Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஃபிரான்ஸ் அதிபரின் தூதரக ஆலோசகர் திரு இமானுவேல் பான், பிரதமர் உடன் சந்திப்பு


ஃபிரான்ஸ் அதிபர் மேதகு திரு இமானுவேல் மேக்ரானின் தூதரக ஆலோசகர் திரு இமானுவேல் பான், பிரதமர் திரு நரேந்திர மோடியை ஜனவரி 5, 2023 அன்று சந்தித்துப் பேசினார்.

ராணுவம், பாதுகாப்பு, இந்தோ-பசிபிக்  உள்ளிட்ட முக்கிய கேந்திர கூட்டுமுயற்சியில் இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்றிருப்பதற்கு ஃபிரான்ஸ் நாட்டின் ஆதரவை அவர் வரவேற்றார்.

நட்பின் அடிப்படையிலான ஃபிரான்ஸ் அதிபரின் செய்தியை திரு பான் பிரதமரிடம் தெரிவித்ததோடு, முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவாலுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை குறித்து விளக்கம் அளித்தார்.

எரிசக்தி, கலாச்சாரம் உள்ளிட்ட பரஸ்பர ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பு உள்ள இதர துறைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தார்கள்.

அண்மையில் பாலி-யில் அதிபர் திரு மேக்ரானுடனான தமது சந்திப்பை நினைவுகூர்ந்த பிரதமர், இந்தியாவிற்கு வருகை தருமாறு அவருக்கு அழைப்புவிடுத்தார். வெகு விரைவில் இந்தியாவிற்கு வருகை புரிய அதிபர் திரு மேக்ரான் மிக ஆவலோடு இருப்பதாக திரு பான் தெரிவித்தார்.

****

(Release ID: 1888995)

GS/RB/RR