Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஃபிஃபா யூ-17 உலகக் கோப்பை பந்தயத்தில் பங்கேற்ற இந்திய அணியினரை பிரதமர் சந்தித்தார்

ஃபிஃபா யூ-17 உலகக் கோப்பை பந்தயத்தில் பங்கேற்ற இந்திய அணியினரை பிரதமர் சந்தித்தார்

ஃபிஃபா யூ-17 உலகக் கோப்பை பந்தயத்தில் பங்கேற்ற இந்திய அணியினரை பிரதமர் சந்தித்தார்


சமீபத்தில் முடிவடைந்த ஃபிஃபா யூ-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி புது தில்லியில் இன்று சந்தித்தார்.

     இந்த சந்திப்பின் போது, இந்திய வீரர்கள் களத்திலும் களத்திற்கு வெளியிலும் தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர்.

     போட்டியின் முடிவுகள் குறித்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று பிரதமர் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுதினார். இதனை கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக கருத வேண்டும் என்று அவர் கூறினார். உற்சாகத்துடன் போட்டியிடுவது வெற்றிக்கு முதல் படி என்று அவர் கூறினார்.
    

     கால்பந்து விளையாட்டில் இந்தியா ஏராளமான சாதனைகளை நிகழ்த்த முடியும் என்று பிரதமர் கூறினார். விளையாட்டு ஆளுமையை மேம்படுத்தவும், தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும் உதவும் என்றும் ஒட்டு மொத்த மேம்பாட்டை அதிகரிக்கவும் உதவும் என்று கூறினார்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தார்.