Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஃபர்ஸ்ட் சோலார் தலைமை செயல் அதிகாரி திரு மார்க் விட்மர் உடன் பிரதமர் சந்திப்பு

ஃபர்ஸ்ட் சோலார் தலைமை செயல் அதிகாரி திரு மார்க் விட்மர் உடன் பிரதமர் சந்திப்பு


ஃபர்ஸ்ட் சோலார் தலைமை செயல் அதிகாரி திரு மார்க் விட்மரை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். 

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, குறிப்பாக சூரிய சக்தி சாத்தியக்கூறுகள் மற்றும் 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து 450 ஜிகாவாட் மின்சார உற்பத்தியை எட்டுவதற்கான நமது இலக்கு குறித்து அவர்கள் பேசினர்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் பிரத்தியேக மெல்லிய சுருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் தயாரிப்பு வசதிகளை நிறுவுவது குறித்தும் சர்வதேச விநியோக சங்கிலிகளில் இந்தியாவை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

*****************