Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா, 2 ஆண்டுகள் பணியை நிறைவு செய்வதை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா, இரண்டு ஆண்டுகள் தமது பணியை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

கடந்த இரண்டு ஆண்டுகளில் திரு ஓம் பிர்லா அவர்கள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால்  நாடாளுமன்ற ஜனநாயகம் வளம்பெற்றுசெயல்திறன் மேம்படுத்தப்பட்டு, ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க மற்றும் மக்களுக்கு உகந்த சட்டங்கள் இயற்றப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வாழ்த்துகள்!

முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்றவர்கள், இளம் உறுப்பினர்கள் மற்றும் பெண்களுக்கு மக்களவையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்குவதில் திரு ஓம் பிர்லா சிறப்பு முக்கியத்துவம் தருவார் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.  நமது ஜனநாயகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஏராளமான குழுக்களையும் அவர் வலுப்படுத்தியுள்ளார்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

*****************