Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகளாவிய இந்திய விஞ்ஞானி(வைபவ்) மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

வணக்கம்!

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. இந்த மாநாடு வெளிநாடு வாழ்  மற்றும் இந்திய விஞ்ஞானிகளை இணைத்துள்ளது. உலகளாவிய இந்திய விஞ்ஞானி மாநாடு (வைபவ்) அறிவியல், இந்திய மற்றும் உலக கண்டுபிடிப்புகளை கொண்டாடுகிறது.  அதனால், இதை சிறந்த விங்ஞானிகளின் சங்கமம் என்று நான் கூறுவேன்.  இந்த மாநாடு மூலம் நாட்டையும், இந்த உலகத்தையும் மேம்படுத்துவதற்கான நீண்ட சங்கத்தை உருவாக்க நாம் முயற்சிக்கிறோம்.

நண்பர்களே,

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்தெரிவித்த விஞ்ஞானிகளுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்களது கண்டுபிடிப்புகளில், நீங்கள் பல பாடப்பிரிவுகளை நீங்கள் அற்புதமாக முடித்துள்ளீர்கள். இந்திய மற்றும் வெளிநாட்டு அறிவியல் ஆராய்ச்சி சூழலில் சிறந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை நீங்கள் எடுத்துரைத்தீர்கள்.  உண்மையிலேயே, அதுதான் இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கம். இந்தியாவின் ஆராய்ச்சி சூழலை மேம்படுத்துவதற்கு, நீங்கள் நல்ல ஆலோசனைகளை வழங்கியுள்ளீர்கள். உங்களின் வார்த்தைகளை கேட்கும்போது, இந்த மாநாடு ஆக்கப்பூர்வ பரிமாற்றமாக இருக்கும் என்பதை என்னால் பார்க்க முடிகிறது.

நண்பர்களே,

மனித இன முன்னேற்றத்தின் மையத்தில் அறிவியல் இருந்து வருகிறது. கற் காலம் முதல் டிஜிட்டல் காலம் வரை ஒவ்வொரு கட்டமும் சில குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், நம் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. இது அறிவியல் ஆர்வத்தையும் அதிகரித்தது.

நண்பர்களே,

அறிவியல், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமூக -பொருளாதார மாற்றத்தை நோக்கிய நமது முயற்சியில், அறிவியில் முக்கிய இடத்தில் உள்ளது. அறிவியல் சூழலில் உள்ள மந்தநிலையை நாம் தகர்த்தோம். தடுப்பூசி  கண்டுபிடிப்பில்  உள்ள நீண்ட இடைவெளி தகர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு, நமது நோய்த்தடுப்பு திட்டத்தில், 4 தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்பட்டன. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ரோட்டோ வைரஸ் தடுப்பூசியும் இதில் அடங்கும். உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியை நாம் ஊக்குவிக்கிறோம். சமீபத்தில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நிமோகோகல் தடுப்பூசிக்கான விற்பனை அங்கீகாரத்தையும் வழங்கினோம். இந்த தடுப்பூசி திட்டங்களும் நமது ஊட்டச்சத்து  திட்டமும் நம் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் தகுதியான நிலைக்கு கொண்டு செல்கின்றன. இந்த கொரோனா தொற்றின் போது, நமது  தடுப்பூசி உருவாக்குபவர்கள் தீவிரமாக செயல்பட்டுஉலகளவில் போட்டியிடுகிறார்கள்.

2025ம் ஆண்டுக்குள், இந்தியாவில் காசநோயை ஒழிக்கும் திட்டத்தை நாம் தொடங்கியுள்ளோம். இது உலகளாவிய இலக்குக்கு, 5 ஆண்டுகளுக்கு முந்தையது.

