கல்வி, மற்றும் திறன் மேம்பாட்டிற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதிக முக்கியத்துவத்தை அளித்துள்ளது.
கல்வியின் தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரதம மந்திரியின் வித்யா லஷ்மி கார்யகிரம் திட்டத்தின் மூலம் கல்விக்காக அளிக்கப்படும் கடன்கள் மற்றும் உதவித் தொகை ஆகியவற்றை கண்காணிக்க நிதியுதவி ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்த பண்டித மதன் மோகன் மாளவியா இயக்கத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் ஆகியோர்களை வரவழைக்கும் வகையில் உலகளாவிய கல்விக்கான முயற்சி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்வயம் திட்டத்தின் கீழ் ஆன் லைன் முறையில் கல்வி கற்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கல்விக்குத் தேவையான புத்தகங்கள் போன்றவற்றை பயன்படுத்த இ-நூலகம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஷாலா தர்பன் என்ற திட்டத்தின் மூலம் பள்ளியில் படிக்கும் மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் கண்காணிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த உதான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் பொறியியல் பயிலும் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர்கள் இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் உள்ள தொழில்நுட்பக்கழகங்கள் ஆகியவற்றில் பயிற்சியை மேற்கொள்ள இஷான் விகாஸ் திட்டம் உதவுகிறது. பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றின் திறனை மேம்படுத்த உஸ்தாத் திட்டம் உதவுகிறது. இக்கலைகளில் சிறந்தவர்கள் மேலும் பயிற்சியை பெறுவதற்கும் சந்தையில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கும் இத்திட்டம் அவர்களுக்கு உதவி கரமாக திகழ்கிறது.
திறன் இந்தியா திட்டத்திற்கு பிரதமர் மோடி அளிக்கும் முக்கியத்து வத்திற்கு எவ்விதமான ரகசியமும் இல்லை. திறன் மேம்பாட்டுக்காக அமைச்சகம் ஒன்றை மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். 76 லட்சம் இளைஞர்கள் இதுவரை திறன் மேம்பாட்டில் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பிரதம மந்திரியின் கவுஷல் விகாஸ் திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பண்டித தீன்தயாள் உபாத்யாய் கிராம் கவுஷல் திட்டத்தின் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் கிராமப்புற இளைஞர்கள் பயிற்சி பெறுவார்கள்.
தொழில் பயிற்சி சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதன் மூலம் பணியின் போது பயிற்சி பெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகளில் ஒரு லட்சம் தொழில்பயிற்சியாளர்களுக்கு 50 சதவீத உதவித் தொகையுடன் அரசு ஆதரவளிக்கும். அடுத்த சில ஆண்டுகளில் 20 லட்சம் பேர் பயிற்சி பெறும் வகையில் அரசு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, இது 2.9 லட்சம் என்ற அளவில் உள்ளது. தொழில் பயிற்சி பெறுவதற்காக தேசிய வேலைவாய்ப்பு மையங்கள் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு பயிற்சி குறித்து அறிவுரை அளிக்க ஆசிரியர்களும் உள்ளனர்.