Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இங்கிலாந்து பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடல்


இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அன்று தொலைபேசி மூலம் உரையாடினார். புதிதாக பொறுப்பு ஏற்றதற்காக பிரதமர் மோடி மே அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் தான் இங்கிலாந்துக்கு மேற்கொண்ட பயணத்தை நினைவு கூறிய பிரதமர், இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை வலுப்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். பல்வேறு சர்வதேச அரங்குகளில் இந்தியாவிற்கு துணை நின்றதற்காக இங்கிலாந்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இங்கிலாந்து பிரதமர் மே தனக்கு வாழ்த்து தெரிவித்தமைக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். தற்போதுள்ள சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு மற்றும் ஒத்துழைப்பினை வலுப்படுத்த பிரதமர் மோடியுடன் இணைந்து பணி புரிய காத்திருப்பதாக பிரதமர் மே அப்போது தெரிவித்தார்.