நண்பர்களே,

இதர முயற்சிகளும் தொடர்ந்து நடக்கின்றன. சூப்பர் கம்யூட்டிங், சைபர்  திட்டங்களையும் நாம் தொடங்கியுள்ளோம். இவை செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், சென்சார் மற்றும் பிக் டேட்டா பகுப்பாய்வு போன்ற அடிப்படை ஆராய்ச்சிகளை விரிவுபடுத்தியுள்ளன.  இது திறமையான இளம் மனித வளத்தை உருவாக்க உதவும். புதிய நிறுவனங்கள் வளரும். இத்திட்டத்தின் கீழ், 25 தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

நமது விவசாயிகளுக்கு உதவ, நாம் உயர் தர அறிவியல் ஆராய்ச்சியை விரும்புகிறோம். பருப்பு உற்பத்தியை அதிகரிக்க நமது வேளாண் விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்துள்ளனர். நாம் குறைந்த அளவிலான பருப்புகளை மட்டுமே இன்று இறக்குமதி செய்கிறோம். நமது உணவு தானிய உற்பத்தி சாதனை அளவை எட்டியுள்ளது.

நண்பர்களே,

சமீபத்தில், நாட்டுக்கு தேசிய கல்வி கொள்கை கிடைத்துள்ளது. 30 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவுக்கு இந்த கல்வி கொள்கை கிடைத்துள்ளது. பல மாத ஆலோசனைக்குப்பின், இந்த கல்வி கொள்கை உருவாகியுள்ளது. இந்த தேசிய கல்வி கொள்கை, அறிவியலுக்கான ஆர்வத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கிறது. பன்முக ஆய்வுகளில் கவனம் செலுத்துவது குறித்து நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். திறந்த மற்றும் பரந்த கல்விச் சூழல் இளம் திறமையாளர்களை வளர்க்கும்.

இன்று, உலக அளவில் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் இந்தியா ஒரு முக்கிய பங்களிப்பாளராகவும் உள்ளது.

நண்பர்களே,

அதிகமான இளைஞர்கள், அறிவியலில் ஆர்வத்தை வளர்ப்பதை உறுதி செய்வதே இப்போதைய  தேவை. அதற்காக, நாம் வரலாற்றின் அறிவியல் மற்றும் அறிவியலின் வரலாற்றை  நன்கு அறிந்திருக்க வேண்டும்: கடந்த நூற்றாண்டில், முன்னணி வரலாற்று கேள்விகள் அறிவியலின் உதவியுடன் தீர்க்கப்பட்டுள்ளன. வரலாற்று தேதிகளை  தீர்மானிக்க மற்றும் ஆராய்ச்சிக்கு உதவுவதில் அறிவியல் முறைகள் இப்போது பயன்படுத்தப்படுகின்றன.

இந்திய அறிவியலின் வளமான வரலாற்றையும் நாம் பெருக்க வேண்டும்.  துரதிர்ஷ்டவசமாக, நவீனத்துவத்திற்கு முந்தைய அனைத்தும் மூடநம்பிக்கை மற்றும் இருண்ட யுகங்கள் என்ற பொய் பல இளைஞர்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. தற்போது கம்யூட்டர் மற்றும் மொபைல் போன் காலம். ஆனால் அங்கும், 1 மற்றும் 0 என்ற எண்கள் தான் அடிப்படையாக உள்ளது. 

நண்பர்களே,

ஒருவர் பூஜ்ஜியத்தைப் பற்றி பேசும்போது, அவரால்  இந்தியாவைப் பற்றி பேசாமல் எப்படி இருக்க முடியும்? கணிதம் மற்றும் வர்த்தகத்தை  அனைவரும்  அணுகக்கூடியதாக பூஜ்ஜியம் மாற்றியது.  நவீன யுகத்தில் சத்யேந்திர நாத் போஸ் சர் சி.வி.ராமன் பாஸ்கரா, வரஹ்மிஹிரா, நாகார்ஜுனா, சுஷ்ருதா மற்றும் பலரை, நமது இளைஞர்கள் அறிந்திருக்க வேண்டும். 

