பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மோட்டார் வாகன (திருத்தச் சட்டம்) சட்டம் 2016க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்திருத்தம் கீழ்கண்ட முன்னேற்றங்களை ஏற்படுத்த வல்லது :
வாகனங்களின் பதிவை எளிமையாக்கும் வகையில் வாகன முகவர்களே வாகனங்களை பதிவு செய்யவும், தற்காலிக பதிவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது.
சாலைப் பாதுகாப்பை பொருத்தவரை, சாலை விதிகளை மீறுவோர்க்கு அபராதத்தை அதிகரிக்க வகை செய்யப்பட்டுள்ளது. வயது வராதோர் வாகனம் ஓட்டுதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டுதல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், அதிக எடையோடு வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றுக்கான அபராதங்கள் கடுமையாக்கப் பட்டுள்ளன. தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதற்கு அபராதம் கடுமையாக்கப் படுவதோடு, மின்னணு முறையில் சாலை விதி மீறல்களை கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்ய சட்டம் வகை செய்கிறது. விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்கள் தொடர்பான சலுகைகளையும் இச்சட்டம் உறுதி செய்கிறது. வாகனங்களின் தயார் நிலை தொடர்பாக தானியங்கி முறையில் சோதனை செய்வதை 1 அக்டோபர் 2018 முதல் கட்டாயமாக்க வகை செய்யப்பட்டுள்ளது. சாலைக்கு தகுதியானதா என்று வாகனங்களை பரிசோதனை செய்வதில் உள்ள ஊழலை களைய இது உதவும். விதிகளை மீறுதல் மற்றும் சுற்றுச்சூழல் விதிகளை மீறுதல் ஆகியவற்றுக்கு தீவிரமான அபராதங்களும், வாகன கட்டுமானம் மற்றும் உதிரி பாகங்களை தயாரிப்போர்க்கு அபராதங்கள் ஆகியன மற்ற முக்கிய அம்சங்கள்.
வாகனப் பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்குவதை சீராக்கும் பொருட்டு, “வாஹன்” மற்றும் “சாரதி” என்ற தேசிய பதிவேடுகள் உருவாக்கப்படும். இது நாடெங்கும் ஒரே முறையில் வாகனப் பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதை உறுதி செய்யும்.
வாகனங்களை சோதனை செய்து சான்றிதழ் வழங்கும் முறை ஒழுங்குபடுத்தப்பட உள்ளது. வாகனங்களுக்கு ஒப்புதல் வழங்கும் நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
வாகன ஓட்ட பழகுவதற்கான நடைமுறைகள் வலுவாக்கப்பட்டு ஓட்டுநர் உரிமம் வழங்குவது எளிமையாக்கப்பட உள்ளது. வணிக வாகன ஓட்டுநர்களுக்கு தற்போது உள்ள தட்டுப்பாடு இதனால் குறையும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான போக்குவரத்து வசதிக்காக அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வாகனங்களை உருவாக்குவதில் அவர்களுக்கேற்றவாறு திருத்தங்கள் செய்யவும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அவர்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்த மோட்டார் வாகன (திருத்தச் சட்டம்) சட்டம் 2016 சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் துறையில் மிக முக்கியமான திருத்தம் என்று வர்ணித்துள்ளார். பிரதமர் அவர்களின் நல் வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இந்தத் திருத்தங்களை செய்வதில் முக்கிய பங்களிப்பு செய்த போக்குவரத்து அமைச்சர்களின் குழுவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். பாராளுமன்றம் இந்தத் திருத்தங்களை அடுத்த வாரம் ஏற்றுக் கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அனைத்து தரப்பும் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, சாலைப் போக்குவரத்தை பாதுகாப்பானதாகவும், சுற்றுச் சூழலுக்கு ஏற்றதாகவும் மாற்ற உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
177 |
பொது |
ரூபாய் 100 |
ரூபாய் 500 |
177A |
சாலை விதிகளை மீறுதல் |
ரூபாய் 100 |
ரூபாய் 500 |
178 |
கட்டணமின்றி பயணம் செய்தல் |
ரூபாய் 200 |
ரூபாய் 500 |
179 |
உத்தரவுகளை மீறுதல் |
ரூபாய் 500 |
ரூபாய் 2000 |
180 |
அனுமதியின்றி வாகனங்களை பயன்படுத்துதல் |
ரூபாய் 1000 |
ரூபாய் 5000 |
181 |
ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் |
ரூபாய் 500 |
ரூபாய் 5000 |
182 |
தடை செய்யப்பட்ட பிறகும் வாகனம் ஓட்டுதல் |
ரூபாய் 500 |
ரூபாய் 10,000 |
182 B |
அதிக எடையுள்ள வாகனங்கள் |
புதிது |
ரூபாய் 5000 |
183 |
அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல் |
ரூபாய் 400 |
ரூபாய் 1000 for சிறிய வாகனத்துக்கு ரூபாய் 2000 for நடுத்தர பயணிகள் வாகனத்துக்கு |
184 |
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் |
ரூபாய் 1000 |
ரூபாய் 5000 வரை |
185 |
குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல் |
ரூபாய் 2000 |
ரூபாய் 10,000 |
189 |
அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல் / போட்டி போட்டு வாகனம் ஓட்டுதல் |
ரூபாய் 500 |
ரூபாய் 5,000 |
192 A |
பர்மிட் இல்லா வாகனம் |
ரூபாய் 5000 வரை |
ரூபாய் 10,000 வரை |
193 |
ஓட்டுனர் உரிம விதிகளை மீறுதல் |
புதிது |
ரூபாய் 25,000 முதல் ரூபாய் 1,00,000 |
194 |
அதிக எடையோடு வாகனம் ஓட்டுதல் |
ரூபாய் 2000 மற்றும் கூடுதல் டன்னுக்கு ரூபாய் 1000 |
ரூபாய் 20,000 மற்றும் கூடுதல் டன்னுக்கு ரூபாய் 2000
|
194 A |
அதிக பயணிகளை ஏற்றிச் செல்லுதல் |
|
ஒரு பயணிக்கு ரூபாய் 1000 |
194 B |
சீட் பெல்ட் அணியாமை |
ரூபாய் 100 |
ரூபாய் 1000 |
194 C |
இரு சக்கர வாகனத்தில் அதிக எடை |
ரூபாய் 100 |
ரூபாய் 2000, மற்றும் 3 மாதத்துக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து |
194 D |
தலைக் கவசம் அணியாமை |
ரூபாய் 100 |
ரூபாய் 1000 மற்றும் 3 மாதத்துக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து |
194 E |
அவசர வாகனங்களுக்கு வழி விடாமை |
புதிது |
ரூபாய் 10,000 |
196 |
காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல் |
ரூபாய் 1000 |
ரூபாய் 2000 |
199 |
சிறார்கள் வாகனம் ஓட்டுதல் |
புதிது. |
பெற்றோர் / காப்பாளர் பொறுப்பு. ரூபாய் 25,000 மற்றும் 3 ஆண்டு சிறைத் தண்டனை. சிறார்கள் மீது சிறார் சட்டப்படி நடவடிக்கை வாகனப் பதிவு ரத்து. |
206 |
உரிமங்கள் / ஆவணங்களை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம். |
|
பிரிவு u/s 183, 184, 185, 189, 190, 194C, 194D, 194Eன்படி உரிமம் ரத்து. |
210 B |
உரிய அதிகாரிகள் தவறிழைத்தால் |
|
இரு மடங்கு அபராதத் தொகை |
பிரிவு | பழைய விதி | புதிய விதியின்படி அபராதம் |
---|