கொண்டாடுகின்றன மற்றும் நிலைத்தன்மை பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கின்றன என்று திரு மோடி மேலும் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

“அமதாபாத் சர்வதேச மலர் கண்காட்சியில் இருந்து சில காட்சிகள். நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்த நிகழ்ச்சி வளர்ந்து வருவதைப் பார்த்ததால், இந்த நிகழ்ச்சியுடன் எனக்கு வலுவான இணைப்பு உள்ளது. இத்தகைய நிகழ்ச்சிகள் இயற்கையின் அழகைக் கொண்டாடுவதுடன், நிலைத்தன்மை பற்றிய விழிப்புணர்வைத் தூண்டுகிறது.  உள்ளூர் விவசாயிகள், தோட்டக்காரர்கள் மற்றும் ஆர்வலர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு தளத்தை அவை வழங்குகின்றன.

அகமதாபாத் சர்வதேச மலர் கண்காட்சியில் இருந்து மேலும் சில காட்சிகள்…’’

***

PKV/KV