குஜராத் முதலமைச்சர் திரு.விஜய் ரூபானி அவர்களே, துணை முதலமைச்சர் திரு. நிதின் படேல் அவர்களே, குஜராத் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எனதருமை சகோதர, சகோதரிகளே. கட்ச் பகுதி மக்களே நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? கெரோனா ஓய்ந்துவிட்டதா ? குளிர்காலம் வேறு வந்துவிட்டது. உங்களது நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கட்ச் பகுதிக்கு வந்திருப்பது, எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது, ஏனெனில், முதலில், கட்ச் என் மனதைக் கவர்ந்த பகுதி ஆகும். இரண்டாவதாக, இன்று (15.12.2020) கட்ச் நகரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு நட்சத்திரம் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம், குஜராத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதிலும் தனி இடத்தைப் பிடித்துள்ளது.
நண்பர்களே,
இன்றைய தினம், குஜராத் மற்றும் இந்த நாட்டின் தவப்புதல்வர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம் ஆகும். நர்மதை அன்னையின் மூலம் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி, குஜராத்தை வளம் பெறச் செய்ய வேண்டுமென்ற சர்தார் படேலின் கனவு, விரைந்து நனவாகிக் கொண்டிருக்கிறது. கெவாடியாவில் உள்ள அவரது சிலை, உலகிலேயே மிகப்பெரிய சிலையாக காட்சியளிப்பதுடன், நாட்டிற்காக, இரவு–பகலாக ஒருங்கிணைந்து பாடுபட வேண்டுமென்ற உணர்வை ஊக்குவித்து வருகிறது. சர்தார் படேலை நினைவுகூர்வதன் மூலம், குஜராத் மற்றும் இந்த நாட்டின் பெருமையை உயர்த்துவோம்.
நண்பர்களே,
இன்று, கட்ச் பகுதியை புதிய சக்தி சூழ்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா, கட்ச் பகுதியில் அமைந்திருப்பதை எண்ணிப் பாருங்கள். இது எவ்வளவு பெரியது ? சிங்கப்பூர் அல்லது பஹ்ரைன் அளவுக்கு உள்ளது. கட்ச் பகுதியில் அமைந்துள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பூங்கா, அதே அளவிற்கு பெரியது ஆகும். இது எவ்வளவு பெரிய அளவில் மாறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். கட்ச் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா, 70,000 ஹெக்டேருக்கும் அதிக பரப்பில் அமைந்துள்ளது, அதாவது, இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களைவிடப் பெரிதாகும்.
நண்பர்களே,
நவீன கால தொழில்நுட்பம் மற்றும் நவீன காலப் பொருளாதாரம் என்ற பெரும் திசைகளில், கட்ச் இன்று முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள காவ்டா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா, மாண்ட்வி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் அஞ்சார் பகுதியில் உள்ள சர்ஹாத் பால்பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள புதிய தானியங்கி ஆலை போன்றவை, கட்ச் பகுதியின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு புதிய மைல் கல்லாக அமைய உள்ளன. இந்தத் திட்டங்களின் பலன், எனது பாசத்திற்குரிய விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் சாமான்ய மக்களுக்கு, குறிப்பாக, இப்பகுதியைச் சேர்ந்த தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்குத் தான் வந்துசேரும்.
நண்பர்களே,
கட்ச் பிராந்தியத்தின் வளர்ச்சியைப் பற்றிப் பேசும்போது, பழங்கால நினைவுகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஒரு காலகட்டத்தில், கட்ச் பகுதி வெகு தொலைவில் உள்ளது, வளர்ச்சி மற்றும் போக்குவரத்துக்கான இணைப்பு வசதிகளுக்கான அறிகுறியே தென்படவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது. மின்சாரம்–தண்ணீர்–சாலைகள் போன்றவை பெரும் சவாலாக இருந்தன. அரசாங்க அளவிலும், அரசு ஊழியர்களை இப்பகுதிக்கு இடமாற்றம் செய்வதே தண்டனையாக கருதப்பட்டதுடன், மக்களிடமும், இது ஒரு “காலா பானி “ தண்டனை என்ற எண்ணமே காணப்பட்டது. தற்போது, அதுபோன்ற நிலையா காணப்படுகிறது? , கட்ச் பகுதியில் வேலை வேண்டுமென, மக்கள் மன்றாடும் நிலை உருவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மறைந்துவிட்டன. ஒருபுறம், மாதா ஆஷாபுரா தேவி மற்றும் கோடேஷ்வர் மகாதேவ் ஆகியோரின் ஆசிகளும், மறுபுறம், மக்களின் துணிவு, விடாமுயற்சி மற்றும் எதையும் சாதிக்கும் மனப்பாங்கும் இதற்குக் காரணம். சில ஆண்டுகளிலேயே, இப்பகுதி மக்களே நினைத்துப் பார்த்திராத அளவிற்கு தலைகீழ் மாற்றம் ஏற்படப் போகிறது. இப்பகுதி மக்கள், விரக்தியை, நம்பிக்கையாக மாற்றியுள்ளனர். நிலநடுக்கத்தால், மக்களின் வீடுகளைத்தான் தரைமட்டம் ஆக்க முடிந்ததே தவிர, அவர்களது மன உறுதியை மாற்ற முடியவில்லை. கட்ச் பகுதியில் வாழும் என் அன்பிற்குரிய சகோதர, சகோதரிகள் மீண்டும் தலைநிமிர்ந்துள்ளனர். அவர்கள், இப்பகுதியை எந்தளவிற்கு மாற்றப் போகிறார்கள் என்பதை, பொறுத்திருந்து பாருங்கள்.
