Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசால் புதுப்பிக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கம் இலங்கை மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது


இந்திய அரசால் புதுப்பிக்கப்பட்ட, இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள துரையப்பா விளையாட்டரங்கை பிரதமர் திரு நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் திரு மைத்ரிபால சிரிசேனாவும் நாளை (சனிக்கிழமை) காலை கூட்டாக சேர்ந்து இலங்கை மக்களுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்கள். பிரதமர் திரு நரேந்திர மோடி, புது தில்லியில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் இந்த விளையாட்டு அரங்கு அர்ப்பணிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

துரையப்பா விளையாட்டரங்கம், யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயர், மறைந்த ஆல்பிரட் தம்பிராஜ் துரையப்பாவின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த விளையாட்டரங்கம் ரூ 7 கோடி செலவில் இந்திய அரசால் புதுப்பிக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கில் 1850 பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாண இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் கேளிக்கை நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த தேவையான கட்டமைப்பு வசதிகளை தருவதுடன், ஒட்டு மொத்த மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் தேவையான வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த விளையாட்டரங்கம் 1997 முதல் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

புதுப்பிக்கப்பட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் முதல் பெரும் நிகழ்ச்சியாக இரண்டாவது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை பிரதமர் மோடியும் இலங்கை அதிபர் சிரிசேனாவும் காண்பார்கள். இந்த யோகா செயல்விளக்க நிகழ்ச்சியில் சுமார் 8000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.