மேன்மைமிகு பெருமக்களே,
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நமது போராட்டத்தின் லட்சியமிக்க நடவடிக்கை- பாரிஸ் ஒப்பந்தத்தின் ஐந்தாவது ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்த உச்சி மாநாடு அமைகிறது. இன்று உயரிய லட்சியத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கையில் நமது கடந்த காலத்தை நாம் மறந்து விடக்கூடாது. நமது லட்சியங்களை நாம் திருத்தி அமைத்துக் கொள்வதுடன், நாம் ஏற்கனவே வகுத்துள்ள இலக்கிற்கு எதிராக நாம் சாதித்து உள்ளதையும் ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் எதிர்கால சந்ததியினருக்கு நமது குரலின் மீது நம்பிக்கை ஏற்படும்.
மேன்மைமிகு பெருமக்களே,
பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைவதை நோக்கிய பயணத்தில் மட்டுமல்லாமல், எதிர்பார்த்ததை விட சிறப்பாக இந்தியா செயல்பட்டு வருவதை தாழ்மையுடன் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். மாசு வெளியேற்றத்தில் 2005-ஆம் ஆண்டின் அளவைவிட நாம் 21 சதவிகிதம் குறைத்துள்ளோம். கடந்த 2014-ஆம் ஆண்டு 2.63 ஜிகா வாட்டாக இருந்த சூரிய ஒளி சக்தித் திறன், 2020-ஆம் ஆண்டில் 36 ஜிகா வாட்டாக உயர்ந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் உலக அளவில் நாம் நான்காவது இடத்தில் உள்ளோம்.
2022-ஆம் ஆண்டுக்குள் இது 175 ஜிகா வாட்டாக அதிகரிக்கும். மேலும் நமக்கு மற்றுமொரு லட்சிய இலக்கு தற்போது உள்ளது- 2030-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை 450 ஜிகா வாட்டாக உயர்த்துவது. நமது வனப்பகுதிகளை விரிவு படுத்துவதிலும், பல்லுயிர் பாதுகாப்பிலும் நாம் வெற்றி அடைந்துள்ளோம். மேலும் உலக அளவில் 2 முக்கிய முயற்சிகளை இந்தியா முன்னெடுத்துள்ளது:
• சர்வதேச சூரிய ஒளி சக்திக் கூட்டணி
• பேரழிவு நெகிழ்வுத்தன்மை கட்டமைப்புக்கான கூட்டணி
மேன்மைமிகு பெருமக்களே,
வரும் 2047-ஆம் ஆண்டு நவீன இந்தியா தனது நூற்றாண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும். எனது கிரக வாசிகளிடம் ஓர் உறுதிமொழியை நான் ஏற்றுக் கொள்கிறேன். நூற்றாண்டு இந்தியா தனது இலக்கை அடைவது மட்டுமல்லாமல் உங்களது எதிர்பார்ப்பிற்கும் மேலாக செயல்படும்.
நன்றி.
**********************
My remarks at the Climate Ambition Summit https://t.co/5NZaGQQOw4
— Narendra Modi (@narendramodi) December 12, 2020