Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அகமதாபாத்தில் உள்ள ஏ.எம்.ஏ.வில் ஜென் தோட்டம் மற்றும் கைசன் அகாடமியை பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்


 

பிரதமர் திரு நரேந்திர மோடி 2021 ஜூன் 27, 2021 காலை 11.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள ஏ.எம்.ஏ.வில் ஜென் தோட்டம் மற்றும் கைசன் அகாடமியைத் திறந்து வைக்க உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,நாளை, ஜூன் 27, அகமதாபாத்தில் உள்ள ஏ.எம்.ஏ.வில் ஜென் தோட்டம் மற்றும் கைசன் அகாடமியைத் திறந்து வைக்க உள்ளேன். இது இந்தியாவிற்கும், ஜப்பானுக்கும் இடையிலான நெருங்கிய பிணைப்பை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வு” என்று தெரிவித்துள்ளார்.