காப்புரிமைக் கொள்கை
இந்த இணையதளத்தில் உள்ள தகவல்களை மறுபயன்பாட்டுக்கு எந்த கட்டணமுமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும் பயன்படுத்தப்படும் தகவல்களை துல்லியமாகப் பிரதிபலிக்க வேண்டும். அவதூறு எழுப்பும் வகையிலோ அல்லது தவறான தகவலை அளிக்கும் வகையிலோ இருக்கக்கூடாது. எங்கெல்லாம் இதில் உள்ள தகவல்கள் வெளியிடப்படுகிறதோ அல்லது மற்றவர்களுக்கு விநியோகிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் ஆதாரத்தை முறைப்படி தெரியப்படுத்த வேண்டும். இருப்பினும், இங்குள்ள தகவல்களின் மறுவெளியீடுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், இங்குள்ளவற்றில் மூன்றாம் தரப்பு நபரின் காப்புரிமை பெற்ற தகவல்களுக்கு அது பொருந்தாது. இதற்கு சம்பந்தப்பட்ட துறை/காப்புரிமை பெற்றவரிடம் உரிய அனுமதி வாங்கப்பட வேண்டியது அவசியம்.
தனிநபர் விவரக் கொள்கை
இந்த இணையதளம் தானாக தங்களிடம் இருந்து ஒருவரின் விவரங்களை — தனிப்பட்ட முறையில் உங்களை அடையாளம் காண எங்களுக்கு உதவும் விவரங்களை (உதாரணமாக – பெயர், தொலைபேசி எண் அல்லது இ-மெயில் முகவரி) — பெறுவதில்லை. ஒருவேளை நீங்கள் உங்களுடைய சுய தகவல்களை — பெயர், விலாசம் உள்ளிட்டவற்றை –இந்த இணையதளத்துக்கு வருகை தரும்போது எங்களுக்கு அளித்தால் நீங்கள் கேட்கும் தகவல் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்வோம். மாண்புமிகு பிரதமருடனான பரிமாற்ற தளத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், இந்த இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். திரட்டப்படும் தகவல்கள், பரிமாற்ற வசதியை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த இணையதளத்தில் தானாக முன்வந்து தனிநபரால் அளிக்கப்பட்ட விவரங்களை எந்த ஒரு மூன்றாம் நபருக்கும் (பொது/தனியார்) விற்பதோ, பகிர்வதோ இல்லை. இந்த இணையதளத்துக்கு அளிக்கப்படும் தகவலானது தொலைதல், தவறாகப் பயன்படுத்தப்படுதல், அனுமதியற்றப் பயன்பாடு அல்லது வெளிப்பாடு, திருத்தம் அல்லது அழித்தல் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
பயன்பாட்டாளரின் சில தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். அதாவது இன்டர்நெட் புரோட்டோகால் (ஐபி) முகவரி, டொமைன் பெயர், பிரவுசர் விவரம், ஆப்ரேடிங் சிஸ்டம், தேதி மற்றும் பக்கங்களைப் பார்த்த நேரம் ஆகியவை சேகரிக்கப்படுகின்றன. இந்த இணையதளத்துக்கு பாதிப்பு ஏற்படுத்த முயலாத வரையில், சம்பந்தப்பட்டவர்களின் இந்த முகவரிகளைக் கொண்டு தனிநபர்களை அடையாளம் காண முயல்வதில்லை.
குக்கீஸ் கொள்கை
குக்கீ என்பது நீங்கள் ஒரு தளத்தில் தகவல் பெற முயலும்போது, அது ஒரு சிறிய மென்பொருள் குறியீட்டை உங்கள் பிரவுசருக்கு அனுப்பும். ஒரு குக்கீயானது, வெப்சைட் சர்வர் மூலம் சாதாரண டெக்ஸ்ட் பைலாக உங்கள் கணினி அல்லது மொபைல் கருவியில் சேகரம் செய்யப்பட்டுவிடும். அந்த வெப்சைட் சர்வர் மட்டுமே அதை அடையாளம் காண முடியும். குக்கீயானது இணையதளத்தின் பக்கங்களை நாம் திறனுடன் அணுகும் வகையில் உங்களுடைய முன்னுரிமைகளை நினைவில் கொள்கிறது. பொதுவாக இணையதளத்தில் உங்கள் தேடுதலை எளிதாக்குகிறது.
எங்களுடைய இணையதளங்களில் கீழ்கண்ட குக்கீஸ்களை நாங்கள் உபயோகிக்கிறோம்.
மேலும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விவரம் என்னவெனில், pmindia.gov.in அல்லது pmindia.nic.in ஆகிய இணையதளத்துக்கு வந்து முறைப்படி லாக் இன் செய்ய வேண்டும் என்பதுடன், குக்கீஸ்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதாகும். ஒருவேளை நீங்கள் குக்கீஸ்களை அனுமதிக்க மறுத்தால், எங்கள் இணையதளத்தில் ஒரு சில பகுதிகள் முறையாக இயங்காமல் போகலாம்.
ஹைப்பர்லிங்கிங் கொள்கை
வெளிப்புற இணையதளங்கள்/போர்ட்டல்களுடனான இணைப்பு
இந்த இணையதளத்தின் பல இடங்களில் பிற இணையதளங்கள் மற்றும் போர்ட்டல்களின் இணைப்புகளை (லிங்க்குகளை) நீங்கள் காண முடியும். இந்த இணைப்புகள் உங்கள் வசதிக்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புகளில் உள்ள விவரங்களுக்கும் அதில் உள்ள கருத்துக்களுக்கும் பிரதமர் அலுவலகம் எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்காது. இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அதில் உள்ள விபரங்களுக்கும் பட்டியல்களுக்கும் அங்கீகாரம் அளித்ததாகாது. மேலும், இந்த இணைப்புகள் அனைத்து நேரத்திலும் செயல்படும் என்ற உறுதியும் அளிக்க இயலாது. மற்றும் இணைப்புகளின் மீது எந்தக் கட்டுப்பாடும் எங்களிடம் இல்லை.
