Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அகமதாபாதில் பவ்லா-பகோடாரா நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள பவ்லா-பகோடாரா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் ட்விட்டர் செய்தியில்  கூறியிருப்பதாவது;

அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள பவ்லா – பகோடாரா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு   பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்: பிரதமர் @narendramodi

***

ANU/AP/SMB/AG/KPG