Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

தேடு
  • டாக்டர். மன்மோகன் சிங்

    டாக்டர். மன்மோகன் சிங்

    மே 22, 2004 - மே 26, 2014

    இந்தியாவின் பதினான்காவது பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங்  சிந்தனையாளர் மற்றும் அறிஞர் என்று பாராட்டப்பட்டவர். அவரது விடாமுயற்சி, வேலைக்கான கல்வி அணுகுமுறை, அணுகல் மற்றும் எளிமையான நடத்தை ஆகியவற்றிற்காக அவர் நினைவுகூரப்படுவார். பிரதமர் மன்மோகன் சிங், செப்டம்பர் 26, 1932ல், ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்த பஞ்சாப் மாகாணத்தின் ஒரு கிராமத்தில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1948ல் தன்னுடைய மெட்ரிக்குலேஷன் தேர்வுகளை முடித்தார். அவருடைய சிறந்த படிப்பாற்றல் அவரை பஞ்சாப்பில் இருந்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு ...

    மேலும் Archive Link
  • திரு. அடல் பிஹாரி வாஜ்பாய்

    திரு. அடல் பிஹாரி வாஜ்பாய்

    மார்ச் 19, 1998 - மே 22, 2004

    திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு மக்கள் தலைவர், பொது சேவையில் உறுதியோடு ஈடுபட்டவர். அக்டோபர் 13, 1999 அன்று இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் அவர் புதிய அரசுக்கு தலைமையேற்றார். 1996-ஆம் ஆண்டு குறுகிய காலத்திற்கு அவர் பிரதமராக இருந்தார். பண்டிட் ஜவஹர்லால் நேரு காலத்திற்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு முறை தொடர்ந்து பதவி ஏற்ற முதல் பிரதமர் இவர்தான். ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக ...

    மேலும் Archive Link
  • திரு இந்தர் குமார் குஜ்ரால்

    திரு இந்தர் குமார் குஜ்ரால்

    ஏப்ரல் 21, 1997 - மார்ச் 19, 1998

    திரு. இந்தர் குமார் குஜ்ரால் இந்தியாவின் 12வது பிரதமராக கடந்த 1997ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி இந்தர் குமார் குஜ்ரால் பதவி ஏற்றார். திரு. அவ்தார் நரைன் குஜ்ரால், திருமதி புஷ்பா குஜ்ரால் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ஐ.கே.குஜ்ரால். இவர், எம்.ஏ., பி.காம்., பி.எச்டி. மற்றும் டி.லிட். (ஹானரிஸ் காஸா) பட்டங்களைப் பயின்றுள்ளார். 1919ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மேற்கு பஞ்சாப்பில் உள்ள ஜீலம் நகரில் (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) ...

    மேலும் Archive Link
  • திரு. எச்.டி.தேவே கவுடா

    திரு. எச்.டி.தேவே கவுடா

    ஜூன் 1, 1996 - ஏப்ரல் 21, 1997

    சமூக - பொருளாதார வளர்ச்சிக்கான வீரப் போராளியும், இந்தியாவின் வளமான பண்பாட்டுப் பாரம்பரியத்தின் ஆதரவாளருமான திரு எச்.டி.தேவே கவுடா, கர்நாடகாவின் ஹசன் மாவட்டம், ஹோலேனரசிபுரா தாலுகாவின் ஹரதனஹள்ளி கிராமத்தில் 1933ம் ஆண்டு மே 18ம் தேதி பிறந்தார். சிவில் இன்ஜினியரிங் பட்டயப்படிப்பு படித்த தேவே கவுடா, தனது 20வது வயதிலேயே தீவிர அரசியலில் அடியெடுத்து வைத்தார். 1953ல் படிப்பை முடித்ததும் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார். 1962ம் ஆண்டு வரை கட்சியின் சாதாரண உறுப்பினராகவேப் ...

