புதுதில்லி, ஆகஸ்ட் 05, 2020
அயோத்தியில் `ஸ்ரீராம் ஜன்மபூமி மந்திரில்’ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பூமி பூஜை நடத்தினார்.
இந்தியாவின் பெருமைக்குரிய அத்தியாயம்
நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர், இந்தப் புனிதமான தருணத்தில் நாட்டு மக்களுக்கும், உலகெங்கும் உள்ள ராம பக்தர்களுக்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டார். இது வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வு என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவில் இன்றைக்குப் பெருமைக்குரிய ஒரு சகாப்தம் தொடங்கியுள்ளதாகக் கூறினார். பல நூற்றாண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு, இறுதியில் லட்சியத்தை எட்டியது குறித்து நாடு முழுவதிலும் உள்ள மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன், மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். தங்கள் வாழ்நாளில் இந்த நிகழ்வு நடப்பதை சிலரால் நம்ப முடியவில்லை. உடைப்பு, மறுபடி கட்டுவது என்ற சுழற்சிகளில் இருந்து ராம் ஜன்மபூமி விடுதலை பெற்றுள்ளது என்றும், கூடாரங்கள் இருந்த இடத்தில் இப்போது பிரமாண்டமான ராம்லாலா கோவில் கட்டப்படுகிறது என்றும் கூறினார்.
சுதந்திரப் போராட்டத்தில் நாடு முழுக்க பலரும் செய்த தியாகங்களை நினைவுகூர்வதாக ஆகஸ்ட் 15ஆம் தேதி இருப்பதைப் போல, ராம் மந்திருக்காக பல தலைமுறைகளாகத் தொடர்ந்து நடந்த போராட்டங்கள் மற்றும் தீவிர அர்ப்பணிப்புகளின் அடையாளமாக இன்றைய நாள் இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். ராம் மந்திர் என்ற கனவை நனவாக்குவதற்காகப் போராடிய அனைவரின் பங்களிப்பையும் பிரதமர் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினார்.
ஸ்ரீராம் – நமது கலாச்சாரத்தின் அடித்தளம்
ஸ்ரீராமரின் இருப்பையே பலர் கேள்விக்கு உள்ளாக்கிய நிலையில், நமது கலாச்சாரத்தின் அடித்தளமாக ஸ்ரீராமர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறார். நமது கலாச்சாரம், காலவரையறைகளைக் கடந்த நம்பிக்கை, தேசிய உணர்வு, கூட்டு மன உறுதி ஆகியவற்றின் நவீன அடையாளமாக ராம் மந்திர் இருந்து அடுத்து வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் கூறினார். பல்வேறு துறைகளில் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார நிலையை மாற்றக் கூடியதாகவும் இந்தக் கோவில் உருவாக்கும் பணி அமையும் என்று அவர் தெரிவித்தார்.
கோடிக்கணக்கான ராம பக்தர்களின் நம்பிக்கைக்கும், உறுதிக்கும் கிடைத்த வெற்றியின் சாட்சியாக இந்த நாள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது, அனைவருடைய உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், அனைத்துத் தரப்பு மக்களும் காட்டிய கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டு உணர்வுகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அதேபோன்ற கண்ணியமும், கட்டுப்பாடும் இன்றைக்கும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீராமரின் வெற்றி, கோவர்த்தன மலையை தூக்கிய ஸ்ரீகிருஷ்ணர், சத்ரபதி சிவாஜி சுயராஜ்யத்தை ஏற்படுத்தியது, சுதந்திரப் போராட்டத்தை காந்திஜி முன்னின்று நடத்தியது போன்ற சிறப்புக்குரிய விஷயங்களில், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், மலைவாழ் மக்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் முக்கியமான பங்கு வகித்துள்ளனர் என்பதை பிரதமர் நினைவுகூர்ந்தார். அதேபோல சாதாரண குடிமக்களின் உதவியுடனும், பங்களிப்புடனும் ராம் மந்திர் கட்டும் பணி தொடங்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீராமரின் சிறப்பு குணங்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், எப்போதும் உண்மையின் பக்கமாக ஸ்ரீராமர் நின்றார் என்றும், தனது ஆட்சியில் சமூக நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் அளித்தார் என்றும் தெரிவித்தார். தன் ஆட்சியில் அனைத்து உயிர்களையும் சமமாக மதித்தார். ஏழைகள், உதவி தேவைப்படுவோர் மீது விசேஷமான அன்பு காட்டினார். ஸ்ரீராமரின் வாழ்வில் நமக்கு உத்வேகம் தராத செயல்பாடு எதுவுமே கிடையாது. நாட்டின் கலாச்சாரம், தத்துவம், நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் பல அம்சங்களில் அவருடைய தாக்கத்தைக் காண முடிகிறது என்றும் பிரதமர் கூறினார்.
