மேற்கு வங்காள ஆளுநர் திரு.சங்கர் அவர்களே! மத்திய கல்வி அமைச்சர் டாக்டர்.ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ அவர்களே! துணைவேந்தர் பேராசிரியர் பித்யுத் சக்கரவர்த்தி அவர்களே, பேராசிரியர்களே, மாணவர்களே, முன்னாள் மாணவர்களே, சகோதர, சகோதரிகளே! விஸ்வபாரதி நூறாவது ஆண்டு விழா ஒவ்வொரு இந்தியனுக்கும் மிகவும் பெருமை வாய்ந்தது.
நண்பர்களே!
விஸ்வ பாரதியின் நூறாண்டு பயணம் மிகவும் சிறப்புமிக்கது. குருதேவ் அவர்களின் கொள்கைகள், தொலைநோக்குப் பார்வை, அன்னை இந்தியாவிற்காக அவர் வழங்கிய கடின உழைப்பின் உண்மையான எடுத்துக்காட்டாக விஸ்வபாரதி விளங்குகிறது. தலைசிறந்த இசைக் கலைஞர்கள் – பாடலாசிரியர்கள், எழுத்தாளர்கள் – கலைஞர்கள், பொருளியலாளர்கள், விஞ்ஞானிகள் நிதி வல்லுநர்கள் போன்றவர்களை வழங்கிய விஸ்வபாரதி புதிய இந்தியாவை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றது. சூரிய ஒளிக் கூட்டமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலக அளவில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. பாரீஸ் ஒப்பந்தத்தின் இலக்கை அடையும் பாதையில் சென்று கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியா மட்டுமே மிகப்பெரிய நாடாக உள்ளது.
நண்பர்களே!
சுதந்திரப் போராட்டத்தை பற்றி நாம் பேசும் போது பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டு காலகட்டம் தான் நமக்கு நினைவுக்கு வரும். எனினும் இந்த இயக்கங்களுக்கான அடித்தளம் அதற்குப் பல காலங்கள் முன்பே அமைக்கப்பட்டது. இந்தியாவின் போராட்டத்துக்கான ஆற்றல், பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த இயக்கங்களில் இருந்து கிடைத்தது. இந்தியாவின் ஆன்மீக, கலாச்சார ஒற்றுமையை பக்தி இயக்கம் வலுவடையச் செய்தது. பக்தி யுகத்தில் முனிவர்கள், மகான்கள், ஆச்சாரியர்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், திசைகளிலும் மக்களின் உணர்வைத் தட்டி எழுப்பச் செய்தனர். பலவிதமான போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டிருந்த இந்தியாவில் பக்தி இயக்கம் ஒன்றிணைந்த உணர்வு நிலையையும், தன்னம்பிக்கையையும் பல நூறாண்டுகள் நீடிக்கச் செய்தது.
நண்பர்களே!
பக்தி இயக்கம் பற்றி நாம் பேசும் போது திரு.ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றிக் குறிப்பிடாமல் அது முழுமை பெறாது. இந்தத் தலைசிறந்த மகானால் தான் நமக்கு சுவாமி விவேகானந்தர் கிடைத்தார். சுவாமி விவேகானந்தரிடம் பக்தி, அறிவாற்றல் மற்றும் செயல்திறன் அனைத்தும் ஒன்றாகக் கலந்திருந்தன.
நண்பர்களே!
பல நூறு ஆண்டுகள் நீடித்த பக்தி இயக்கத்தைத் தவிர, கர்ம இயக்கமும் நிகழ்ந்தது. காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய மக்கள் பல நூற்றாண்டுகள் போராடினர். சத்ரபதி சிவாஜி மகாராஜ், மஹாராணா பிரதாப், ஜான்சி ராணி லட்சுமிபாய், ராணி பாய், கிட்டூரின் ராணி சென்னம்மா என ஏராளமானோர் தங்களது உழைப்பாலும் தியாகத்தாலும் சாமானிய மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடினர். பின்னர் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்திற்கு இது ஊக்க சக்தியாகத் திகழ்ந்தது.
நண்பர்களே!
