Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சண்டிகரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

சண்டிகரில் இன்று நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். சுமார் 30,000 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் அனைவருடன் இணைந்து யோகா செயல்முறை விளக்கம் செய்து காட்டினார்.

காபிடல் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நம் நாட்டின் அனைத்து பகுதிகளும் இன்று யோகாவால் ஒன்றிணைந்துள்ளது, சர்வதேச யோகா தினம் என்ற முயற்சிக்கு உலகமே ஆதரவு தெரிவித்துள்ளது என்று கூறினார். மேலும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் இந்த முயற்சியில் ஒன்றிணைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச யோகா தினம் என்பது நல்ல உடல் நலத்தை குறிக்கும் தினமாகும். இன்று இது பெரிய மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. யோகா என்பது ஒருவரால் எதை பெற முடியும் என்பதல்ல, அது ஒருவரால் எதை விட முடியும் என்பது. ஒரு செலவும் இல்லாமல் யோகா அனைவருக்கும் உடல் நலத்தை உறுதி செய்கிறது. இது பணக்காரன் ஏழை என்ற எந்த பாகுபாடும் பார்க்காது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

“யோகாவால் நீரிழிவு நோயை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?” என்று அடுத்த ஒரு வருடத்திற்கு நம் கவனம் இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். யோகாவை பிரபலப்படுத்த முயற்சி செய்பவர்களை கவுரவப்படுத்துவதற்காக இரண்டு விருதுகள் வழங்கப்படும். இதில் ஒன்று தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அளிக்கப்படும்.

இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்து அளவளாவினார்.