மாண்புமிகு பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களே வணக்கம்! வெற்றி தினத்துக்கு வாழ்த்துக்கள், பவுஷ் போர்பனுக்கும் இனிய வாழ்த்துகள்!
இன்று உலகம் முழுவதும் மெய்நிகர் உச்சிமாநாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஊடகம் நமக்கு புதிதல்ல. பல ஆண்டுகளாக, காணொலிக் காட்சி மூலம் நாம் கலந்துரையாடல் நடத்தி வருகிறோம். இப்போது காணொலிக் காட்சி மூலம் பல முறை திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளோம்.
பிரதமர் அவர்களே,
வெற்றி தினத்தைத் தொடர்ந்து, இன்று நமது கூட்டம் நடைபெறுவது மேலும் சிறப்பான முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
விடுதலைக்கு எதிரான படைகளை முறியடித்து வெற்றி கண்ட, பங்களா தேசின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி தினத்தை உங்களுடன் கொண்டாடுவது பெருமைக்குரிய விஷயமாகும்.
இன்று, பங்களாதேஷ் நாற்பத்து ஒன்பதாவது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த இரு நாடுகளின் வீரர்களுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.
இந்த வெற்றி தினத்தையொட்டி, நேற்று நான் இந்தியாவின் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தி, பொன்விழா வெற்றி ஜோதியை ஏற்றினேன்.
இந்த நான்கு வெற்றி ஜோதிகளும் இந்தியா முழுவதும் பயணம் செய்யும். தியாகிகளின் அனைத்து கிராமங்களுக்கும் இவை எடுத்துச் செல்லப்படும்.
டிசம்பர் 16-ம்தேதி முதல், நாம் ஐம்பதாவது வெற்றி ஆண்டைக் கொண்டாடி வருகிறோம். இதையொட்டி இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
பிரதமர் அவர்களே,
முஜிப் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி, இந்தியர்கள் அனைவரின் சார்பில் உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த ஆண்டு பங்களாதேஷ் வருமாறு விடுத்த அழைப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். உங்களுடன் வங்கபந்துவுக்கு மரியாதை செலுத்துவது எனக்கு பெருமையளிக்கும் விஷயமாகும்.
பிரதமர் அவர்களே,
எங்களது முதலில் அண்டை நாடு கொள்கையில், பங்களாதேஷ் மிகப்பெரிய தூணாகும். முதல் நாளிலிருந்து, பங்களாதேசுடன் உறவுகளை வலுப்படுத்தி, மேம்படுத்தி வருவது எனது சிறப்பு முன்னுரிமையாக இருந்து வருகிறது.
உலகப் பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு சவால் மிக்கதாக இருப்பது நிதர்சனம்.
ஆனால், இந்த நெருக்கடியான சூழலில், இந்தியாவும், பங்களாதேசும் நன்றாக ஒத்துழைத்து வருவது மனநிறைவை அளிக்கிறது.
மருந்தாக இருந்தாலும், மருத்துவக் கருவிகளாக இருந்தாலும், சுகாதார நிபுணர்களுடனான பணியாக இருந்தாலும், தடுப்பு மருந்து களமாக இருந்தாலும், சிறப்பான ஒத்துழைப்பை நாம் கொண்டுள்ளோம். இந்த விஷயத்தில் உங்களது தேவைகள் குறித்து நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துவோம்.
சார்க் கட்டமைப்பின் கீழ், பங்களாதேசின் பங்களிப்புக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
சுகாதாரம் தவிர, இந்த ஆண்டு நமது சிறப்பு கூட்டாண்மை இதர துறைகளிலும் உறுதியாக முன்னேற்றம் கண்டு வருகிறது.
நில எல்லை வணிகத்தில் தடங்கல்களை நாம் குறைத்துள்ளோம், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்பை அதிகரித்துள்ளோம். புதிய வழிவகைகளை சேர்த்துள்ளோம்.
நமது உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நமது நோக்கங்களை இவையனைத்தும் பிரதிபலிக்கின்றன.
பிரதமர் அவர்களே,
‘’முஜிப் சிராந்தர்’’ – வங்கபந்துவின் செய்தி நித்தியமானது. இந்த எழுச்சியுடன் நாம் அவரது மரபுக்கு மரியாதை செலுத்துகிறோம்.
வங்கபந்துவின் பாரம்பரியம் உங்களது சிறப்பான தலைமையில் தெளிவாக பிரதிபலிக்கிறது. இருதரப்பு உறவுகளில் நீங்கள் காட்டும் தனிப்பட்ட அர்ப்பணிப்பு தெளிவாகிறது.
வங்கபந்துவைப் பெருமைப்படுத்தும் விதமாக சிறப்பு அஞ்சல் தலை வெளியிடவும், மகாத்மா மற்றும் வங்கபந்து குறித்த டிஜிடல் கண்காட்சியை உங்களுடன் தொடங்கி வைக்கவும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது பெருமை மிக்க விஷயமாகும். இது இளைஞர்களை நிச்சயம் ஊக்குவிக்கும். இந்தக்கண்காட்சியில், சிறப்பு அமர்வு பொங்மாதாஜி என மதிக்கப்படும் கஸ்தூர்பா காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அவர்களே, நான் தற்போது தொடக்க கருத்துக்களைக் கூற உங்களை அழைக்கிறேன்.
பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழி பெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
***
Addressing the India-Bangladesh virtual summit with PM Sheikh Hasina. https://t.co/ewHLRWvVLZ
— Narendra Modi (@narendramodi) December 17, 2020