பக்தியும், ஈடுபாடும் விரைந்து செயல்பட்ட போது மூன்றாவதாக அறிவு நதியும் விடுதலை இயக்கத்தில் சங்கமித்தது. அறிவு சார்ந்த கொள்கை இயக்கத்தின் வாயிலாக சுதந்திரப் போராட்டத்தை வெல்வதும், அதே வேளையில் ஒளிமயமான எதிர்காலத்திற்குப் புதிய சந்ததியினரைத் தயார்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாக இருந்தது. விஸ்வபாரதி பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரி, ஆந்திரா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என ஏராளமான கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் முக்கியமான பங்காற்றின. இந்தப் பல்கலைக்கழகங்களிலிருந்து புதிய அறிஞர்கள் தோன்றினார்கள். இந்திய சுதந்திரத்திற்கான கொள்கை சார்ந்த இயக்கத்திற்கு கல்வி நிறுவனங்கள் புதிய ஆற்றலையும், புதிய திசையையும், புதிய உயரத்தையும் வழங்கின. பக்தி இயக்கத்தால் நாம் ஒன்றுபட்டு இருந்த போது அறிவு சார்ந்த இயக்கம் நமக்கு அறிவுசார் பலத்தையும் கர்ம இயக்கம் நமது உரிமைக்காக நாம் போராடும் தைரியத்தையும் நமக்கு வழங்கின. பல நூற்றாண்டுகளாக நீடித்த ஏராளமான இயக்கங்கள் தியாகம், தவம் மற்றும் உறுதிக்கு தனித்துவமான உதாரணங்களாக விளங்கின. இந்த இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் தங்களது உயிரைத் தியாகம் செய்ய முன்வந்தனர். இந்த இயக்கங்களால் கவரப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.
நண்பர்களே!
குருதேவ் அவர்களால் நிறுவப்பட்ட விஸ்வபாரதி பல்கலைக்கழகம், அறிவுசார் இயக்கத்திற்குக் கூடுதல் ஊக்கத்தை அளித்தது. இந்திய கலாச்சாரத்துடனும், பாரம்பரியத்துடன் இணைக்கும் வகையில் விஸ்வபாரதியை வடிவமைத்ததன் மூலம் தேசிய வாதத்திற்கு அவர் வலுவான அடையாளத்தை வழங்கினார். அதே வேளையில் உலக சகோதரத்துவத்துக்கு சமமான முக்கியத்துவத்தை அவர் அளித்தார்.
நண்பர்களே!
இந்தியாவிலுள்ள தலை சிறந்தவற்றால் உலகம் பயனடைய வேண்டும், உலகிலுள்ள நன்மைகளை இந்தியா கற்க வேண்டும் என்பதே குருதேவின் தொலைநோக்குப் பார்வை. உங்கள் பல்கலைக்கழகத்தின் பெயரையும் பாருங்கள் விஸ்வ – பாரதி. பாரதத் தாயையும், உலகையும் ஒருங்கிணைத்துள்ளது. விஸ்வபாரதி குறித்த குருதேவின் தொலைநோக்குப் பார்வை தான் தற்சார்பு இந்தியாவின் சாராம்சமும். தற்சார்பு இந்தியா பிரச்சாரம் உலக அளவில் இந்திய நன்மைக்கான வழித்தடமாகும். இந்தியாவுக்கு அதிகாரம் அளிப்பதும், இந்தியாவின் வளமையை உலகிற்கு அளிப்பதும் இதன் நோக்கம். வலுவான மற்றும் தற்சார்பு இந்தியா, உலக சமூகத்திற்கு எப்போதும் பயன் அளித்துள்ளது என்பதற்கு வரலாறு ஓர் எடுத்துக்காட்டு.
நண்பர்களே!
இந்தியாவின் உயிர்நாடி இந்தியாவின் தற்சார்பு மற்றும் இந்தியாவின் சுயமரியாதை ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. இந்தியாவின் சுயமரியாதையைப் பாதுகாப்பதற்காக வங்காளத்தின் பல தலைமுறையினர் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்துள்ளனர். வரலாற்றில் பதிவு செய்ய முடியாத அளவிலான மக்கள் பாடுபட்டுள்ளனர். அவர்களை உதாரணமாகக் கொண்டு அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு நாம் உழைக்க வேண்டும்.
நண்பர்களே!
