Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அகமதாபாத்தில் சபர்மதி ஆற்று அருகில் நடைபெற்ற காதி உத்சவத்தில் பிரதமர் பங்கேற்பு

அகமதாபாத்தில்  சபர்மதி ஆற்று அருகில் நடைபெற்ற காதி உத்சவத்தில் பிரதமர் பங்கேற்பு


அகமதாபாத்தில்  சபர்மதி ஆற்று அருகில் நடைபெற்ற காதி உத்சவத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார். குஜராத் முதல்வர் திரு புபேந்திர பட்டேல், நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி ஆர். பாட்டில், மாநில அமைச்சர்கள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சக்கரத்துடனான தனிப்பட்ட தொடர்பை நினைவு கூர்ந்துடன், இளம் பருவத்தில் தமது தாய் சக்கரத்தைப் பயன்படுத்திய நிகழ்வுகளையும் குறிப்பிட்டார். “சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளான நிலையில் 7500 சகோதரிகளும் மகள்களும் இணைந்து சக்கரத்தில் நூல் லூற்ப செய்து சரித்திரம் படைத்துள்ளதால் சபர்மதிகர் இன்று புண்ணியமாக மாறியுள்ளது”, என்று அவர் கூறினார். 

இன்று அவர் திறந்து வைத்த அடல் பாலத்தின் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பின் சிறந்த செயல்திறனை பிரதமர் குறிப்பிட்டுப் பேசினார். குஜராத் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு, மதிக்கப்பட்ட திரு அடல் பிகாரி வாஜ்பாய்க்கு இந்த பாலத்தை அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்தார். “அடல் பாலம், சபர்மதி ஆற்றின் இரு கறைகளையும் இணைப்பது மட்டுமல்லாமல், வடிவமைப்பு மற்றும் புதுமைகளின் முன்னோடியாகவும் திகழ்கிறது. குஜராத்தின் புகழ்பெற்ற காத்தாடி திருவிழாவில் அதன் வடிவமைப்பிற்கும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது”, என்றார் அவர். இல்லந்தோறும் மூவர்ண கொடி ஏற்றும் இயக்கம் இந்தியாவில் உற்சாகமாக கடைபிடிக்கப்பட்டதை பிரதமர் திரு மோடி சுட்டிக் காட்டினார். 

“சுதந்திர இயக்கத்தில் காதியின் இழை ஒன்று ஆற்றல் சக்தியாக செயல்பட்டு, அடிமைத்தனத்தின் சங்கிலியை உடைத்து எறிந்ததற்கு வரலாறு சான்று படைக்கிறது”, என்று பிரதமர் கூறினார். காதியின் அதே இழை, வளர்ந்த இந்தியா என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும், அதன் மூலம் தற்சார்பு இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவதற்கும் உத்வேகமாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார். “காதி போன்ற பாரம்பரிய ஆற்றல் சக்தி நம்மை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும்”, என்று அவர் கூறினார். இந்த காதி உத்சவம், சுதந்திர இயக்கத்தின் உணர்வையும் வரலாற்றையும் புதுப்பிக்கும் முயற்சியாகவும், புதிய இந்தியாவின் தீர்மானங்களை அடைவதற்கான உத்வேகமாகவும் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஸ்வராஜ் தொடரை பார்க்குமாறு மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.  சுதந்திரத்திற்காக நமது மூதாதையர்கள் வெளிப்படுத்திய தியாகங்களைப் புரிந்து கொள்வதற்கு அனைவரும் குடும்பத்துடன் இதனைக் காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

*********