பிற இணையதளங்கள்/போர்ட்டல்களில் பிரதமர் அலுவலக இணையதள இணைப்பு
நீங்கள் எங்கள் இணையதளத்தில் உள்ள தகவல்களுக்கு இணைப்பு கொடுக்க எந்த ஆட்சேபமும் இல்லை. இதற்காக முன் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் இணைப்பு கொடுக்கப்பட்ட விவரம் குறித்து எங்களிடம் தெரிவித்தால் எங்கள் இணையதளத்தில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் புதிய தகவல் சேகரிப்புகள் குறித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்துகிறோம். மேலும் உங்களுடைய இணையதளத்தின் ஃபிரேம்களில் பிரதமர் அலுவலக இணையதளம் லோட் செய்யப்படுவதை நாங்கள் அனுமதிப்பதில்லை. இந்த இணையதளத்தின் பக்கங்களானது, பயன்பாட்டாளரின் புதிய பிரவுசர் விண்டோவில் மட்டுமே திறந்து பார்க்க அனுமதிக்கப்படுகிறது.
நிபந்தனைகள்
இந்த இணையதளம், தேசிய தகவல் மையத்தினால் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதில் உள்ள விவரங்கள் பிரதமர் அலுவலகத்தினால் அளிக்கப்படுகிறது.
இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் இன்றைய நிலவரப்படியும், துல்லியமாகவும் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதேசமயம் இதை சட்ட அறிக்கையாகவோ அல்லது ஏதேனும் சட்ட விவகாரங்களுக்கோ பயன்படுத்த முடியாது. ஏதேனும் தவறுகள் மற்றும் சந்தேகம் எழுந்தால், பிரதமர் அலுவலகம் அல்லது பிற ஆதாரங்களில் அதை சரிபார்த்து, தகுந்த நிபுணத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளும்படி பயன்பாட்டாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த இணையதள விவரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மறைமுக / பின்விளைவு இழப்பு, செலவினம், பாதிப்பு ஆகிய எதற்கும் பிரதமர் அலுவலகம் எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்காது.
இந்த நிபந்தனைகள் இந்தியச் சட்டங்களின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகின்றன. இதில் ஏதேனும் பிரச்னை எழுந்தால் அதை இந்திய நீதிமன்றங்களில் மட்டுமே தீர்த்துக் கொள்ள முடியும்.
இந்த இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ள விவரங்களில் அரசு சாரா மற்றும் தனியார் அமைப்புகளால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும் விவரங்கள் தொடர்பாக ஹைப்பர்டெக்ஸ் இணைப்புகள் அல்லது பாய்ண்டர்கள் சேர்க்கப்படலாம். பிரதமர் அலுவலம் இந்த இணைப்புகளையும், பாய்ண்டர்களையும் முற்றிலும் உங்கள் தகவல் மற்றும் வசதிக்காக மட்டுமே வழங்குகிறது. நீங்கள் வெளிப்புற இணையதளங்களின் இணைப்புகளில் செல்லும்போது பிரதமர் அலுவலக இணையதளத்தில் இருந்து வெளியேறிவிடுவீர்கள். அப்போது வெளிப்புற இணையதளங்களின் தனித்தன்மை மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கு நீங்கள் உட்படுகிறீர்கள். இதுபோன்ற இணைப்பு இணையதளங்களின் பக்கங்கள் எப்போதுமே கிடைக்கும் என்பதை பிரதமர் அலுவலகம் உறுதி செய்ய முடியாது. மேலும், இணைப்பு இணையதளங்களில் உள்ள காப்புரிமை பெற்ற விவரங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக பிரதமர் அலுவலகம் எந்த அனுமதியும் பெறவில்லை. இதனால் பயன்பாட்டாளர்கள் இதுபோன்ற விஷயங்களை பயன்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட இணையங்களின் உரிமையாளர்களிடம் அனுமதி பெற அறிவுறுத்தப்படுகிறார்கள். இணைப்பு இணையதளங்கள் இந்திய இணையதள சட்டங்களின் விதிமுறைகளின் கீழ் இயங்குகின்றனவா என்பது குறித்தும் பிரதமர் அலுவலகம் எந்த உறுதிமொழியும் அளிக்க முடியாது.
மறுதலிப்பு
தகவல்களுக்காக மட்டுமே பிரதமர் அலுவலக இணையதளம் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு தகவலும் துல்லியமாகவும், நடப்பு நாள் வரையிலான விவரங்களைக் கொண்டதாக இருக்கும்படி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இணையதளத்தில் பதிவிடப்பட்ட சுற்றறிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஏதாவது சந்தேகம் எழுந்தால் பிரதமர் அலுலவகத்தைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பிரதமர் அலுலவகத்தால் காகித வடிவில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கும் இணையதளத்தில் பதிவிடப்பட்ட விவரங்களுக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டால், காகித வடிவ சுற்றறிக்கையில் உள்ள தகவல் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தின் கவனத்துக்கும் உடனடியாக கொண்டு வர கேட்டுக் கொள்ளப்படுகிறது.