வலுவான, தற்சார்பு இந்தியாவிற்காக நீங்கள் அளிக்கும் பங்களிப்பு இந்த உலகையே சிறந்த இடமாக மாற்றும். இன்னும் 27 ஆண்டுகளில் இந்தியா 100 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறது. புதிய இலக்குகளை, புதிய ஆற்றலை, புதிய வழித்தடத்தில் நமது பயணத்தை நாம் தொடங்க வேண்டும். இந்தப் பயணத்தில் குருதேவ் அவர்களின் கொள்கைகளை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். இந்தப் பெருந்தொற்று உள்ளூர் பொருள்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துரைத்துள்ளது. பவுஸ் நிலா என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்கு, பெருந்தொற்றின் காரணமாக கலைஞர்களால் வர இயலவில்லை. சுயமரியாதை மற்றும் தற்சார்பு குறித்து நாம் பேசுகையில் உங்களிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். தயவுசெய்து என்னுடன் இணைந்து உதவுங்கள். பவுச் விழாவிற்கு வரும் கலைஞர்களைத் தொடர்புகொண்டு அவர்களது கைவினைப் பொருள்களை எவ்வாறு இணையதளம் வாயிலாக சந்தைப்படுத்தலாம் என்பதை அறியுமாறு விஸ்வபாரதி மாணவர்களை நான் வலியுறுத்துகிறேன். மேலும் எதிர்காலத்தில் தங்கள் பொருள்களை உலகச் சந்தையில் எவ்வாறு விற்பனை செய்வது என்பது குறித்து உள்ளூர் கலைஞர்களுக்குக் கற்றுத் தரப்பட வேண்டும். அவர்களுக்கு வழியைக் காட்டுங்கள். இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் தான் நாடு நன்னிலை அடைய முடியும், குருதேவின் கனவையும் நனவாக்க முடியும்.
நண்பர்களே!
குருதேவ் அவர்கள் விஸ்வபாரதியை கல்வி மையமாக மட்டும் அமைக்கவில்லை. கல்வி பயிலும் இடமாகவும், கற்பதற்கான புனிதத் தலமாகவும் அவர் அதைக் கருதினார். இன்று தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் நாடு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. இந்த கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் விஸ்வபாரதியும் முக்கியமான பங்கு வகிக்கிறது. உங்களுக்கு 100 ஆண்டுகால அனுபவமும் குருதேவின் ஆசீர்வாதங்களும் இருக்கின்றன. எனவே பிற கல்வி நிறுவனங்களுடன் நீங்கள் அதிக அளவில் விவாதம் நடத்தினால் இந்தக் கொள்கைகள் குறித்து அந்த நிறுவனங்களுக்குக் கூடுதல் புரிதல் ஏற்படும்.
நண்பர்களே!
நீங்கள் எங்கு சென்றாலும், எந்தத் துறையில் ஈடுபட்டாலும், புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக நீங்கள் உழைக்க வேண்டும். நாட்டில் ஏராளமான வாய்ப்புகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நன்றி.
——
विश्वभारती की सौ वर्ष यात्रा बहुत विशेष है।
— PMO India (@PMOIndia) December 24, 2020
विश्वभारती, माँ भारती के लिए गुरुदेव के चिंतन, दर्शन और परिश्रम का एक साकार अवतार है।
भारत के लिए गुरुदेव ने जो स्वप्न देखा था, उस स्वप्न को मूर्त रूप देने के लिए देश को निरंतर ऊर्जा देने वाला ये एक तरह से आराध्य स्थल है: PM
हमारा देश, विश्व भारती से निकले संदेश को पूरे विश्व तक पहुंचा रहा है।
— PMO India (@PMOIndia) December 24, 2020
भारत आज international solar alliance के माध्यम से पर्यावरण संरक्षण में विश्व का नेतृत्व कर रहा है।
भारत आज इकलौता बड़ा देश है जो Paris Accord के पर्यावरण के लक्ष्यों को प्राप्त करने के सही मार्ग पर है: PM
जब हम स्वतंत्रता संग्राम की बात करते हैं तो हमारे मन में सीधे 19-20वीं सदी का विचार आता है।
