Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் சுவிஸ் கூட்டமைப்பு இடையே கையெழுத்திடப்பட்ட திறன் மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்காக அமைச்சரவை ஒப்புதல்


இந்தியா மற்றும் சுவிஸ் கூட்டமைப்பு இடையே ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட திறன் மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய அரசு மற்றும் சுவிட்சர்லாந்து அரசின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுக் கண்டுபிடிப்புகள் துறை இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணை அமைச்சர் ஜூலை 20-22, 2016 வரை சுவிட்சர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 22.06.2016 அன்று கையெழுத்திடப்பட்டது.

திறன் மேம்பாடு துறையில் உள்ள சிறந்த பயிற்சிகள் மற்றும் முயற்சிகளை பெருமளவில் பரிமாறிக்கொள்வதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். இந்த ஒப்பந்தத்தின் செயல்பாட்டை கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் கூட்டு செயற்பாட்டுக் குழு அமைக்கப்படும். திறன் மேம்பாடு துறையில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும்.