மேன்மைமிக்கவர்களே வணக்கம்
முதலாவதாக, கோவிட்19 பெருந்தொற்று காரணமாக லக்சம்பர்க்கு ஏற்பட்ட துயரமான இழப்புகளுக்கு, 130 கோடி இந்திய மக்களின் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வலிமிக்க காலத்தில் உங்களது திறமையான தலைமையைப் பாராட்டுகிறேன் .
மேன்மைமிக்கவர்களே
நமது இன்றைய மெய்நிகர் உச்சிமாநாடு என்னைப் பொருத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் பல்வேறு சர்வதேச தளங்களில் சந்தித்து வருகிறோம். ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவிற்கும் லக்சம்பர்க்குக்கும் இடையே நடைபெறும் முதலாவது முறையான உச்சி மாநாடாகும் இது.
கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார, உடல்நல சவால்களை சமாளிப்பதற்காக உலகமே போராடி வருகிறது. இந்த நேரத்தில், இந்தியா, லக்சம்போர்க் ஆகிய இரு நாடுகளும் மீண்டெழ இந்தியா லக்சம்பர்க் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு இந்த இரு சவால்களையும் சமாளித்து மீண்டெழ உதவும். ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரம் போன்ற உயர்ந்த கோட்பாடுகள் நமது உறவுகளையும் பரஸ்பர ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும். இந்தியாவிற்கும் லக்சம்பர்க்குக்கும் இடையேயான பொருளாதார பரிவர்த்தனைகளை மேலும் அதிகரிப்பதற்கு அதிக அளவிலான வாய்ப்புகள் உள்ளன.
தற்போது, ஸ்டீல், நிதி தொழில்நுட்பம், டிஜிட்டல் தளம் ஆகிவற்றில் நம்மிடையே நல்ல ஒத்துழைப்பு நிலவுகிறது. ஆனால், இதை மேலும் முன்னெடுத்துச் செல்ல அதிக அளவிலான திறன் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு எங்களது விண்வெளி முகமை லக்சம்பர்க்கின் 4 செயற்கைக்கோள்களை ஏவியது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். விண்வெளி தொடர்பான துறைகளிலும் நாம் பரஸ்பர பரிவர்த்தனைகளை அதிகரித்துக் கொள்ளலாம்.
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு ஐ எஸ் ஏ உடன் இணைவதாக லக்சம்பர்க் அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம். பேரிடர்களைத் தாங்கக்கூடிய கட்டமைப்புக்கான கூட்டமைப்பில் இணையுமாறு உங்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
மேதகு மூத்த கோமகன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா வருகை தரவிருந்தார். கோவிட் 19 காரணமாக இது ஒத்திப் போடப்பட்டுள்ளது. விரைவில் அவர் இந்தியா வருவதை நாங்கள் வரவேற்கிறோம். தாங்களும் விரைவில் இந்தியாவிற்கு வருகை தர விரும்புகிறோம்.
மேன்மைமிக்கவர்களே
தங்களது துவக்க உரையை வழங்க உங்களை அழைக்கிறோம்.
பொறுப்பு துறப்பு: இது பிரதமரின் உரையின் சற்றேறக்குறைய உள்ள மொழிபெயர்ப்பு. உரை ஹிந்தி மொழியில் நிகழ்த்தப்பட்டது.
Speaking at the first ever India-Luxembourg bilateral summit with PM @Xavier_Bettel. https://t.co/xL3M2UJGCv
— Narendra Modi (@narendramodi) November 19, 2020