நண்பர்களே,
118 ஆண்டுகளுக்கு முன்பு, இதே டிசம்பர் 15-ந் தேதியன்று, அகமதாபாதில் ஒரு தொழில் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியில் பெரிதும் கவர்ந்த அம்சமே, பானுடேப் எந்திரம் தான். 118 ஆண்டுகளுக்கு முன்பிருந்த, தொழில் முனைவோரின் தொலைநோக்கு சிந்தனையை எண்ணிப் பாருங்கள். இந்த எந்திரம் சூரியசக்தி மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில், அது தான் தற்போது, சோலார் குக்கர் போன்றவையாக தயாரிக்கப்படுகின்றது. தற்போது, 118 ஆண்டுள் கழித்து, அதுவும் அதே டிசம்பர் 15-ந் தேதியன்று மாபெரும் கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பூங்கா தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த எரிசக்திப் பூங்கா, சூரியசக்தி மற்றும் காற்றாலைகள் மூலமாக, சுமார் 30,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பூங்கா, சுமார் 1.5லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. பாலைவனப் பகுதியின் பெரும் பரப்பு, எந்தளவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நினைத்துப் பாருங்கள். எல்லைப் பகுதி முழுவதும் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால், எல்லைப்புற பாதுகாப்பு நிலையும் மேம்படும். சாமான்ய மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டுமென்ற நாட்டின் இலக்கை அடையவும் இது உதவிகரமாக இருக்கும். இத்திட்டம், விவசாயிகள் மற்றும் தொழில் துறையினருக்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும். அனைத்திற்கும் மேலாக, காற்று மாசுபடுவதைக் குறைப்பதோடு, நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் உதவிகரமாக இருக்கும். இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பூங்காவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், ஆண்டுக்கு 5 மில்லியன் டன் அளவிலான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைத் தடுக்கப் பயன்படும். அதாவது, சுகுமார் 9 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு சமமானதாக இந்தப் பூங்கா திகழும். இந்தியாவில், தனிநபர் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைப்பதிலும், இந்தப் பூங்கா பெரும் பங்கு வகிக்கும். அத்துடன், சுமார் ஒரு லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் இந்தப் பூங்கா வழங்கும். இது, கட்ச் பகுதிவாழ் இளைஞர்களுக்கு, பெரிதும் பயனளிக்கும்.
நண்பர்களே,
21-ம் நூற்றாண்டில், எரிசக்தியைப் போன்றே, தண்ணீர்ப் பாதுகாப்பும் இந்தியாவிற்கு முக்கியமானதாகும். தண்ணீர்ப் பற்றாக்குறையால், மக்கள் மற்றும் இப்பகுதியின் வளர்ச்சி தடைபடாது என்பது, எனது உறுதியான நம்பிக்கை ஆகும். தண்ணீர்ப் பிரச்சினையில் குஜராத் மாநிலத்தின் பணிகள், தற்போது, ஒட்டுமொத்த நாட்டிற்கே முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது. நர்மதா நதிநீரை, கட்ச் பகுதிக்கு கொண்டுவருவது பற்றிய விவாதம் எழுந்தபோது, அது மக்களிடம் கேலிக்கூத்தானதாக கருதப்பட்டது. இது, அரசியல் கேலிக்கூத்து என்றும், எதுவும் நிறைவேறாது என்றும் கூறிவந்தனர். சில நேரங்களில், மக்களே கூட, 600-700 கிலோமீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டி, நர்மதை ஆற்று நீரைக் கொண்டுவருவது சாத்தியமாகுமா என்று கேள்வி எழுப்பினர். இது ஒரு போதும் நிறைவேறாது என்றும் கூறினர். ஆனால், நர்மதா தேவியின் கருணையால், தற்போது, நர்மதை ஆற்று நீர், இப்பகுதிக்கு வருகிறது. இதன் மூலம், கட்ச் பகுதி விவசாயிகள் மற்றும் எல்லைப் பகுதியில் பணியாற்றும் பாதுகாப்புப் படையினரின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. தண்ணீர்ப் பாதுகாப்பை, மக்கள் இயக்கமாக மேற்கொண்டுவரும் இப்பகுதி மக்களை நான் பாராட்ட விரும்புகிறேன். மக்கள், தாங்களாகவே முன்வந்து, தடுப்பணைகள், தண்ணீர்த் தொட்டிகள் மற்றும் கால்வாய்களை அமைத்திருப்பது, தேசிய அளவில், ஜல் ஜீவன் இயக்கத்திற்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.
