பெரிய அளவிலான தொழில் உற்பத்தியை நடத்த இந்தியா இப்போது தயாராகி வருகிறது.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் எடுக்கப்படும் முயற்சிகள் இந்தியாவில் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தவும் பொருட்களை தயாரிக்கவும் செயல்படுத்தப்பட உள்ளது. நான்கு முக்கிய கொள்கையின் அடிப்படையில் இது செயல்படும்.
புதிய வழிமுறை:: தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் விதமாக வர்த்தகத்தை எளிதாக்குதல். இதற்கான வர்த்தக சூழ்நிலையை ஏற்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. வர்த்தகம் செய்வோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் வர்த்தகம் புரிவதற்கு ஏற்றபடி தொழில் உரிமங்களில் மாற்றங்கள் செய்யப்படும்.
புதிய கட்டமைப்பு வசதிகள்: தொழில் துறை வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் கட்டமைப்பு வசதிகள் நவீன மயமாக்கப்படுவது மிக முக்கியமானதாகும். இதற்காக தொழிற்துறை கூடங்கள் உருவாக்கப்பட்டு கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நவீன நகரங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் நவீன தொழில்நுட்பம் மற்றும் விரைவான தொலைத் தொடர்பு வசதிகள் ஆகியவை கொண்டுவரப்படும். தற்போதுள்ள தொழில் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்தி அவை வலுவுள்ளதாக்கப்படும்.
புதிய பிரிவுகள்
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்படி தொழில் உற்பத்திற்காக 25 பிரிவுகள் கண்டறிப்பட்டுள்ளன. இதற்கான கட்டமைப்பு மற்றும் சேவை வசதிகள் போன்ற தகவல்களை கணிணி மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
புதிய ஆர்வம்:தொழில் துறை எப்போதுமே அரசாங்கத்தை முறைப்படுத்தியாக கருதுகிறது. ஆனால், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்படி அரசு தொழிற் துறையுடன் தொடர்ந்து தொடர்பை வைத்துக் கொள்ளவதற்கான மாற்றத்தை கொண்டுவர எண்ணியுள்ளது. நாட்டில் பொருளாதார மேம்பாட்டை கொண்டு வரவேண்டுமெனில் அரசு தொழிற் துறையுடன் இணைந்து செயல்படும். அரசு தொழிற்துறைக்கு வசதிகளை ஏற்படுத்தி தரும் வகையில் இருக்க வேண்டும் என்பதுடன் விதி முறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கொள்கையை கொண்டுள்ளது.
இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் வர்த்தக தலைவர்கள் இந்தியாவில் தயாரிப்போம் என்ற கொள்கையை பாராட்டி வருகிறார்கள். இந்த முயற்சிக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆதரவும் கிடைத்துள்ளது.
சமீப வரலாற்றின்படி பெரிய அளவிலான தொழில் உற்பத்தியை தொடங்கும் முயற்சி உருவாக்கி உள்ளோம். அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி சாத்தியமாகும். இதுபோன்ற முயற்சி இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ள உலக நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
குறுகிய காலத்தில் பழைய விதிமுறைகள் அகற்றப்பட்டு வெளிப்படையான தன்மை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இது மூலதனத்திற்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டு பிடிப்பதற்கும் திறனை மேம்படுத்துவதற்கும் பயன்படத்தக்க வகையில் உள்ளது.
மூலதன உச்ச வரம்பு சில தொழிற்துறை பிரிவுகளில் தளர்த்தப் பட்டுள்ளது. பாதுகாப்பு, கட்டுமானத்துறை, ரயில்வே ஆகிய துறைகளில் உலக நாடுகள் பங்கேற்கும் வகையில் இவை தளர்த்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பிரிவில் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பிரிவில் தொகு முதலீடு 24 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரிவின் தொழில்நுட்ப துறையில் அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதமும் அதேபோல் கட்டுமானத் துறை, ரயில்வே கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவற்றிற்கும் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு உயர்த்தப்பட்டுள்ளது.
வர்த்தகத்தை எளிதாக நடத்துவதற்காக வரி விதிப்பு முறை எளிதாக்கப்பட்டுள்ளது. பல பிரிவுகளில் அடிப்படை சுங்கத் தீர்வை குறைக்கப்பட்டுள்ளது. தொழிற்துறை சேவைகளுக்கு வருமானவரி 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றிற்கு தேவையான ஆவணங்களின் எண்ணிக்கை மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் 14 வகையான சேவை வசதிகள் ஈ-வர்த்தகத்தில் எளிதாக கிடைக்கிறது. தொழிற்துறை உரிமங்களை வழங்குவதற்காக நாள் முழுவதும் ஆன்லைன் முறையில் பதிவிறக்கம் செய்யலாம். தொழிற்துறை உரிமங்கள் மூன்றாண்டுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்பு வசதியை பெறவும் விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.
உலகில் தொழில் உற்பத்திக்கான இடமாக இந்தியாவை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அதற்கு தேவையான முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.