Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டோஹாவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் பிரதமர் ஆற்றிய உரை

டோஹாவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் பிரதமர் ஆற்றிய உரை

டோஹாவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் பிரதமர் ஆற்றிய உரை


ஞாயிற்றுக்கிழமை மாலை ஜெனீவா புறப்படும் முன் பிரதமர் திரு நரேந்திர மோடி டோஹாவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடினார்.

அங்கு கூடியிருந்த இந்திய சமூகத்தினரிடையே பேசிய பிரதமர், அவர்கள் எப்போதுமே இந்தியாவுடன் இணைந்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டார். சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்தியா மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இது, இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களால் கொண்டு வரப்பட்ட மாற்றமாகும் என்று பிரதமர் கூறினார்.

உலகளவில் வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரத்தில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது என்பதை சர்வதேச முகமைகள் ஒப்புக்கொண்டுள்ளன. சர்வதேச அளவில் பொருளாதார சந்தை மந்தமாக இருந்தாலும், கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி சதவீதம் (ஜி.டி.பி) 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நீண்டகாலமாக இந்தியா ஊழலால் பாதிப்படைந்துள்ளது. எனது அரசு அதனை ஒழிக்க தீர்மானமாக உள்ளது.

என்னுடைய கத்தார் பயணம் மிகவும் இனிமையாக அமைந்தது. இருநாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவு மேலும் வலுவாகியுள்ளது. என்னுடைய பயணத்தின் போது எனக்கு அளிக்கப்பட்ட அருமையான வரவேற்புக்காக கத்தார் அரசுக்கும், மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.

***