குஜராத்தில் வேளாண் துறையின் அபரிமிதமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணமே, வேளாண் சார்ந்த தொழில்களில், அரசின் தேவையற்ற தலையீடு இல்லாமல் இருப்பது தான். நாட்டில் தற்போது, பால் உற்பத்தி மற்றும் மீன்வளர்ப்பு சார்ந்த தொழில்கள், பெரும் வளர்ச்சி பெற்று வருகின்றன.
ஆனால், தற்போது, தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை தவறாக வழிநடத்த, பெரும் சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்களை, வேறு யாரோ ஆக்கிரமிக்கப் போகிறார்கள் என்ற தவறான எண்ணம் விதைக்கப்படுகிறது.
சகோதர, சகோதரிகளே,
நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் பால் வினியோகம் செய்யும், பால்பண்ணை உரிமையாளர் யாரும் உங்களது கால்நடைகளை பிடித்துச் சென்று விட்டார்களா? பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளின் நிலங்களை யாரும் அபகரித்து விட்டார்களா?
நண்பர்களே,
இதுபோன்ற வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்ற கோரிக்கை, நீண்ட காலமாக இருந்து வந்தது. தங்களது விளைபொருட்களை, நாட்டின் எந்த இடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென, பல்வேறு விவசாய சங்கங்களும் வலியுறுத்தி வந்தன. விவசாயிகளை தவறாக வழிநடத்தும் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, இதுபோன்ற வேளாண் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, அதற்கான முடிவுகளை எடுக்காமல், விவசாயிகளுக்கு தவறான நம்பிக்கை அளித்து வந்தனர். தற்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை, இந்த நாடு மேற்கொண்டுள்ள போது, விவசாயிகளை அவர்கள் தவறாக வழிநடத்துகின்றனர். விவசாயிகளின் நலனே, இந்த அரசின் மிக முக்கிய நோக்கம் ஆகும்.
கட்ச் பகுதி, வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்று வாழ்த்துவதோடு, அதுவே எனது விருப்பம் என்பதையும் தெரிவித்து, மீண்டும் ஒருமுறை, உங்களுக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.
நன்றிகள் பல ! ! !
*******
Speaking at the Foundation Stone Laying Ceremony of development projects in Kutch. https://t.co/1LwsxK9GB5
— Narendra Modi (@narendramodi) December 15, 2020
आज कच्छ ने New Age Technology और New Age Economy, दोनों ही दिशा में बहुत बड़ा कदम उठाया है: PM @narendramodi in Kutch
— PMO India (@PMOIndia) December 15, 2020
इसका बहुत बड़ा लाभ यहां के मेरे आदिवासी भाई-बहनों, यहां के किसानों-पशुपालकों, सामान्य जनों को होने वाला है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 15, 2020
खावड़ा में Renewable Energy पार्क हो,
— PMO India (@PMOIndia) December 15, 2020
मांडवी में Desalination plant हो,
और अंजार में सरहद डेहरी के नए ऑटोमैटिक प्लांट का शिलान्यास,
तीनों ही कच्छ की विकास यात्रा में नए आयाम लिखने वाले हैं: PM @narendramodi
आज कच्छ देश के सबसे तेज़ी से विकसित होते क्षेत्रों में से एक है।
— PMO India (@PMOIndia) December 15, 2020
यहां की कनेक्टिविटी दिनों दिन बेहतर हो रही है: PM @narendramodi
I can never forget the time when the people of Gujarat had a ‘simple’ demand - to get electricity during dinner time.
