Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இரு அவைகளிலும் அரசியலமைப்புச் சட்ட (127-வது திருத்த) மசோதா 2021 நிறைவேற்றம் : பிரதமர் வாழ்த்து


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அரசியலமைப்புச் சட்ட (127-வது திருத்த) மசோதா 2021 நிறைவேறி உள்ளதை பிரதமர் திரு.நரேந்திர மோடி நமது நாட்டின் மைல்கல் தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளதாவது :

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அரசியலமைப்புச் சட்ட (127-வது திருத்த) மசோதா 2021 நிறைவேறி உள்ளது நமது நாட்டின் மைல்கல் தருணம். சமூக அதிகாரமயமாக்கலை இந்த மசோதா அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும். விளிம்பு நிலை பிரிவினரின் மாண்பு, வாய்ப்பு மற்றும் நீதியை உறுதிப்படுத்தும் அரசின் கடப்பாட்டை இது பிரதிபலிக்கிறது”.

 

***