Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா கம்போடியா இடையே முதலீட்டை ஊக்குவிக்கும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்தியா கம்போடியா இடையே இருதரப்பு முதலீட்டை ஊக்குவிக்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையே முதலீட்டை அதிகரிக்கவும் பாதுகாப்பளிக்கவும் வகை செய்வதுடன், இருநாடுகளின் பரப்புக்குள்ளும் பரஸ்பரம் இருதரப்பு முதலீட்டை அதிகரிக்கவும் வழிவகை செய்கிறது.

அத்துடன் ஒருநாட்டு முதலீட்டாளர் மற்றொரு நாட்டில் அதன் வரம்புக்கு உள்பட்ட பகுதியில் முதலீடு செய்யவும், சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு முதலீட்டு அனுமதி வழங்கவும், இந்த ஒப்பந்தம் ஆதரவளிக்கும்.

இந்த ஒப்பந்தம் என்பது இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் ஆகும். அதாவது மத்திய அமைச்சரவை கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்தபடி, இந்திய மாதிரி இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் ஷரத்துகள்படி உருவானதாகும்.