Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மவுலானா வஹித்துதின் கான் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி, மவுலானா வஹித்துதின் கான் மறைவு குறித்து தனது துயரைத் தெரிவித்துள்ளார்.

திரு.மோடி சுட்டுரை வாயிலாக வெளியிட்ட செய்தியில், “மவுலானா வஹித்துதின் கான் மறைவை அறிந்து துயருற்றேன். இறையியல், ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் அவரது உள்ளார்ந்த அறிவுக்காக அவர் என்றும் நினைவு கூரப்படுவார். சமுதாயப் பணியிலும், சமூக அதிகாரமயமாக்கலிலும் அவர் பெரும் விருப்பம் கொண்டிருந்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தியடைவதாக” என்று கூறியுள்ளார்.

 

*****