    மேலும் Archive Link
  • திரு. அடல் பிஹாரி வாஜ்பாய்

    திரு. அடல் பிஹாரி வாஜ்பாய்

    மே 16, 1996 - ஜூன் 1, 1996

    திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு மக்கள் தலைவர், பொது சேவையில் உறுதியோடு ஈடுபட்டவர். அக்டோபர் 13, 1999 அன்று இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் அவர் புதிய அரசுக்கு தலைமையேற்றார். 1996-ஆம் ஆண்டு குறுகிய காலத்திற்கு அவர் பிரதமராக இருந்தார். பண்டிட் ஜவஹர்லால் நேரு காலத்திற்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு முறை தொடர்ந்து பதவி ஏற்ற முதல் பிரதமர் இவர்தான். ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக ...

    மேலும் Archive Link
  • திரு. பி.வி. நரசிம்ம ராவ்

    திரு. பி.வி. நரசிம்ம ராவ்

    ஜூன் 21, 1991- மே 16, 1996

    திரு. பி.வி. நரசிம்ம ராவ், திரு.டி ரங்கா ராவின் மகன். ஜூன் 28, 1921 அன்று கரிம் நகரில் பிறந்தவர். ஹைதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக் கழகம். பாம்மே பல்கலைக்கழகம் மற்றும் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். மனைவியை இழந்த இவருக்கு மூன்று மகனும் ஐந்து மகளும் உள்ளனர். வேளாண் நிபுணரும், வக்கீலுமான இவர் அரசியலில் சேர்ந்து, சில முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 1962 முதல் 1964 வரை சட்டம் மற்றும் தகவல் அமைச்சராகப் பணியாற்றினார். அதேபோல், ...

    மேலும் Archive Link
  • திரு. சந்திர சேகர்

    திரு. சந்திர சேகர்

    நவம்பர் 10, 1990 - ஜூன் 21, 1991

    திரு. சந்திர சேகர் 1927 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி பிறந்தார். உத்திர பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தில் இவர் பிறந்தார். 1977 முதல் 1988 வரை ஜனதா கட்சியின் தலைவராக இருந்தார். திரு.சந்திரசேகர் மாணவ பருவத்திலேயே அரசியலில் ஆர்வத்தோடு ஈடுபட்டார். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் புரட்சியாளராகத் திகழ்ந்தார். 1950-51 ல் அலகாஹாபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற இவர் சோஷியலிச ...

    மேலும் Archive Link
  • திரு. விஷ்வநாத் பிரதாப் சிங்

    திரு. விஷ்வநாத் பிரதாப் சிங்

    டிசம்பர் 2, 1989 - நவம்பர் 10, 1990

    திரு. வி.பி. சிங் 1931, ஜூன் 25 அன்று அலகாபாத்தில் திரு. ராஜா பகதூர் ராம் கோபால் சிங்கிற்கு மகனாக பிறந்தார். இவர் அலகாபாத் மற்றும் பூனா பல்கலைகழகங்களில் பயின்றார். திருமதி. சீதா குமாரியை 1955, ஜூன் 25 அன்று மணந்தார். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.       பெரும் கல்வியாளரான இவர் அலகாபாத் கரோனில் கோபால் வித்யாலயா என்ற கல்லூரியை தோற்றி வித்தார். வாரணாசியில் உள்ள உதய் பிரதாப் கல்லூரியில் 1947-48 ...

    மேலும் Archive Link
  • திரு. ராஜீவ் காந்தி

    திரு. ராஜீவ் காந்தி

    அக்டோபர் 31, 1984 - டிசம்பர் 2, 1989

    திரு.ராஜீவ் காந்தி மிகவும் இளம் வயதில் தமது 40 வயதிலேயே இந்தியாவின் பிரதமரானார். அதுமட்டுமல்ல, உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களான சிலரில் இவரும் ஒருவர் அவரது தாயார் திருமதி. இந்திராகாந்தி அவரது 48 வயதில், 1966 ஆம் ஆண்டு முதல்முறை பிரதமராக பொறுப்பெற்றார். அவரது தாத்தா பண்டிட் ஜவஹர்லால் நேரு தனது 58 வயதில் சுதந்திர இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றார் நேரு. 17 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமராக இருந்தார். நாட்டின் தலைமுறை ...

