Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் – பூட்டான் அரசு பணியாளர் தேர்வாணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல்


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.), பூட்டான் அரசின் குடிமைப்பணிகள் ஆணையம் (ஆர்.சி.எஸ்.சி.) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கும், பூட்டான் அரசின் குடிமைப்பணிகள் ஆணையத்துக்கும் இடையே ஏற்கனவே உள்ள உறவு வலுப்படும். இதன்மூலம், பணியாளர் தேர்வில் இருதரப்பும் அனுபவத்தையும், நிபுணத்தையும் பகிர்ந்துகொள்ள வழி ஏற்படும்.

இரு நாடுகளின் அரசு பணியாளர் தேர்வாணையங்களுக்கு இடையே இணைப்பை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் பூட்டான் குடிமைப்பணிகள் ஆணையத்துக்கும் இடையே வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதன்மூலம், பொதுவான கொள்கைகள் பரிமாறிக் கொள்ளப்படும்.

இருதரப்புக்கும் ஒத்துழைப்பு ஏற்படும் பகுதிகளை காண்போம்:

அ. பணியாளர் தேர்வு போன்ற குடிமைப் பணிகள் சேவை விவகாரங்களில் அனுபவங்களையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்வது, திறன்வாய்ந்த நபர்கள் பரிமாற்றம், இரு நாடுகள் இணைப்பு மற்றும் பயிற்சித் திட்டங்கள் மூலம், இரு நாடுகளின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு தொழில் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆ. தேர்வு நடைமுறைகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், கணிணி அடிப்படையில் பணியாளர்களை தேர்வுசெய்வதற்கான எழுத்துத் தேர்வுகளை நடத்துதல் ஆகியவை குறித்து நிபுணத்துவம் பகிர்ந்துகொள்ளப்படும். பணியாளர் தேர்வை விரைந்து முடிப்பதற்காக ஒற்றைச் சாளர முறையை பயன்படுத்துவது, வழக்குகளை விரைந்து முடிப்பது, திறன் அடிப்படையில் பணியாளர் முறையை உருவாக்குதல் உள்ளிட்டவற்றில் அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்படும்.

இ. அதிகாரம் மிக்க பதவிகளுக்கு பணியாளர்களை தேர்வுசெய்ய பல்வேறு அரசு அமைப்புகளும் மேற்கொண்டுவரும் விதிமுறைகள் மற்றும் தணிக்கை வழிமுறைகள் குறித்த அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்படும்.

ஈ. ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவது, வரலாற்று ஆவணங்களை சேமித்துவைப்பது மற்றும் காட்சிப்படுத்துவது.

பின்னணி

கடந்த காலங்களில் கனடா மற்றும் பூட்டான் அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டுள்ளது.