— PMO India (@PMOIndia) December 24, 2020
लेकिन ये भी एक तथ्य है कि इन आंदोलनों की नींव बहुत पहले रखी गई थी।
भारत की आजादी के आंदोलन को सदियों पहले से चले आ रहे अनेक आंदोलनों से ऊर्जा मिली थी: PM
भारत की आध्यात्मिक और सांस्कृतिक एकता को भक्ति आंदोलन ने मजबूत करने का काम किया था।
— PMO India (@PMOIndia) December 24, 2020
भक्ति युग में,
हिंदुस्तान के हर क्षेत्र,
हर इलाके, पूर्व-पश्चिम-उत्तर-दक्षिण,
हर दिशा में हमारे संतों ने,
महंतों ने,
आचार्यों ने देश की चेतना को जागृत रखने का प्रयास किया: PM
भक्ति आंदोलन वो डोर थी जिसने सदियों से संघर्षरत भारत को सामूहिक चेतना और आत्मविश्वास से भर दिया: PM
— PMO India (@PMOIndia) December 24, 2020
भक्ति का ये विषय तब तक आगे नहीं बढ़ सकता जब तक महान काली भक्त श्रीरामकृष्ण परमहंस की चर्चा ना हो।
— PMO India (@PMOIndia) December 24, 2020
वो महान संत, जिनके कारण भारत को स्वामी विवेकानंद मिले।
स्वामी विवेकानंद भक्ति, ज्ञान और कर्म, तीनों को अपने में समाए हुए थे: PM
उन्होंने भक्ति का दायरा बढ़ाते हुए हर व्यक्ति में दिव्यता को देखना शुरु किया।
— PMO India (@PMOIndia) December 24, 2020
उन्होंने व्यक्ति और संस्थान के निर्माण पर बल देते हुए कर्म को भी अभिव्यक्ति दी, प्रेरणा दी: PM
भक्ति आंदोलन के सैकड़ों वर्षों के कालखंड के साथ-साथ देश में कर्म आंदोलन भी चला।
— PMO India (@PMOIndia) December 24, 2020
भारत के लोग गुलामी और साम्राज्यवाद से लड़ रहे थे।
चाहे वो छत्रपति शिवाजी हों, महाराणा प्रताप हों, रानी लक्ष्मीबाई हों, कित्तूर की रानी चेनम्मा हों, भगवान बिरसा मुंडा का सशस्त्र संग्राम हो: PM
अन्याय और शोषण के विरुद्ध सामान्य नागरिकों के तप-त्याग और तर्पण की कर्म-कठोर साधना अपने चरम पर थी।
— PMO India (@PMOIndia) December 24, 2020
ये भविष्य में हमारे स्वतंत्रता संग्राम की बहुत बड़ी प्रेरणा बनी: PM
जब भक्ति और कर्म की धाराएं पुरबहार थी तो उसके साथ-साथ ज्ञान की सरिता का ये नूतन त्रिवेणी संगम, आजादी के आंदोलन की चेतना बन गया था।
— PMO India (@PMOIndia) December 24, 2020
आजादी की ललक में भाव भक्ति की प्रेरणा भरपूर थी: PM
समय की मांग थी कि ज्ञान के अधिष्ठान पर आजादी की जंग जीतने के लिए वैचारिक आंदोलन भी खड़ा किया जाए और साथ ही उज्ज्वल भावी भारत के निर्माण के लिए नई पीढ़ी को तैयार भी किया जाए।
— PMO India (@PMOIndia) December 24, 2020
और इसमें बहुत बड़ी भूमिका निभाई, कई प्रतिष्ठित शिक्षण संस्थानों ने, विश्वविद्यालयों ने: PM
इन शिक्षण संस्थाओं ने भारत की आज़ादी के लिए चल रहे वैचारिक आंदोलन को नई ऊर्जा दी, नई दिशा दी, नई ऊंचाई दी।
— PMO India (@PMOIndia) December 24, 2020
भक्ति आंदोलन से हम एकजुट हुए,
ज्ञान आंदोलन ने बौद्धिक मज़बूती दी और
कर्म आंदोलन ने हमें अपने हक के लिए लड़ाई का हौसला और साहस दिया: PM
सैकड़ों वर्षों के कालखंड में चले ये आंदोलन त्याग, तपस्या और तर्पण की अनूठी मिसाल बन गए थे।
— PMO India (@PMOIndia) December 24, 2020
इन आंदोलनों से प्रभावित होकर हज़ारों लोग आजादी की लड़ाई में बलिदान देने के लिए आगे आए: PM