நண்பர்களே,

வரவிருக்கும் தலைமுறையினருக்கு பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்தியாவின் தற்சார்பு இந்தியா அழைப்பில், உலகளாவில் நலனும் உள்ளடங்கியுள்ளது. இந்த கனவை நனவாக்க, உங்கள் அனைவரின் ஆதரவை பெற விரும்புகிறேன். சமீபத்தில், முன்னணி விண்வெளித்துறை சீர்திருத்தங்களை இந்தியா அறிமுகம் செய்தது. இது கல்வி மற்றும் தொழில் துறைக்கு வாய்ப்புகளை வழங்குகிறது.

நண்பர்களே,

இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்றவர்கள், உலக அரங்கில் இந்தியாவின் சிறந்த தூதர்களாக உள்ளனர்.  அவர்கள் எங்கு சென்றாலும், இந்தியாவின் நெறிமுறைகளை அவர்களுடன் எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் தங்கள் புதிய நாடுகளின் கலாச்சாரங்களையும் ஏற்றுக்கொண்டனர். இந்தியாவில் இருந்து சென்றோர், பல துறைகளில் வெற்றி பெற்றுள்ளனர். கல்வியாளர்கள் ஒரு பிரகாசமான உதாரணம். பெரும்பாலான உலகளாவிய பல்கலைக்கழகங்களும், உலகின் பல சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தியாவின் திறமைசாளிகள்  இருப்பதால் பெரிதும் பயனடைந்துள்ளன.

வைபவ் மாநாடு  மூலம், நாங்கள் உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறோம். நீங்கள் இணைத்துக் கொள்ள மற்றும் பங்களிக்க ஒரு வாய்ப்பு. உங்கள் முயற்சிகள் இந்தியாவிற்கும், உலகிற்கும் உதவும்.  இந்தியா முன்னேறும் போது, உலகமும் முன்னேறிச் செல்கிறது. இந்த பரிமாற்றங்கள் நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். உங்கள் முயற்சிகள் ஒரு சிறந்த ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உதவும். இது பாரம்பரியத்தை, நவீனத்துவத்துடன் இணைக்கும். இது நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு இந்தியாவில் உள்நாட்டில் தீர்வுகளை வழங்கும். இது மற்றவர்களுக்கு செழிப்பை உருவாக்கும். இந்தியா சிறந்த  தொழில்நுட்பங்களை உருவாக்க  இது உதவும்.

நண்பர்களே,

மகாத்மா காந்தியின் பிறந் நாளில் நாம் சந்திக்கிறோம். அவர் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, 1925ல், திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில், பேசிய விஷயம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அறிவியலின் முன்னேற்றம் மற்றும் பலன்கள், இந்தியாவின் கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என அவர் விரும்பினார். 1929 இல், அவர் தனித்துவமான ஒன்றை முயற்சித்தார். இலகுரக  இராட்டை வடிவமைப்பதற்கான வழிகளை அவர் நாடினார். கிராமங்கள், இளைஞர்கள், ஏழைகள் மீதான அவரது அக்கறையும், அதிக அளவிலான  மக்களை அறிவியலுடன் ஒருங்கிணைப்பதற்கான அவரது தொலைநோக்கும்  நமக்கு ஊக்கமளிக்கிறது. இன்று, இந்தியாவின் மற்றொரு பெருமைமிக்க மகனை அவரது பிறந்தநாளில் நினைவில் கொள்கிறோம். நமது முன்னாள் பிரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரி . அவரது பணிவு, எளிமை மற்றும் சிறந்த தலைமை ஆகியவற்றை நாங்கள் நினைவில் கொள்கிறோம்.

நண்பர்களே,

உங்கள் கலந்துரையாடல்  சிறக்க, நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். இந்த வைபவ் மாநாடு முழு வெற்றி பெற நாம் பணியாற்றுவோம் என்று உறுதி அளிக்கிறேன். எனது உரையை முடிப்பதற்கு முன், நீங்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறுகிறேன்.

நன்றி.

****************