— PMO India (@PMOIndia) December 15, 2020
Things have changed so much in Gujarat. Today’s youth in Gujarat are not aware of the earlier days of inconvenience: PM @narendramodi
Over the last twenty years, Gujarat introduced many farmer friendly schemes.
— PMO India (@PMOIndia) December 15, 2020
Gujarat was among the earliest to work on strengthening solar energy capacities: PM @narendramodi
Energy security & water security are vital in the 21st century. Who can forget the water problems of Kutch. When our team spoke of getting Narmada waters to Kutch, we were mocked. Now, Narmada waters have reached Kutch & by the blessings of Maa Narmada, Kutch is progressing: PM
— PMO India (@PMOIndia) December 15, 2020
One has to keep changing with the times and embrace global best practices. In this regard I want to laud the farmers in Kutch. They are exporting fruits abroad. This is phenomenal and indicates the innovative zeal of our farmers: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 15, 2020
The agriculture, dairy and fisheries sectors have prospered in Gujarat over the last two decades. The reason is- minimum interference from the Government. What Gujarat did was to empower farmers and cooperatives: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 15, 2020
The agriculture reforms that have taken place is exactly what farmer bodies and even opposition parties have been asking over the years.
— PMO India (@PMOIndia) December 15, 2020
Government of India is always committed to farmer welfare and we will keep assuring the farmers, addressing their concerns: PM @narendramodi
सरकार में पहले ऐसा कहा जाता था कि अगर किसी को पनिशमेंट पोस्टिंग देनी है तो कच्छ में भेज दो, और लोग भी कहते थे कि कालापानी की सजा हो गई।
— Narendra Modi (@narendramodi) December 15, 2020
आज लोग चाहते हैं कि कुछ समय कच्छ में मौका मिल जाए।
आज कच्छ की पहचान बदल गई है, कच्छ की शान और तेजी से बढ़ रही है। pic.twitter.com/qtCGaukhqB
हमारे पूर्वज भी कितनी दूर की सोच रखते थे, इसका पता ठीक 118 साल पहले अहमदाबाद में लगी उस Industrial Exhibition से चलता है, जिसका मुख्य आकर्षण था- भानु ताप यंत्र।
— Narendra Modi (@narendramodi) December 15, 2020
आज 118 साल बाद 15 दिसंबर को ही सूरज की गर्मी से चलने वाले एक बड़े Renewable Energy पार्क का उद्घाटन किया गया है। pic.twitter.com/7uKs2xnn9y
एक समय था, जब कच्छ में मां नर्मदा का पानी पहुंचाने की बात की जाती थी, तो कुछ लोग मजाक उड़ाते थे। लेकिन जब नर्मदा मां यहां कच्छ की धरती पर पहुंचीं, तो हर किसी की आंखों में हर्ष के आंसू बह रहे थे।
— Narendra Modi (@narendramodi) December 15, 2020
आज कच्छ का किसान हो या फिर सरहद पर खड़ा जवान, दोनों की पानी की चिंता दूर हुई है। pic.twitter.com/I9L6l1NQnh
पानी को घरों तक पहुंचाने के साथ-साथ पीने के पानी के नए स्रोत बनाना भी बहुत जरूरी है।
— Narendra Modi (@narendramodi) December 15, 2020
इसी लक्ष्य के साथ समंदर के खारे पानी को शुद्ध करके इस्तेमाल करने की व्यापक योजना पर भी काम हो रहा है।
मांडवी का Desalination Plant जब तैयार हो जाएगा, तो इससे लाखों परिवारों को लाभ होगा। pic.twitter.com/qcphFwZD6f
सिर्फ डेढ़ दशक में गुजरात में कृषि उत्पादन में डेढ़ गुना से ज्यादा बढ़ोतरी दर्ज की गई है।
— Narendra Modi (@narendramodi) December 15, 2020
गुजरात में कृषि सेक्टर मजबूत होने का एक बड़ा कारण यह रहा है कि यहां बाकी उद्योगों की तरह ही खेती से जुड़े व्यापार में भी सरकार टांग नहीं अड़ाती है। सरकार अपना दखल बहुत सीमित रखती है। pic.twitter.com/XCSPMrJY5k
हमारी सरकार की ईमानदार नीयत और ईमानदार प्रयास को पूरे देश ने आशीर्वाद दिया, हर कोने के किसानों ने आशीर्वाद दिए।
— Narendra Modi (@narendramodi) December 15, 2020
मुझे विश्वास है कि भ्रम फैलाने वाले और किसानों के कंधे पर रखकर बंदूकें चलाने वाले लोगों को देश के सारे जागरूक किसान परास्त करके रहेंगे। pic.twitter.com/jQA0PmMuWF