वेद से विवेकानंद तक भारत के चिंतन की धारा गुरुदेव के राष्ट्रवाद के चिंतन में भी मुखर थी।
— PMO India (@PMOIndia) December 24, 2020
और ये धारा अंतर्मुखी नहीं थी।
वो भारत को विश्व के अन्य देशों से अलग रखने वाली नहीं थी: PM
उनका विजन था कि जो भारत में सर्वश्रेष्ठ है, उससे विश्व को लाभ हो और जो दुनिया में अच्छा है, भारत उससे भी सीखे।
— PMO India (@PMOIndia) December 24, 2020
आपके विश्वविद्यालय का नाम ही देखिए: विश्व-भारती।
मां भारती और विश्व के साथ समन्वय: PM
विश्व भारती के लिए गुरुदेव का विजन आत्मनिर्भर भारत का भी सार है।
— PMO India (@PMOIndia) December 24, 2020
आत्मनिर्भर भारत अभियान भी विश्व कल्याण के लिए भारत के कल्याण का मार्ग है।
ये अभियान, भारत को सशक्त करने का अभियान है, भारत की समृद्धि से विश्व में समृद्धि लाने का अभियान है: PM
Speaking at #VisvaBharati University. Here is my speech. https://t.co/YH17s5BAll
— Narendra Modi (@narendramodi) December 24, 2020
विश्व भारती की सौ वर्ष की यात्रा बहुत विशेष है।
— Narendra Modi (@narendramodi) December 24, 2020
मुझे खुशी है कि विश्व भारती, श्रीनिकेतन और शांतिनिकेतन निरंतर उन लक्ष्यों की प्राप्ति का प्रयास कर रहे हैं, जो गुरुदेव ने तय किए थे।
हमारा देश विश्व भारती से निकले संदेश को पूरे विश्व तक पहुंचा रहा है। pic.twitter.com/j9nhrzv0WL
जब हम स्वतंत्रता संग्राम की बात करते हैं तो हमारे मन में सीधे 19वीं और 20वीं सदी का विचार आता है।
— Narendra Modi (@narendramodi) December 24, 2020
लेकिन इन आंदोलनों की नींव बहुत पहले रखी गई थी। भक्ति आंदोलन से हम एकजुट हुए, ज्ञान आंदोलन ने बौद्धिक मजबूती दी और कर्म आंदोलन ने लड़ने का हौसला दिया। pic.twitter.com/tjKTpaFKKF
गुरुदेव सर्वसमावेशी, सर्वस्पर्शी, सह-अस्तित्व और सहयोग के माध्यम से मानव कल्याण के बृहद लक्ष्य को लेकर चल रहे थे।
— Narendra Modi (@narendramodi) December 24, 2020
विश्व भारती के लिए गुरुदेव का यही विजन आत्मनिर्भर भारत का भी सार है। pic.twitter.com/zel7VOHWoC
विश्व भारती की स्थापना के 27 वर्ष बाद भारत आजाद हो गया था।
— Narendra Modi (@narendramodi) December 24, 2020
अब से 27 वर्ष बाद भारत अपनी आजादी के 100 वर्ष का पर्व मनाएगा।
हमें नए लक्ष्य गढ़ने होंगे, नई ऊर्जा जुटानी होगी, नए तरीके से अपनी यात्रा शुरू करनी होगी। इसमें हमारा मार्गदर्शन गुरुदेव के ही विचार करेंगे। pic.twitter.com/nTha5OJlwx
गुरुदेव ने विश्व भारती की स्थापना सिर्फ पढ़ाई के एक केंद्र के रूप में नहीं की थी। वे इसे ‘Seat of Learning’, सीखने के एक पवित्र स्थान के तौर पर देखते थे।
— Narendra Modi (@narendramodi) December 24, 2020
ऐसे में, नई राष्ट्रीय शिक्षा नीति को लागू करने में विश्व भारती की बड़ी भूमिका है। pic.twitter.com/dwMGTZfKxQ
गुरुदेव का जीवन हमें एक भारत-श्रेष्ठ भारत की भावना से भरता है।
— Narendra Modi (@narendramodi) December 24, 2020
यह दिखाता है कि कैसे विभिन्नताओं से भरा हमारा देश एक है, एक-दूसरे से कितना सीखता रहा है।
यही संस्कार गुरुदेव ने भी विश्वभारती को दिए हैं। इन्हीं संस्कारों को हमें मिलकर निरंतर मजबूत करना है। pic.twitter.com/MGZ8OLI56A