பூடான் மன்னர் மேதகு ஜிக்மே கேசர் நம்க்யேல் வாங்க்சக்-வுடன் பிரதமர் மோடி இன்று தொலை பேசியில் பேசினார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பூடான் மன்னர் வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவித்த பிரதமர், பூடான் மன்னருக்கும், முன்னாள் மன்னர் மற்றும் அரச குடும்ப உறுப்பினரகள் பற்றியும் நலம் விசாரித்து தனது அன்பைத் தெரிவித்தார்.
அண்டை நாடுகளாகவும், நட்பு நாடுகளாகவும் இருக்கும் இந்தியா-பூடான் இடையே நிலவும் தனிச்சிறப்பான பிணைப்பு மற்றும் நம்பிக்கை குறித்து இரு தலைவர்களும் பேசினர். இந்த சிறப்பு நட்பை வளர்ப்பதில், பூடான் மன்னர் வழிகாட்டியாக இருப்பதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
பூடானில் கொவிட்-19 நிலைமையை திறம்பட சமாளித்ததற்கு, பிரதமர் தனது பாராட்டை தெரிவித்தார். மேலும், கொவிட் நிலைமையை சமாளிக்க, பூடானுக்கு தேவையான உதவிகளை அளிப்பதற்கு, இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் திரு.நரேந்திர மோடி உறுதியளித்தார்.
இருதரப்புக்கும் சாதகமான தேதியில், பூடான் மன்னர் மற்றும் அவரது குடும்பத்தினர், இந்தியா வரும்படியும், பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
*******************
His Majesty the King of Bhutan writes a letter to the Prime Minister, Shri @narendramodi on his birthday. pic.twitter.com/q1Y3YjEQey
— PMO India (@PMOIndia) September 17, 2020