கொவிட்-19 பெருந்தொற்று போன்றவற்றால் உருவான அவசர நிலை அல்லது பேரிடர் சூழலை கையாள்வதை முதன்மை நோக்கமாகக் கொண்ட பிரத்யேகமான நிதியம் தேவை என்பதை மனதில் கொண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும்,
‘பிரதமரின் மக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியம்’ (பிஎம் கேர்ஸ் நிதியம்) என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டது. பிஎம் கேர்ஸ் நிதியம் என்பது அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஎம் கேர்ஸ் நிதியத்தின் அறக்கட்டளை பத்திரம் 2020 மார்ச் 27 அன்று புதுதில்லியில் 1908 பதிவுச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
இணையம்வழி நன்கொடை வழங்க இங்கே கிளிக் செய்யவும்.
நோக்கங்கள்:
பொது சுகாதாரம் தொடர்பான நிவாரணம் அல்லது உதவி அல்லது எந்தவிதமான அவசரநிலை, மனிதர்களால் உருவாக்கப்பட்ட அல்லது இயற்கையான பேரிடர் அல்லது துயரம், மருந்து உற்பத்தி வசதிகளை உருவாக்குதல் அல்லது சுகாதார கவனிப்பை மேம்படுத்துதல், இதர அவசியமான உள்கட்டமைப்பு, ஆராய்ச்சிக்கு தேவையான நிதி அளிப்பு அல்லது இதர வகையான உதவி ஆகியவற்றை மேற்கொள்வது.
நிதியுதவி வழங்குவது, மானியங்கள் வழங்குவது அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறங்காவலர்கள் வாரியத்தால் தேவையென கருதப்படுவதற்கு மேற்கொள்ளும் இதர நடவடிக்கைகள் எடுப்பது.
மேற்கூறிய நோக்கங்களுக்கு தொடர்புடைய இதர செயல்களை மேற்கொள்வது.
அறக்கட்டளையின் அமைப்பு விதி:
பிஎம் கேர்ஸ் நிதியத்தின் அலுவல் சாரா தலைவராக பிரதமர் இருப்பார். இந்த நிதியத்தின் அலுவல் சாரா அறங்காவலர்களாக பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் இருப்பார்கள்.
ஆராய்ச்சி, சுகாதாரம், அறிவியல், சமூகப்பணி, சட்டம், பொதுநிர்வாகம், மனித நேயம் போன்றவற்றில் பிரபலமாக விளங்கும் மூன்று அறங்காவலர்களை அறங்காவலர்கள் வாரியத்திற்கு நியமிக்கும் அதிகாரத்தை அறங்காவலர்கள் வாரியத்தின் தலைவர் (பிரதமர்) பெற்றுள்ளார்.
அறக்கட்டளைக்கு நியமிக்கப்படும் எவரும் சேவை செய்பவராகவே இருப்பார்.
இதர விவரங்கள்:
இந்த நிதியம் முழுமையும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் தாமாக முன்வந்து வழங்கும் பங்களிப்பைக் கொண்டது. பட்ஜெட் ஆதரவு எதையும் பெறாதது. மேற்குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்ற இந்த நிதி பயன்படுத்தப்படும்.
பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு வழங்கப்படும் நன்கொடைகள் வருமான வரிச்சட்டம் 1961-ன் கீழ் 100 சதவீதம் விலக்குப் பெற 80ஜி-க்கு உட்பட்டது. பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு வழங்கப்படும் நன்கொடைகள் நிறுவனங்கள் சட்டம் 2013-ன் கீழ் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) செலவாகவும் கணக்கிடப்படும்.
பிஎம் கேர்ஸ் நிதியம் எஃப்சிஆர்ஏ-படி விலக்கு பெறும். வெளிநாட்டு நன்கொடைகளை பெறுவதற்கு தனிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு வெளிநாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகளை ஏற்க முடியும். பிரதமரின் தேசிய நிவாரண நிதியத்திற்கு நிகரானதாக இது இருக்கும். பிரதமரின் தேசிய நிவாரண நிதியமும் பொதுவான அறக்கட்டளை என்ற வகையில் 2011 முதல் வெளிநாட்டு பங்களிப்புகளை பெற்று வருகிறது.
2020-21 காலத்தில் பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் ரூ.7013.99 கோடி திரட்டப்பட்டுள்ளது.
2019-20 | பற்றுச்சீட்டைக் காணவும் [ 39KB ] | 3076.62 |
2020-21 | பற்றுச்சீட்டைக் காணவும் [ 294KB ] | 10990.17 | ஆண்டு | பணம் செலுத்துவதற்கான கணக்கு மற்றும் பற்றுச்சீட்டைக் காணவும் | மொத்த நிதித்தொகுப்பு (புதிய பங்களிப்புகள், வட்டி வருவாய்) (ரூபாய் கோடியில்) |
---|
கணக்கின் பெயர் : பிஎம் கேர்ஸ்
கணக்கு எண்: 2121PM20202
ஐஎஃப்எஸ்சி குறியீட்டெண்: SBIN0000691
யூபிஐ: pmcares@sbi
பாரத ஸ்டேட் வங்கி,
புதுதில்லி முதன்மை கிளை