ஶ்ரீராமர்– வேற்றுமையில் ஒற்றுமை காணும் இழை
பண்டைக்காலத்தில் வால்மீகி ராமாயணத்தின் மூலமும், அதன் பின்னர் இடைக்காலத்தில், துளசிதாசர், கபீர், குருநானக் ஆகியோர் மூலமாகவும், அகிம்சை, சத்தியாகிரகம் ஆகியவற்றின் சக்தியாகத் திகழ்ந்த மகாத்மா காந்தியடிகளின் பஜனைகளிலும், ஶ்ரீராமர் மக்களுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்ந்தார் என பிரதமர் கூறினார். ஶ்ரீராமருடன், புத்த பகவானும் தொடர்புடையவர் ஆவார். அயோத்தி நகரம், பல நூற்றாண்டுகளாக சமணர்களின் நம்பிக்கை மையமாக இருந்து வந்தது என அவர் கூறினார். ராமாயணம் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற வகையில், அதனை இணைக்கும் பொது நூலாக ஶ்ரீராமர் இருக்கிறார் என்றார்.
பல்வேறு நாடுகளில் ஶ்ரீராமர் மதிக்கப்படுவதாக பிரதமர் கூறினார். அதிக அளவில் இஸ்லாமியர்களைக் கொண்ட நாடான இந்தோனேசியா மற்றும் கம்போடியா, லாவோஸ், மலேசியா, தாய்லாந்து, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் ராமாயணம் புகழ் பெற்று விளங்குவதாக பிரதமர் பட்டியலிட்டார். ஶ்ரீராமரைப் பற்றிய குறிப்புகள் ஈரான், சீனா ஆகிய நாடுகளில் காணப்படுவதாகத் தெரிவித்தார். இதேபோல, ராமர் கதை பல்வேறு நாடுகளில் வழங்கப்படுவதாக அவர் கூறினார். இந்த அனைத்து நாடுகளையும் சேர்ந்த மக்கள் ராமர் கோவில் கட்டுமானம் இன்று துவங்குவது குறித்து மகிழ்ச்சியாக உணருவார்கள் என அவர் கூறினார்.
மனித குலம் முழுவதற்கும் உத்வேகம்
இந்தக் கோவில் இனி வரும் பல காலங்களுக்கும், மனித குலம் முழுவதற்கும் உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். ஶ்ரீராமர், ராமர் கோவில், நமது பன்னெடுங்காலப் பாரம்பரியம் ஆகியவை குறித்த செய்திகள் உலகம் முழுவதையும் எட்டியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
ராம ராஜ்யம்
மகாத்மா காந்தி கனவு கண்ட ராம ராஜ்யத்தின் வரம்புகள் குறித்து பிரதமர் நினைவு கூர்ந்தார். எவரும் ஏழையாகவோ, மகிழ்ச்சியற்றவராகவோ இருக்கக்கூடாது; ஆண்களும் , பெண்களும் சரிசமமான மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்; விவசாயிகளும், விலங்குகளைப் பாதுகாப்பவர்களும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்; வயதானவர்கள், குழந்தைகள், மருத்துவர்கள் ஆகியோர் பாதுகாக்கப்பட வேண்டும்; தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பது அனைவரின் கடமை; தாய்நாடு சொர்க்கத்தை விட மேலானது; ஒரு நாட்டின் அதிக ஆற்றல், மென்மேலும் அமைதியை நிலைநாட்டுவது என்பன உள்ளிட்ட ஶ்ரீராமரின் போதனைகள் நாட்டை தொடர்ந்து வழிநடத்தி வருகின்றன என அவர் கூறினார். ஶ்ரீராமர் நவீனத்துவத்துக்கும், மாற்றத்துக்கும் உதாரணமாகத் திகழ்கிறார் என்று கூறிய பிரதமர், ஶ்ரீராமரின் இந்த லட்சியங்களைப் பின்பற்றி, நாடு முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார்.
