அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து, 2021 மார்ச் 12-ம் தேதி ‘பாதயாத்திரையை’ (சுதந்திர யாத்திரை) பிரதமர் திரு நரேந்திர மோடி கொடியைசத்து தொடங்கிவைக்கிறார் மற்றும் இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு விழா முன்னோட்ட நடவடிக்கைகளையும் தொடங்கி வைக்கிறார். இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கான பல்வேறு கலாச்சார மற்றும் டிஜிட்டல் நடவடிக்கைகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். காலை 10.20 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ்ரத், மத்திய இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல், குஜராத் முதல்வர் திரு விஜய் ருபானி ஆகியோர் கலந்து கொள்வர்.
சுதந்திரத்தின் அம்ருத் மகோத்சவம்
இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டை நினைவு கூறும் வகையில், சுதந்திரத்தின் அம்ருத் மகோத்சவம் என்ற பெயரில் பல நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தவுள்ளது. மக்கள் சேவை உணர்வுடன் மக்கள் விழாவாக இந்த மகோத்சவம் கொண்டாடப்படவுள்ளது.
இந்த விழாவின் கீழ் கொள்கைகளை வகுக்கவும், பல நிகழ்ச்சிகளை திட்டமிடவும், மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் தேசிய செயலாக்க குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோட்ட நடவடிக்கைகள், 2022 ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு, 75 வாரங்களுக்கு முன்பாக தொடங்குகின்றன.
பாதயாத்திரை
பாதயாத்திரையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து 81 பேர் இதில் கலந்து கொண்டு நவ்சாரி மாவட்டத்தில் உள்ள தண்டி வரை 241 மைல் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். 25 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை ஏப்ரல் 5-ம் தேதி முடிவடையும். பாதயாத்திரையில் பலதரப்பட்ட மக்களும் வழியில் கலந்து கொள்கின்றனர். முதல் 75 கி.மீ தூர பாதயாத்திரைக்கு மத்திய அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் தலைமை ஏற்கிறார்.
முன்னோட்ட நிகழ்ச்சிகள்
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவின் கீழ் திட்டமிடப்பட்ட திரைப்படம், இணையதளம், பாட்டு, தற்சார்பு சர்க்கா மற்றும் தற்சார்பு இன்குபேட்டர் போன்ற பல நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறுகின்றன.
இந்த நடவடிக்கைகளுடன், இந்தியாவின் ஆற்றலை கொண்டாடும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இதில் இசை, நடனம், அரசியல் சாசன முன்னுரையை பல மொழிகளில் கூறுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்தியாவின் எதிர்காலமாக, இளைஞர் சக்தியை சித்தரிக்கும் நிகழ்ச்சியில் 75 பேர் பாடுவர் , 75 பேர் நடனமாடுவர்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும், நாடு முழுவதும் மார்ச் 12-ம் தேதி பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளோடு, மத்திய கலாச்சார அமைச்சகத்தின் இந்திய தொல்பொருள் ஆய்வு மற்றும் மண்டல கலாச்சார மையங்கள், மத்திய இளைஞர் நலன் அமைச்சகம் மற்றும் டிரைஃபட் ஆகியவை பல நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளன.
*****************
12th March is a special day in India’s glorious history. On that day in 1930, the iconic Dandi March led by Mahatma Gandhi began. Tomorrow, from Sabarmati Ashram we will commence Azadi Ka Amrut Mahotsav, to mark 75 years since Independence. https://t.co/8E4TUHaxlo
— Narendra Modi (@narendramodi) March 11, 2021