பிரதமர் திரு நரேந்திர மோடி, வியட்நாம் பிரதமர் மேதகு திரு.குயென்க்சுவான் ஃபுக் – உடன் காணொலி உச்சி மாநாட்டில் 2020 டிசம்பர் 21 அன்று கலந்துகொள்வார்.
இருதரப்பு பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்து இந்த உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதுடன், இந்தியா – வியட்நாம் இடையேயான உறவை எதிர்காலத்தில் முழுமையான கேந்திர ரீதியான கூட்டணி அளவிற்கு மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்குவார்கள்.
2020ஆம் ஆண்டு இரு நாடுகளும் உயர்மட்டப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து மேற்கொண்டன. வியட்நாம் நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு திருமிகு. டேன் தி காக் தின்ஹ் கடந்த 2020 பிப்ரவரி மாதம் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தார். இருநாட்டுப் பிரதமர்களும் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி கோவிட்-19 பெருந்தொற்றால் இரு நாடுகளிலும் நிலவும் சூழல் குறித்து தொலைபேசி வாயிலாக உரையாடினார்கள். இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் தலைமையில் 17-ஆவது இணை ஆணையக் கூட்டம் காணொலி வாயிலாகக் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற்றது. கடந்த நவம்பர் 27-ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சர், வியட்நாம் நாட்டின் பாதுகாப்பு அமைச்சருடன் காணொலி வாயிலான கூட்டத்தில் பங்கு பெற்றார்.
**********************