Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில் ஆரோக்கிய வனம், ஆரோக்கிய மையம், ஒற்றுமை வணிக வளாகம் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா பிரதமர் தொடங்கி வைத்தார்

குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில் ஆரோக்கிய வனம், ஆரோக்கிய மையம், ஒற்றுமை வணிக வளாகம் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா பிரதமர் தொடங்கி வைத்தார்


குஜராத் மாநிலத்தில் கெவாடியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் கீழ்  ஆரோக்கிய வனம், ஆரோக்கிய மையம், ஒற்றுமை வணிக வளாகம் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா ஆகியவற்றை பிரதமர் திரு.நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.

ஆரோக்கியா வனம் மற்றும் ஆரோக்கிய ஆரோக்கியா வனம் திட்டத்தில், 17 ஏக்கர் பரப்பளவில், 380 வெவ்வேறு வகையான 5 லட்சம் தாவரங்கள் இடம் பெற்றுள்ளன. ஆரோக்கிய மையத்தில், பாரம்பரிய சிகிச்சை வசதிகள் உள்ளன. இங்குள்ள சாந்திகிரி உடல் நல மையத்தில்  ஆயுர்வேதம், சித்தா, யோகா மற்றும் பஞ்சகர்மா அடிப்படையிலான  சிகிச்சைகளை அளிக்கும்

ஒற்றுமை வணிக வளாகம் :

இந்த  வணிக வளாகத்தில், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை குறிக்கும் வகையில் இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான பாரம்பரிய மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

குழந்தைகளுக்கான ஊட்டசத்து  & கண்ணாடி பிரமை:

உலகிலேயே முதன் முதலாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப ரீதியிலான ஊட்டசத்து  பூங்கா குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது 35,000 சதுர அடி பரப்பில் பரந்து விரிந்துள்ளதுஇங்கு இயக்கப்படும்  ரயில், ‘ஃபால்ஷாகா கிரிஹாம்’, ‘பயோனகரி’, ‘அன்னபூர்ணா’, ‘போஷன் புரான்’, ‘ஸ்வஸ்த பாரதம்என்ற பெயரிலான பல்வேறு அற்புதமான கருத்தாக்கத்துடன் கூடிய நிறுத்தங்களில் நின்று செல்லும்கண்ணாடி பிரமை, 5டி மெய்நிகர்  தியேட்டர் மற்றும் மேம்படுத்தப்பட்ட விளையாட்டுகள் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் வழியே ஊட்டசத்து விழிப்புணர்வை இது ஏற்படுத்துகிறது.

——-