Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

இந்திய பொருளாதாரத்தை விரைந்த பாதையில் அமைத்தல்


இந்த ஆண்டு இந்திய பொருளாதாரத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டு. குறைந்த வளர்ச்சி, உயர் பண வீக்கம், உற்பத்தி குறைந்து வருதல், என்ற காலம் நீங்கி பெருமப் பொருளாதார அடிப்படைகள் வலுவடையச் செய்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மேலும் பொருளாதாரத்தை உயர் வளர்ச்சி பாதைக்கு இட்டுச் சென்று இந்தியாவில் மொத்த உள்ளாட்டு உற்பத்தி வளர்ச்சியை ராக்கெட் வேகத்தில் 74 சதவீதமாக உயரச் செய்துள்ளது அது. உலகின் பெரிய பொருளாதாரங்களில் மிக விரைவான வளர்ச்சி வீதம் இது.

0.02557600_1432482410_1-4 [ PM India 143KB ]

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அடுத்த சில ஆண்டுகளில் இந்திய வளர்ச்சி வீதம் மளமளவென உயர்ந்துவிடும் என்று பல்வேறு பொருளாதார தர நிர்ணய முகமைகளும், சிந்தனைக்குழாம்களும் கருத்துத் தெரிவித்துள்ளன. வங்கித்துறை வலுவான அடிப்படைகளில் உள்ளதாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டிருப்பதாலும் ‘மூடீஸ்’ முகமை இந்தியாவின் தரத்தை ‘நிலையானது’ என்பதிலிருந்து ‘நேர்மையானது’ என சமீபத்தில் உயர்த்தியுள்ளது.

0.06420500_1432583588_new-finger [ PM India 135KB ]

பிரிக்ஸ் (BRICS) அமைப்பு தொடங்கப்பட்டபோது இந்தியா ‘I’ இந்த கூட்டத்துக்கு பொருந்தாது என்றனர்; இந்தியாவை சந்தேகம் கலந்த நம்பிக்கையின்மையுடனேயே பார்த்தனர். தற்போது இந்தியா தான் பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உந்து விசையாக இருந்து வளர்ச்சி என்ஜின் எந்திரத்தை இயக்குகிறது என்கின்றனர்.

0.08853000_1432482417_1-5 [ PM India 116KB ]

சென்ற ஆண்டு எதிர்மறை (-)ல் இருந்த தொழிலியல் உற்பத்தி குறியீடு இந்த ஆண்டு 2.1 சதவீத அளவில் வளர்ந்துள்ளது. அரசு உற்பத்தி துறைக்கு அளித்துவரும் உத்வேகம் தான். 2014 ஏப்ரலில் 5.55 சதவீதமாக இருந்த பணவீக்க வீதம் 2015 ஏப்ரலில் 2.65 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆற்றிய நேரடி முதலீடுகள் வரலாற்று சிறப்பு மிக்க வகையில் உயர்ந்து வருகிறது. பங்குகள் மீதான நேரடி அந்நிய முதலீடு 40 சதவீதம் வளர்ந்து 1,75,886 கோடி ரூபாயாக உள்ளது. இது சென்ற ஆண்டு 1,25,960 கோடியாக இருந்தது.

0.18075300_1432482227_1-1 [ PM India 122KB ]

நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து சீராக கீழிறங்கி வருகிறது. நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை சென்ற ஆண்டின் 4.7 சதவீத்த்திலிருந்து இந்த ஆண்டு 1.7 சதவீதமாக்க் குறைந்துள்ளது. இந்தியாவின் அந்தியச் செலாவணி கையிருப்பு குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது. 311800 கோடி டாலர் என்ற அளவிலிருந்து 352100 கோடி டாலர் என உயர்ந்துள்ளது. உலகப் பொருளாதார அதிர்ச்சி சந்தர்ப்பங்களில் இது இந்தியாவை பாதுகாப்பு வளையம்போல் பாதுகாக்க உதவும்.

ஏற்றம்... Loading