Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அகமதாபாத்தில் பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்சவின் துவக்க விழாவில் பிரதமரின் உரை

அகமதாபாத்தில் பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்சவின் துவக்க விழாவில் பிரதமரின் உரை


ஜெய் ஸ்வாமிநாராயன்! ஜெய் ஸ்வாமிநாராயன்!

பரம் பூஜ்ஜிய மகாந்த் சுவாமி அவர்களே, மதிப்பிற்குரிய துறவிகளே, ஆளுநர் அவர்களே, முதல்வர் அவர்களே மற்றும் ‘சத்சங்’ குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களே! இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தததை எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள மதிப்பிற்குரிய துறவிகள் அனைவரின் பாதங்களையும் இத்தருணத்தில் நான் வணங்குகிறேன். போற்றுதலுக்குரிய மகாந்த் சுவாமி அவர்களின் ஆசியுடன் இத்தகைய பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்துவது, நாட்டின் மற்றும் சர்வதேச மக்களின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமல்லாமல் வரும் தலைமுறையினரையும் ஊக்கப்படுத்தும்.

ஜனவரி 15 வரை எனது தந்தைக்கு ஒப்பான பூஜ்ஜிய பிரமுக் சுவாமி அவர்களுக்கு உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் மரியாதையை செலுத்தவிருக்கிறார்கள்.  பிரமுக் சுவாமி அவர்களின் நூற்றாண்டு, ஐக்கிய நாடுகளிலும் கொண்டாடப்பட்டது என்பதை பெரும்பாலோனோர் அறிவீர்கள்.  துறவிகளின் கலாச்சாரத்தால் நமக்கு எடுத்துரைக்கப்பட்ட அவரது எண்ணங்கள் என்றும் நிலைத்து நிற்கக் கூடியது என்பதற்கு இது ஒரு உதாரணம்.  துறவிகளின் கலாச்சாரம் இனம், பண்பாடு மற்றும் சிந்தனைகளை மட்டுமே பரப்பவில்லை. ஒட்டுமொத்த உலகை இணைப்பதற்காக ‘வசுதைவ குடும்பகம்’ என்ற உணர்வையும் அவர்கள் வளர்த்தார்கள். பிரமுக் சுவாமி அவர்கள் ஒரு சமூக சீர்திருத்தவாதி. நெடுங்காலமாக நமது சமூகத்தில் நிலவி வந்த ஏற்றத்தாழ்வு போன்ற  அவலங்களை அவர் களைந்தார். பிறருக்கு உதவ வேண்டும். பிறருக்காக உழைக்க வேண்டும் மற்றும் பிறரது நலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்று பூஜ்ஜிய பிரமுக் சுவாமி அவர்கள் எப்போதுமே அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.

இன்று பிரமுக் சுவாமி அவர்களின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நமது புதிய தலைமுறைக்கு எழுச்சியூட்டுவதோடு அவர்களிடையே ஆர்வத்தையும் தூண்டும். அவரது போதனைகள் எளிதான வார்த்தைகளில் இயல்பு வாழ்க்கை குறித்த பயனுள்ள தகவல்கள் அடங்கியதாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்!

ஜெய் ஸ்வாமிநாராயன்!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும்.பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

****

(Release ID:1883600)