பரஸ்பர அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படை
பரஸ்பர அன்பு மற்றும் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதன் மீது கோவில் கட்டப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அனைவருக்காகவும், அனைவரும் இணைந்து, தன்னம்பிக்கையுடன், தற்சார்பு இந்தியா மூலமாக அனைவரது வளர்ச்சியை நாம் எட்டுவது அவசியம் என்று அவர் கூறினார். எந்த தாமதமும் இல்லாமல் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற ஶ்ரீராமரின் ஆசியுடன் நாடு அதனை பின்பற்றிச் செல்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
கோவிட் காலத்தில் ‘மரியாதை’
கோவிட் சூழலில் , ஶ்ரீராமரின் ‘மரியாதை’ வழியின் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்த பிரதமர், தற்போதைய காலச்சூழல், ‘இருவருக்கும் இடையே கஜ தூரம்’, ‘முகக்கவசம் அவசியம்’ என்பதை வலியுறுத்துகிறது என்று கூறினார். இதை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
*****
बरसों से टाट और टेंट के नीचे रह रहे हमारे रामलला के लिए अब एक भव्य मंदिर का निर्माण होगा।
— PMO India (@PMOIndia) August 5, 2020
टूटना और फिर उठ खड़ा होना,
सदियों से चल रहे इस व्यतिक्रम से रामजन्मभूमि आज मुक्त हो गई है: PM
राम मंदिर के लिए चले आंदोलन में अर्पण भी था तर्पण भी था, संघर्ष भी था, संकल्प भी था।
— PMO India (@PMOIndia) August 5, 2020
जिनके त्याग, बलिदान और संघर्ष से आज ये स्वप्न साकार हो रहा है,
जिनकी तपस्या राममंदिर में नींव की तरह जुड़ी हुई है,
मैं उन सब लोगों को आज नमन करता हूँ, उनका वंदन करता हूं: PM
राम हमारे मन में गढ़े हुए हैं, हमारे भीतर घुल-मिल गए हैं।
— PMO India (@PMOIndia) August 5, 2020
कोई काम करना हो, तो प्रेरणा के लिए हम भगवान राम की ओर ही देखते हैं: PM
आप भगवान राम की अद्भुत शक्ति देखिए।
— PMO India (@PMOIndia) August 5, 2020
इमारतें नष्ट कर दी गईं, अस्तित्व मिटाने का प्रयास भी बहुत हुआ,
लेकिन राम आज भी हमारे मन में बसे हैं, हमारी संस्कृति का आधार हैं: PM
यहां आने से पहले, मैंने हनुमानगढ़ी का दर्शन किया।
— PMO India (@PMOIndia) August 5, 2020
राम के सब काम हनुमान ही तो करते हैं।
राम के आदर्शों की कलियुग में रक्षा करने की जिम्मेदारी भी हनुमान जी की ही है।
हनुमान जी के आशीर्वाद से श्री राममंदिर भूमिपूजन का ये आयोजन शुरू हुआ है: PM
श्रीराम का मंदिर हमारी संस्कृति का आधुनिक प्रतीक बनेगा,
— PMO India (@PMOIndia) August 5, 2020
हमारी शाश्वत आस्था का प्रतीक बनेगा,
हमारी राष्ट्रीय भावना का प्रतीक बनेगा,
और ये मंदिर करोड़ों-करोड़ लोगों की सामूहिक संकल्प शक्ति का भी प्रतीक बनेगा: PM
इस मंदिर के बनने के बाद अयोध्या की सिर्फ भव्यता ही नहीं बढ़ेगी, इस क्षेत्र का पूरा अर्थतंत्र भी बदल जाएगा।
— PMO India (@PMOIndia) August 5, 2020
यहां हर क्षेत्र में नए अवसर बनेंगे, हर क्षेत्र में अवसर बढ़ेंगे।
सोचिए, पूरी दुनिया से लोग यहां आएंगे, पूरी दुनिया प्रभु राम और माता जानकी का दर्शन करने आएगी: PM
राममंदिर के निर्माण की ये प्रक्रिया, राष्ट्र को जोडऩे का उपक्रम है।
— PMO India (@PMOIndia) August 5, 2020
ये महोत्सव है-
विश्वास को विद्यमान से जोड़ने का।
नर को नारायण से, जोड़ने का।
लोक को आस्था से जोड़ने का।
वर्तमान को अतीत से जोड़ने का।
और
स्वं को संस्कार से जोडऩे का: PM
आज का ये दिन करोड़ों रामभक्तों के संकल्प की सत्यता का प्रमाण है।