    மேலும் Archive Link
  • திருமதி. இந்திரா காந்தி

    திருமதி. இந்திரா காந்தி

    ஜனவரி 14, 1980 - அக்டோபர் 31, 1984

    1917 ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி பெருமைமிக்க குடும்பத்தில் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மகளாகப் பிறந்தார். சுவிட்ஸ்ர்லாந்தின் பெக்ஸ் பகுதியிலுள்ள எக்கோல் நோவல், ஜெனிவாவிலுள்ள எக்கோல் இண்டர் நேஷனல், பம்பாய் மற்றும் பூனாவில் உள்ள பீப்பிள்ஸ் ஒன் ஸ்கூல், பிரிஸ்டாலிலுள்ள பேட்மிட்டன் ஸ்கூல், விஷ்வபாரதி, சாந்தி நிகேதன், ஆக்ஸ்போர்ட் சோமார்வில் கல்லூரி போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் அவர் கல்வி பயின்றார். பல்வேறு சர்வதேச பல்கலைகழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை ...

    மேலும் Archive Link
  • திரு. சரண் சிங்

    திரு. சரண் சிங்

    ஜூலை 28, 1979 - ஜனவரி 14, 1980

    திரு. சரண் சிங் 1902 ல் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் நூர்பூரில் ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்தார். 1923 ல் அவர் அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றார். 1925 ல் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். சட்டம் பயின்ற அவர் காசியபாத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார். 1929 மீரட் சென்ற அவர் காங்கிரஸ்சில் இணைந்தார். 1937 ல் முதன்முதலாக சாபிராளி தொகுதியிலிருந்து சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946, ...

    மேலும் Archive Link
  • திரு. மொரார்ஜி தேசாய்

    திரு. மொரார்ஜி தேசாய்

    மார்ச் 24, 1977 - ஜூலை 28, 1979

    திரு. மொரார்ஜி தேசாய் 1896 பிப்ரவரி 29 அன்று குஜராத் மாநிலத்தின் பல்சார் மாவட்டத்தில் உள்ள பதேலி கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தை பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த கண்டிப்பான மனிதர். குழந்தை பருவத்திலிருந்து மொரார்ஜி தன்னுடைய தந்தையாரிடமிருந்து அனைத்து சூழ்நிலைகளிலும் நேர்மையாக இருப்பதையும் கடின உழைப்பையும் கற்றுக் கொண்டார். புனித பசார் மேல்நிலை பள்ளியில் அவர் மெட்ரிக் கல்வியை முடித்தார். 1918ல் மும்பை மாகாணத்தில் வில்சன் சிவில் சேவையில் தனது பட்டப்படிப்பை முடித்து, ...

    மேலும் Archive Link
  • திருமதி. இந்திரா காந்தி

    திருமதி. இந்திரா காந்தி

    ஜனவரி 24, 1966 - மார்ச் 24, 1977

    1917 ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி பெருமைமிக்க குடும்பத்தில் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மகளாகப் பிறந்தார். சுவிட்ஸ்ர்லாந்தின் பெக்ஸ் பகுதியிலுள்ள எக்கோல் நோவல், ஜெனிவாவிலுள்ள எக்கோல் இண்டர் நேஷனல், பம்பாய் மற்றும் பூனாவில் உள்ள பீப்பிள்ஸ் ஒன் ஸ்கூல், பிரிஸ்டாலிலுள்ள பேட்மிட்டன் ஸ்கூல், விஷ்வபாரதி, சாந்தி நிகேதன், ஆக்ஸ்போர்ட் சோமார்வில் கல்லூரி போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் அவர் கல்வி பயின்றார். பல்வேறு சர்வதேச பல்கலைகழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை ...

