Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இடுக்கியின் ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் இறந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை அறிவித்தார்


இடுக்கியின் ராஜமலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், “இடுக்கியின் ராஜமலையில் நிலச்சரிவால் உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்து வேதனையடைந்துள்ளேன். இந்தத் துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குறித்தே நான் சிந்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர,” என்று தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-ம் வழங்கப்படும் என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

***