Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஃபிரான்ஸ் செனட் சபை தலைவருடன் பிரதமர் சந்திப்பு

ஃபிரான்ஸ் செனட் சபை தலைவருடன் பிரதமர் சந்திப்பு


ஃபிரான்ஸ் செனட் சபை தலைவர் மேதகு திரு ஜெரார்டு லார்செரை பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 13, 2023 அன்று சந்தித்தார்.

இந்திய – ஃபிரான்ஸ் கூட்டுமுயற்சியின் அடித்தளமாக அமைந்துள்ள ‘ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்தின்’ நமது பகிரப்பட்ட மாண்புகளின் முக்கியத்துவத்தை பிரதமர் திரு மோடி எடுத்துரைத்தார்.

இந்தியாவின் தலைமையிலான ஜி20 அமைப்பின் முன்னுரிமைகள், தொழில்நுட்ப பயன்பாட்டில் ஜனநாயக மாண்புகள் மற்றும் இரண்டு மேலவைகள் இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் கலந்துரையாடினார்கள். பரஸ்பர நன்மை பயக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டன.

***

 

LK/BR/AG