    மேலும் Archive Link
  • திரு. குல்சாரி லால் நந்தா

    திரு. குல்சாரி லால் நந்தா

    ஜனவரி 11, 1966 - ஜனவரி 24, 1966

    திரு. குல்சாரி லால் நந்தா 1898 ஜூலை 4ம் தேதி பிறந்தார். அவர் லாகூர், ஆக்ரா, அலகாபாத் ஆகிய இடங்களில் கல்வி பயின்றார். 1920 முதல் 1921 வரை அலகாபாத் பல்கலைகழகத்தில் தொழிலாளர் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்தார். 1921ல், பம்பாயின் தேசிய கல்லூரியில் பொருளாதார துறை பேராசிரியரானார். அதே ஆண்டு அவர் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1922-ல் அகமதாபாத் ஜவுளி தொழிலாளர் சங்கத்தின் செயலர் ஆனார். 1946 வரை ...

    மேலும் Archive Link
  • திரு.லால்பகதூர் சாஸ்திரி

    திரு.லால்பகதூர் சாஸ்திரி

    ஜூன் 9, 1964 - ஜனவரி 11, 1966

    திரு.லால்பகதூர் சாஸ்திரி உத்தரபிரதேசத்தில் வாரணாசி பகுதியில் இருந்து 7 மைல் தொலைவிற்கு அப்பால் உள்ள முகல்சராய் சிறிய ரயில்வே நகரத்தில் 1904, அக்டோபர் 2ம் தேதி பிறந்தார். பள்ளி ஆசிரியராக பணியாற்றிய அவர் தந்தை திரு.லால்பகதூர் சாஸ்திரிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது மறைந்தார். அப்போது இருபது வயதே ஆன அவருடைய தாயார் தனது 3 குழந்தைகளுடன் அவரது தந்தை வீட்டிற்குச் சென்று குடியேறினார். லால்பகதூரின் பள்ளிக்கல்வி அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. வறுமையையும் மீறி ...

    மேலும் Archive Link
  • திரு. குல்சாரி லால் நந்தா

    திரு. குல்சாரி லால் நந்தா

    மே 27, 1964 - ஜூன் 9, 1964

    திரு. குல்சாரி லால் நந்தா 1898 ஜூலை 4ம் தேதி பிறந்தார். அவர் லாகூர், ஆக்ரா, அலகாபாத் ஆகிய இடங்களில் கல்வி பயின்றார். 1920 முதல் 1921 வரை அலகாபாத் பல்கலைகழகத்தில் தொழிலாளர் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்தார். 1921ல், பம்பாயின் தேசிய கல்லூரியில் பொருளாதார துறை பேராசிரியரானார். அதே ஆண்டு அவர் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1922-ல் அகமதாபாத் ஜவுளி தொழிலாளர் சங்கத்தின் செயலர் ஆனார். 1946 வரை ...

    மேலும் Archive Link
  • திரு. ஜவஹர்லால் நேரு

    திரு. ஜவஹர்லால் நேரு

    ஆகஸ்ட் 15, 1947 - மே 27, 1964

    பண்டிட் ஜவர்ஹலால் 1889, நவம்பர் 14ம் தேதி அலகாபாத்தில் நேரு பிறந்தார்.அவருடைய சிறு வயதில் அவர் வீட்டிலிருந்தே கல்வி பயின்றார். தனது 15 வது வயதில் இங்கிலாந்து சென்ற அவர், ஹரோவின் இரண்டு ஆண்டுகள்  கழிந்த பின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்  இயற்கை அறிவியல் கல்வி பயின்றார். பிறகு அவருக்கு பார்-ல் இணையுமாறு இன்னர் டெம்பிலில் இருந்து  அழைப்பு வந்தது. 1912ல்  இந்தியாவிற்கு  திரும்பிய அவர் நேரடியாக அரசியலில் நுழைந்தார். மாணவராக இருந்த காலத்திலிருந்தே ...

    மேலும் Archive Link