கடந்த 10 ஆண்டுகளில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கொள்கை ஏதும் இல்லாமல் தன்னிச்சையான முடிவுகள், ஊழல்கள் ஆகியவை இருந்ததாக பல்வேறு கதைகள் நிலவின. ஆனால், சென்ற ஆண்டு இதில் வரவேற்கத் தக்க மாறுதல் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு குறித்து, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து, மத்திய அரசு தற்போது ஏலங்கள் குறித்த செயல்பாடுகளை வெளிப்படையாக்கியுள்ளது. 67 நிலக்கரி சுரங்கங்களை ஏலமிட்டு ஒதுக்கீடு செய்த்தன் மூலம் அரசுக்கு ரூ.3.35 லட்சம் கோடி வருமானம் கிடைத்தது. இது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் கூறியது:
“ஏலமிடும் முறை திருப்தி அளிக்கும் வகையில் இருந்தது. இது தன்னிச்சையாகவோ, அல்லது முறையற்றதாகவோ இல்லை என்பது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட நபரையோ, அல்லது நிறுவனத்திற்கோ சாதகமாக இந்த ஏலமுறை இருந்ததாக குற்றச்சாட்டு எதுவும் இல்லை.”
ஸ்பெக்டிரம் ஏலம் முறையிலும் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுகளில் இழப்பு எதுவும் இல்லை என்று கூறப்பட்டது. பாதுகாப்புத் துறைக்கு அளிக்கப்பட்ட ஸ்பெக்டிரம் அலைக்கற்றை பிரச்சனை ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்துள்ளது. ஆனால், அந்தப் பிரச்சனை தற்போது தீர்க்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் 2100 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையை விடுவித்ததனால் அவையும் ஏலத்திற்கு விடப்பட்டன. நான்கு (4) பேண்டுகளுக்கு ஏலம் நடத்தப்பட்டது. 800, 900, 1800, 2100 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் ஒரே நேரத்தில் முதல் முறையாக ஏலமிடப்பட்டது. ஏலம் எடுப்பவர்கள் தகவல்களை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி முடிவுகளை எடுக்க முடிந்தது. ரூ.80,277 கோடி அளவிற்கு ஏலத்தொகை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரூ.1,09,875 கோடி அளவிற்கு அரசுக்கு வருமானம் கிடைத்தத்து.
வெளிப்படைத் தன்மைக்கு மற்றொரு உதாரணமாக சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் ஆன் லைன் முறையில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டு அதே முறையில் அனுமதியையும் அளிக்கிறது. அனுமதி பெறுவதற்காக அமைச்சகத்திற்கு நேரடியாக வரவேண்டிய அவசியம் இல்லை.
கறுப்புப்பண விவகாரத்தில் அரசு பதவியேற்ற முதல் நாளன்றே சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைத்தது. சுவிட்சர்லாந்து அரசின் உதவியுடன் அரசு தேவையான தகவல்களைப் பெற்று வருமானவரித்துறை இது குறித்து விசாரித்து வருகிறது. கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள் ஆகியவை குறித்த மசோதாவை அரசு அங்கீகரித்துள்ளது. இந்த மசோதாவின் மூலம் தண்டனை அளிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் வாங்கும் – விற்கும் பொருள்களுக்கு (பான்) எனப்படும் நிரந்தர கணக்கு எண் கொடுக்கப்பட வேண்டும்.