Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

இந்தியாவின் வளர்ச்சி


நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாக இன்னமும் இருளில் இருக்கும் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின் வசதி ஏற்படுத்தி தரும் லட்சியத்திட்டத்தை இந்தியா உருவாக்கி உள்ளது. இந்திய சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மின்சாரம் இல்லா எல்லா கிராமங்களுக்கும் இன்னும் ஆயிரம் நாட்களில் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்று அறிவித்தார். ஊரக மின் மயமாக்கல் திட்டம் பரவலாக விரைந்து மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு வெளிப்படைத் தன்மையாகவும் நேர்மையாகவும் திட்டம் செயல் வடிவம் பெறுகிறது. எந்தெந்த கிராமங்கள் மின் இணைப்பு பெற்றுள்ளது என்ற விவரங்கள் செல்போன் செயலி (மொபைல் ஆப்ஸ்), வலைத்தளம் பயன்பாடு மூலமும் தெரிந்து கொள்ள முடியும். அதுவும் அந்த கிராமத்திற்கு மின்சாரம் சென்றடைந்த பின்னர் தான் தகவல் வரும். கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாடு, எதிர்பார்ப்பு, கனவுகள் ஆகியவற்றை நிறைவேற்றும் முக்கிய அம்சமாகவும் இத்திட்டம் செயல்படுகிறது.

இந்திய வரலாற்றில் 2012ம் ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட மிகப்பெரிய மின்பற்றாக் குறையை நாம் மறந்து விட முடியாது. அப்போது இந்திய மக்களில் 62 கோடி பேர் இருளில் மூழ்கினார்கள். அந்த இருள் நாட்டையும் சூழ்ந்தது. 24 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் நிலக்கரி, எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் கிடைக்காமல் இயங்காமல் கிடந்தன. செயல்படாமை என்ற தீய வளையத்தில் ஒட்டு மொத்த மின்துறையும் இருந்தது. உபரி மின் உற்பத்தியை கொள்முதல் செய்வதில் கொள்கை முடிவு எடுப்பதில் முடக்கம், முதலீடுகள் பயன்படாத நிலையில் இருத்தல் என்பது ஒருபக்கமும், நுகர்வோராகிய மக்களுக்கு மின்வெட்டு என்ற துயரம் மறுபக்கமும் இருந்தன.’

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த நேரத்தில் நாட்டில் உள்ள மொத்த நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களில் (அதாவது 100க்கு 66 மின் உற்பத்தி நிலையங்களில்) நிலக்கரி கையிருப்பு 7 நாள் தேவைக்கும் குறைவாகவே இருந்தன. இந்த சூழ்நிலையை மாற்றி தற்போது எந்த நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையத்திற்கும் மோசமான நிலக்கரி பற்றாக்குறை இல்லை என்ற நிலை எட்டப்பட்டிருக்கிறது.

0.24219700_1451627485_inner-power-2 [ PM India 0KB ]

அனைவருக்கும் மின்சாரம் திட்டத்தினை செயல்படுத்த கடினமாக உழைக்கும் இந்த அரசு, இதற்காக மாசற்ற மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் மூலம் 175 கிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 100 கிகாவாட் மின்சாரம் சூரியசக்கி மின்சாரமாகும்.

மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு (மோடி அரசு) இருபத்தி நான்கு மணிநேரமும் அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் இலக்கினை எட்டுவதற்காக நீண்டகால, ஏற்புடைய செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. வளர்ஙசசியின் எண்ணிக்கைக்கு முதுகெலும்பாக இருப்பது மின்சார உற்பத்திதான். இந்திய தொழில் உற்பத்தி குறியீடான ஐ.ஐ.பி. படி, மின் உற்பத்தி வளர்ச்சி அக்டோபர் மாதம் 9 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், அதே போல் கோல் இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சி 2014-15ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 9 சதவீதமாக அதிகரித்தது என்றும் தெரிவிக்கிறது, கோல் இந்தியாவின் வளர்ச்சி கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் இறக்குமதி சுமையும் நவம்பரில் 49 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல 2015-15ம் ஆண்டில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிறுவனங்களின் மின் உற்பத்தியும் 12.12 சதவீதம் அதிகரித்துள்ளது. இது இதுவரை இல்லாத வளர்ச்சியாகும்.

