Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ குரு கோபிந்த் சிங்கின் பிறந்த நாளில் பிரதமர் மரியாதை


ஸ்ரீ குரு கோபிந்த் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்திகளில், “ஸ்ரீ குரு கோபிந்த் சிங்கின் பிறந்த நாளான பக்தி கமழும் தருணத்தில் நான் அவரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். நேர்மையான, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்காக அவர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது கொள்கைகளை நிலைநாட்டுவதில் உறுதியுடன் செயல்பட்டார். அவரது துணிவையும் தியாகத்தையும் நாம் நினைவு கூர்கிறோம்.

ஸ்ரீ குரு கோபிந்த் சிங் அவர்களின் 350-வது பிறந்தநாள் நமது ஆட்சிக்காலத்தில் நிகழும் வகையில் குரு சாகிப்கள் என் மீது சிறப்பு கிருபையை அருளியுள்ளனர். பாட்னாவில் நடைபெற்ற பிரம்மாண்ட கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நினைவுகூர்கிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.

******