— PMO India (@PMOIndia) August 5, 2020
आज का ये दिन सत्य, अहिंसा, आस्था और बलिदान को न्यायप्रिय भारत की एक अनुपम भेंट है: PM
कोरोना से बनी स्थितियों के कारण भूमिपूजन का ये कार्यक्रम अनेक मर्यादाओं के बीच हो रहा है।
— PMO India (@PMOIndia) August 5, 2020
श्रीराम के काम में मर्यादा का जैसा उदाहरण प्रस्तुत किया जाना चाहिए, देश ने वैसा ही उदाहरण प्रस्तुत किया है: PM
इसी मर्यादा का अनुभव हमने तब भी किया था जब माननीय सर्वोच्च न्यायालय ने अपना ऐतिहासिक फैसला सुनाया था।
— PMO India (@PMOIndia) August 5, 2020
हमने तब भी देखा था कि कैसे सभी देशवासियों ने शांति के साथ, सभी की भावनाओं का ध्यान रखते हुए व्यवहार किया था ।
आज भी हम हर तरफ वही मर्यादा देख रहे हैं: PM
इस मंदिर के साथ सिर्फ नया इतिहास ही नहीं रचा जा रहा, बल्कि इतिहास खुद को दोहरा भी रहा है।
— PMO India (@PMOIndia) August 5, 2020
जिस तरह गिलहरी से लेकर वानर और केवट से लेकर वनवासी बंधुओं को भगवान राम की विजय का माध्यम बनने का सौभाग्य मिला.. : PM
जिस तरह छोटे-छोटे ग्वालों ने भगवान श्रीकृष्ण द्वारा गोवर्धन पर्वत उठाने में बड़ी भूमिका निभाई,
— PMO India (@PMOIndia) August 5, 2020
जिस तरह मावले, छत्रपति वीर शिवाजी की स्वराज स्थापना के निमित्त बने,
जिस तरह गरीब-पिछड़े, विदेशी आक्रांताओं के साथ लड़ाई में महाराजा सुहेलदेव के संबल बने.. : PM
जिस तरह दलितों-पिछ़ड़ों-आदिवासियों, समाज के हर वर्ग ने आजादी की लड़ाई में गांधी जी को सहयोग दिया,
— PMO India (@PMOIndia) August 5, 2020
उसी तरह आज देशभर के लोगों के सहयोग से राम मंदिर निर्माण का ये पुण्य-कार्य प्रारंभ हुआ है.. : PM
जैसे पत्थरों पर श्रीराम लिखकर रामसेतु बनाया गया, वैसे ही घर-घर से,गांव-गांव से श्रद्धापूर्वक पूजी शिलाएं, यहां ऊर्जा का स्रोत बन गई हैं।
— PMO India (@PMOIndia) August 5, 2020
देश भर के धामों और मंदिरों से लाई गई मिट्टी और नदियों का जल, वहां के लोगों,वहां की संस्कृति और वहां की भावनाएं,आज यहां की शक्ति बन गई हैं: PM
श्री रामचंद्र को तेज में सूर्य के समान,
— PMO India (@PMOIndia) August 5, 2020
क्षमा में पृथ्वी के तुल्य,
बुद्धि में बृहस्पति के सदृश्य.
और यश में इंद्र के समान माना गया है।
श्रीराम का चरित्र सबसे अधिक जिस केंद्र बिंदु पर घूमता है, वो है सत्य पर अडिग रहना।
इसीलिए ही श्रीराम संपूर्ण हैं: PM
श्रीराम ने सामाजिक समरसता को अपने शासन की आधारशिला बनाया था।
— PMO India (@PMOIndia) August 5, 2020
उन्होंने गुरु वशिष्ठ से ज्ञान,
केवट से प्रेम,
शबरी से मातृत्व,
हनुमानजी एवं वनवासी बंधुओं से सहयोग और
प्रजा से विश्वास प्राप्त किया।
यहां तक कि एक गिलहरी की महत्ता को भी उन्होंने सहर्ष स्वीकार किया: PM
उनका अद्भुत व्यक्तित्व,
— PMO India (@PMOIndia) August 5, 2020
उनकी वीरता, उनकी उदारता
उनकी सत्यनिष्ठा, उनकी निर्भीकता,
उनका धैर्य, उनकी दृढ़ता,
उनकी दार्शनिक दृष्टि युगों-युगों तक प्रेरित करते रहेंगे।
राम प्रजा से एक समान प्रेम करते हैं लेकिन गरीबों और दीन-दुखियों पर उनकी विशेष कृपा रहती है: PM
जीवन का ऐसा कोई पहलू नहीं है, जहां हमारे राम प्रेरणा न देते हों।
— PMO India (@PMOIndia) August 5, 2020
भारत की ऐसी कोई भावना नहीं है जिसमें प्रभु राम झलकते न हों।
भारत की आस्था में राम हैं, भारत के आदर्शों में राम हैं!