0.54567300_1451627359_inner-power-1 [ PM India 0KB ]

214 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இந்த துறையில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டும் மின்னணு ஏலமுறைக்கு உதவியது. வளர்ச்சியில் குறைந்த கிழக்கு இந்திய மாநிலங்களுக்கு இது சாதகமாக இருந்தது.

இதன்மூலம் கூடுதலாக 22 ஆயிரத்து 566 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முன் எப்போதும் இல்லாத உச்ச அளவாகும். மின் பற்றாக்குறை அளவு கடந்த 2008-09ம் ஆண்டில் 11. 9 சதவீதம் என்ற அளவில் இருந்து இப்போது 3.2 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவும் முன் எப்போதும் இல்லாத சாதனையாகும். நடப்பு ஆண்டில் மின்பற்றாக்குறை 2.3 சதவீதம் என்ற இந்திய வரலாற்றில் இல்லாத அளவாக குறைந்துள்ளது.

மின் உற்பத்தி மிகை மாநிலங்களில் இருந்து பற்றாக்குறை மாநிலங்களுக்கு மின்சாரத்தை வினியோகத்திற்காக கொண்டு செல்வதிலும் பல சிக்கல்கள் இருந்தன. இதற்கு தீர்வுகாணும் வகையில் தெற்கு மின்கோபுரத் தொகுப்பையும். ஒரு தேசம் ஒரு மின் தொகுப்பு- ஒரு அலைவரிசை என்ற கோட்பாட்டின்படி ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2013 -14ம் ஆண்டில் மின்பரிமாற்றம் 3 ஆயிரத்து 350 மெகாவாட்டாக இருந்தது. இது இந்த மாதம் 71 சதவீதம் அதிகரித்து 5 ஆயிரத்து 900 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

மின் மதிப்புத்தட சங்கிலியில் பலவீனமான இணைப்பு பிரச்சினைக்குத் தீர்வு காண உதய் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்மூலம் இந்த துறையில் பிரச்சினைகளை முந்தைய, இந்நாள் , எதிர்கால பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும். மாநிலங்களின் முதலமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகார அமைப்பினருடனும், வங்கிகளுடனும், கட்டுப்பாட்டாளர்களுடனும் கலந்துபேசி உருவாக்கப்பட்ட சவுகர்யமான திட்டமாகும். இத்திட்டம் மின் விநியோகத்தில் மின் விநியோக துறை நிறுவனங்களான டிஸ்காமுக்கு நீடித்த மின்சாரம் வருவதற்கான பாதைக்கு வழி ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று மின்சார கட்டணத்தினையும் குறைப்பதற்கு மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் மூலம் அடுத்த 2018-19ம் ஆண்டில் அனைத்து டிஸ்காம் நிறுவனங்களும் லாபத்தில் இயங்க வழிவகை செய்யும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

0.33263600-1451575216-powerindia2 [ PM India 0KB ]

உதய் திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள் மூலம் டிஸ்காமிற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி உள்ளது. இதுதவிர கூட்டு அணுகுமுறை, திறன் மேம்பாட்டில் கூடுதல் கவனம், மின் உற்பத்தி செலவு குறைப்பு, போன்றவற்றால் உதய் திட்டம் மின்துறையில் பெரும் சீர்திருத்தத்தை ஏற்படுத்தும்.
மின் திறன் மேலாண்மையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது 75 சதவீதம் எல்.இ.டி. பல்புகள் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் வினியோகத்தை கடந்த ஓராண்டில் 4 கோடி பல்புகளாக அதிகரித்துள்ளோம். ஒவ்வொரு குமிழ் பல்புகளுக்கும் பதிலாக எல்.இ.டி பல்புகளை பொருத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது- 2018ம் ஆண்டுக்குள் 77 கோடி எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்படும்.

வீடு மற்றும் தெருவிளக்குகள் பயன்பாட்டில் எல்.இ.டி பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் அதிக மின் தேவையுள்ள நேரங்களில் மின்சார பயன்பாட்டின் தேவையை 22 கிகாவாட் குறைக்க முடியும். அத்துடன் 11 ஆயிரத்து 400 கோடி மின்சாரத்தை சேமிக்க முடியும். அதன் மூலம் ஆண்டுதோறும் எட்டரை கோடி டன் கார்பன் டையாக்சைடு மாசு வெளியேற்றத்தை குறைக்க முடியும். 22 கிகாவாட் மின்சார சேமிப்பு என்பது மிகப்பெரிய சாதனையாகும். அதே நேரத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் அமையும்.

ஏற்றம்... Loading