भारत की दिव्यता में राम हैं, भारत के दर्शन में राम हैं: PM
हजारों साल पहले वाल्मीकि की रामायण में जो राम प्राचीन भारत का पथप्रदर्शन कर रहे थे,
— PMO India (@PMOIndia) August 5, 2020
जो राम मध्ययुग में तुलसी, कबीर और नानक के जरिए भारत को बल दे रहे थे,
वही राम आज़ादी की लड़ाई के समय बापू के भजनों में अहिंसा और सत्याग्रह की शक्ति बनकर मौजूद थे: PM
आज भी भारत के बाहर दर्जनों ऐसे देश हैं जहां, वहां की भाषा में रामकथा, आज भी प्रचलित है।
— PMO India (@PMOIndia) August 5, 2020
मुझे विश्वास है कि आज इन देशों में भी करोड़ों लोगों को राम मंदिर के निर्माण का काम शुरू होने से बहुत सुखद अनुभूति हो रही होगी: PM
हमें ये भी सुनिश्चित करना है कि भगवान श्रीराम का संदेश, राममंदिर का संदेश, हमारी हजारों सालों की परंपरा का संदेश, कैसे पूरे विश्व तक निरंतर पहुंचे।
— PMO India (@PMOIndia) August 5, 2020
कैसे हमारे ज्ञान, हमारी जीवन-दृष्टि से विश्व परिचित हो, ये हमारी, हमारी वर्तमान और भावी पीढ़ियों की ज़िम्मेदारी है: PM
राम समय, स्थान और परिस्थितियों के हिसाब से बोलते हैं, सोचते हैं, करते हैं।
— PMO India (@PMOIndia) August 5, 2020
राम हमें समय के साथ बढ़ना सिखाते हैं, चलना सिखाते हैं।
राम परिवर्तन के पक्षधर हैं, राम आधुनिकता के पक्षधर हैं।
उनकी इन्हीं प्रेरणाओं के साथ, श्रीराम के आदर्शों के साथ भारत आज आगे बढ़ रहा है: PM
प्रभु श्रीराम ने हमें कर्तव्यपालन की सीख दी है, अपने कर्तव्यों को कैसे निभाएं इसकी सीख दी है!
— PMO India (@PMOIndia) August 5, 2020
उन्होंने हमें विरोध से निकलकर, बोध और शोध का मार्ग दिखाया है!
हमें आपसी प्रेम और भाईचारे के जोड़ से राममंदिर की इन शिलाओं को जोड़ना है: PM
मुझे विश्वास है कि श्रीराम के नाम की तरह ही अयोध्या में बनने वाला ये भव्य राममंदिर भारतीय संस्कृति की समृद्ध विरासत का द्योतक होगा।
— PMO India (@PMOIndia) August 5, 2020
मुझे विश्वास है कि यहां निर्मित होने वाला राममंदिर अनंतकाल तक पूरी मानवता को प्रेरणा देगा: PM
हमें ध्यान रखना है, जब जब मानवता ने राम को माना है विकास हुआ है, जब जब हम भटके हैं विनाश के रास्ते खुले हैं!
— PMO India (@PMOIndia) August 5, 2020
हमें सभी की भावनाओं का ध्यान रखना है।
हमें सबके साथ से, सबके विश्वास से, सबका विकास करना है: PM
मुझे विश्वास है, हम सब आगे बढ़ेंगे, देश आगे बढ़ेगा!
— PMO India (@PMOIndia) August 5, 2020
भगवान राम का ये मंदिर युगों-युगों तक मानवता को प्रेरणा देता रहेगा, मार्गदर्शन करता रहेगा: PM